புதன், 19 டிசம்பர், 2012

மமக வின் சார்பில் மது-மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரை யுத்தம் நாளை தொடங்குகிறது.மமக வின் சார்பில் மது-மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரை யுத்தம் நாளை தொடங்குகிறது. சென்னையில் மமக தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் பரப்புரையை தொடங்கி வைக்கிறார்கள். 
இணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீது அவர்களும்என்னில் பங்கு பெறுகிறார்கள். தென்சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் சிறப்பு அழைப்பாளராக தோழர் நல்லகண்ணு அவர்கள் கலந்து கொள்கிறார்கள். 
வடசென்னை வில்லிவாக்கத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் கலந்து கொள்கிறார்கள். 
கிழக்கு மண்டலம் நாகப்பட்டினத்தில் பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவண பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். 
மேற்கு மண்டலம் சேலத்தில் தமுமுக பொதுச்செயலாளர் P. அப்துல் சமது அவர்கள் தொடங்கி வைக்கிறார்கள்.
 மத்திய மண்டலம் திருச்சியில் துணைத்தலைவர் குணங்குடி ஆர்.எம். ஹனிபா அவர்கள் தொடங்கி வைக்கிறார்கள். 
அனைத்து மாவட்ட தலைநகரங்கள், பெருநகரங்களில் நாளை பரப்புரை தொடங்குகிறது. வீதி முனை கூட்டங்கள், வாகன பரப்புரைகள், சுவரெழுத்துக்கள், சுவரொட்டிகள், துண்டு அறிக்கைகள், மது எதிர்ப்பு முழக்கங்கள், குறுந்தகடு பரப்புரை, ஊடக விளம்பரங்கள் என 8 வடிவங்களில் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. பரப்புரையில் பயன்படுத்தப்படும் சில வடிவங்களை கீழே காணலாம்.