சனி, 2 பிப்ரவரி, 2013

கமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

(விஸ்வரூபம் பற்றி பிரபல எழுத்தாளர் சாருநிவேதிதா எழுதிய கட்டுரை.இப்படி எழுதிய இவரும் இன்றுமுதல் ஒருவேளை கலாசாரதீவிரவாதி என்று அழைக்கப்படலாம்....)
 

விஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன். அதற்குப் பல காரணங்கள். கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும் ஒரு காரணம். இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன். அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது ...என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது. என்னை எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம். ஆனால் இதையெல்லாம் மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்ற இரண்டு படங்களுக்கும் நான் உயிர்மையில் எழுதியுள்ள விமர்சனங்களே விஸ்வரூபம் படத்துக்கும் பொருந்தும். தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ கமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதை நான் விரிவாக என் மதிப்புரைகளில் உயிர்மையில் எழுதியிருக்கிறேன். விஸ்வரூபத்தில் அந்த இஸ்லாமிய விரோதம் உச்சக் கட்டத்தில் உள்ளது. நான் ஆஃப்கானிஸ்தானைப் பற்றித்தானே எடுத்தேன் என்பதெல்லாம் வாதம் ஆகாது. அல் குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும் non muslims-க்கு என்ன தோன்றும்? அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்? இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள்? அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள். ஆனால் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்தில் குண்டு போடுகிறார்கள் என்றால் அது பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும்? கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன? ஒரு மதத்தை அவமானப்படுத்துவதும், கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பதும்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் அதைத் தடை செய்வதும் சரிதான். கருத்துச் சுதந்திரத்தை விட மனித உயிர்கள் உயர்வானவை. பொறுப்பு (Responsibility) இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது. அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது.

இதற்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை. ஒரு எழுத்தாளன் என்பவன் கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன். நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதினால் நான் பெண்ணாக மாறியாக வேண்டும். அந்தப்படியே விஸ்வரூபத்தை நான் ஒரு இஸ்லாமியனாகவே பார்த்தேன். அப்படிப் பார்த்த போது அது என்னை மிகவும் கேவலப்படுத்தியது. வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பை அள்ளி வீசியது. சிறு குழந்தைகள் கூட கை விரல்களால் துப்பாக்கி பிடித்தபடி சுடுகிறார்கள் படத்தில். ஆனால் அமெரிக்கா ஈராக்கையும் ஆஃப்கனிஸ்தானையும் சுடுகாடு ஆக்கியது பற்றி விஸ்வரூபத்தில் எதுவுமே இல்லை. ஏதோ அமெரிக்க ஏஜண்ட் எடுத்தது போல் இருக்கிறது. ஆஃப்கனிஸ்தானில் கை இழந்த கால் இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கான பேர் இருக்கிறார்கள். அமெரிக்க குண்டு வீச்சினால் என் ஐந்து வயது குழந்தைக்கு கை கால் போனால் என் மனநிலை எப்படி இருக்கும்? நினைத்துப் பாருங்கள். ஆஃப்கனிலும் ஈராக்கிலும் அப்படி உடல் உறுப்புகளை இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கானோர்.

விஸ்வரூபத்தைப் போல் இதுவரை ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி உள்ளன. ஒரு வியாபார மசாலா சினிமாவை இங்கே ஏதோ ஒரு மகத்தான கலைப் படைப்பைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம். மகாநதி போன்ற ஒரு படத்தைக் கொடுத்த ஒருவர் இப்படி மாறிப் போனது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது…


தகவல் :http://charuonline.com/blog/?p=167


கற்பனையை கருத்தாக்கி காட்சியாக்கி காசுபார்க்கும் கூட்டமே குவாண்டமொவின் குரூரத்தை காட்டமுடியுமா

 

குவாண்டனமோ சிறை! உலகில் நடக்கும் ஒட்டு மொத்த சிறைக் கொடுமைகளை ஒரே இடத்தில் நிகழ்த்தும் சிறைக்கூடம். குவாண்டனமோ பே சிறை என்று அழைக்கப்படும் இந்த சித்திரவதைக் கூடத்தை கியூபாவிற்கு அருகில் கட்டி வைத்திருக்கிறது அமெரிக்கா!
குவாண்டனமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரில் பெரும்பாலானோர் நிரபராதிகள்தான்! இது அமெரி...
க்காவிற்கு தெரியும் என்கிறது விக்கி லீக்ஸ்.

குவாண்டனமோ சிறைச்சாலையில் கைதிகள், தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டவர்கள் அடித்துத் துவைக்கப்படும், கொடூரமான முறையில் துன்புறுத்தப் படும் செயல்கள் வரலாற்றாசிரியர்களால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவையே விசாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பிராண்டன் நீலி, பயங்கரவாதிகளை "உரிய" முறையில் விசாரித்து உண்மையைக் கொண்டு வரும் ஆர்வமுள்ளவர். குவாண்டனமோ சிறைச்சாலை தனது முதல் கைதியை வரவேற்றபோதே அங்கு பணியில் அமர்த்தப் பட்டவர். "பெரும் பயங்கரவாதிகளை எதிர்நோக்கியிருந்த தனது ஆவலும் எதிர்பார்ப்பும், குவாண்டமோவினுள் கொண்டு வரப்படும் அப்பாவிகளைக் கண்டு பொய்த்து விட்டது" என்று கூறுகிறார் நீலி.

ங்கு அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் ஆப்கானைச் சேர்ந்த 89 வயது கிராமவாசியும், 12 வயது சிறுவன் ஒருவனும் அடங்குவர். 89 வயது முதியவர் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால்…. அவரது விட்டு வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான தொலைபேசி எண்கள் அடங்கிய குறிப்பு கிடந்தது என்பதுதான்! இதேபோல, உள்ளூர் தாலிபான் தலைவர்களைப் பற்றி தெரிந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் அந்த 12 வயது சிறுவனை கைது செய்து இந்தச் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கைதிகள் ஒரு கட்டத்தில் கடும் மனநிலை பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். பலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும், இன்னும் பலரோ தற்கொலை முயற்சிகளைக் கூட மேற்கொண்டுள்ளனர். அந்த அளவிற்கு கடும் சித்திரவதைகள் இங்கு நடந்துள்ளன.
கைதிகளை நிர்வாணமாக்கி நாய்களை ஏவி, அவர்களை கடித்துக் குதற வைத்துள்ளனர் சிறை அதிகாரிகள். தீவிரவாதிகளை விசாரணை செய்கின்றோம் என்கிற பெயரில் அவர்களை பல வகையான, கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வருகின்றது அமெரிக்கா.தண்ணீரில் மூழ்கடித்தல், கைதிகளின் அறைகளில் pepper spray அடித்து மூச்சி திணறடிப்பது, மூக்கின் வழியாக திரவத்தை பலமுறை செலுத்தி மயக்கமடைய செய்வது, ஆடையின்றி நிர்வாணமாக்குதல், முகத்தை பல நாட்களுக்கு மூடி வைத்தல், கேவலமான பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்குதல் போன்ற சித்திரவதை பட்டியலில் தற்பொழுது இசையும் சேர்ந்து கொண்டது.

கைதிகளை சித்திரவதை செய்வதற்கான ஒரு முறையாக, இடைவிடாது இசையை கைதிகளின் செவி கிழியும் சத்தத்திற்கு சற்று குறைவான சத்தத்தில் கிட்டத்தட்ட 72 மணிநேரம் இசைக்க வைக்கின்றனர். இந்த சித்திரவதைக்காக அமெரிக்காவின் பிரபல இசைக்குழுவினரின் இசை பயன்படுத்துவது தெரிந்ததை அடுத்து அந்த இசைக்குழுவினர் அமெரிக்க அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.குவாண்டானமோ பே, டிக் சென்னியின் அமெரிக்காவாக இருக்கலாம், ஆனால் என்னுடைய அமெரிக்கா இதுவல்ல, என்னுடைய இசை மனிதர்களை சித்திரவதை செய்வதற்காக பயன்படுத்தப்படுவது என்னை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது என்று Race against Machines இசைக் குழுவின் Morello கூறினார்.

, அநீதியையும் அராஜகத்தையும் மட்டுமே செய்யும் அமெரிக்க வெட்கமே இல்லாமல் மனித உரிமை குறித்து பேசுவது அயோக்கியத்தனம் என்றால் பாதிக்கப்பட்ட சமூகத்தையே பயங்கரவாதிகளாக மக்களை நம்பவைக்கும் சினிமாவும் ஊடகங்களும் அதைவிட கேவலமான பிறவிகள் தானே?




நடுநிசி தீர்ப்பு! புறக்கணிக்கப்படும் நியாயம்!

 
 
சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு எதிரான வழக்குகள் இந்தியாவில் உடனே முடிக்கப்பட்டு இதுபோல் இரவோடு இரவாக தீர்பளிக்கப்படும்.
அதே நேரம் பாபர் மசூதியை இடித்து இந்தியாவில் பல்வேறு மதக்கலவரங்களை ஏற்ப்படுத்தி, தொடர் குண்டு வெடிப்புகளில் பங்கு கொண்ட ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு எதிராக ஊடகங்களும், நீதி துறையும், அரசு இயந்திரங்களும் மவுனம்காக்கும்.
 
இந்தியாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் நிரூபிக்கப்பட்டடு, உள்துறை அமைச்சர் நேரிடையாக குற்றம் சுமத்திய பின்னரும் கூட அந்த இயக்கங்களை தடை செய்ய முடியவில்லை. சம்மந்தப்பட்ட இயக்கங்கள் தங்களை தடை செய்து பாருங்கள் என்ன நடக்கும் என்று சவால் விடுகின்றன. ஆனால் முதுகெலும்பில்லாத காங்கிரஸ் அரசோ மவுனம் காக்கிறது. இதை பற்றி எல்லாம் கமலஹாசன் படம் எடுக்க மாட்டார்.
 
சமகாலத்தில், கண்முன்னே நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் ஹிந்துத்துவாவினர் கைது செய்யப்பட்டு, அவர்கள் RSS மற்றும் பாரதிய ஜனதாவுடன் தொடர்புடையவர்கள் என்பதும் நிருபனம் ஆகிவிட்டது. மேலும், அவர்கள காடுகளில் பயிற்சி எடுத்த முகாம்களை தேசிய புலனாய்வு துறையினர் தேடி வருகின்றனர். இத்தருணத்தில் கமலஹாசனும், தினமலர், தினமணி வகைறாக்களும் அதை பற்றி எழுதாமல், பேசாமல், ஆப்கானிஸ்தானில் நடக்கும் பயங்கரவாதம் குறித்து பேசுவது ஏன்?
 
சித்தாந்த ரீதியாக தாங்கள் ஆதரிக்கும் கொள்கைக்கு வலுசேர்க்க, RSS, ஹிந்துத்துவா இயக்கத்தினர் செய்த பயங்கரவாத செயல்களை மறைக்க என்று எடுத்து கொள்ளலாமா? உள்நாட்டில் ஹிந்துத்துவா தீவிரவாதம் நிகழ்த்திய கலவரங்களையும், குண்டு வெடிப்புகளையும், கூட்டு படுகொலைகளையும் பற்றி விஜயக்காந்த், அர்ஜூன், கமலஹாசன் போன்றோர் இதுவரை ஒருபடமாவது எடுத்ததுண்டா? விஸ்வரூபத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மறைமுகமாக ஹிந்துத்துவாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களே!
எங்கே போனது கருத்து சுதந்திரம்:
 
1). பர்ஸானியா திரைப்படம்: இது குஜராத் கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். இது கமலின் விஸ்வரூபம் போல் இல்லாமல் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இந்த படத்தை குஜராத்தில் வெளியிட முடியாமல் தடை செய்யப்பட்டது.
 
2). DAM 999 திரைப்படம்: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டுடன் டேம் 999 திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதாக எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக தடை செய்யப்பட்டது.
 
3). விருமாண்டி திரைப்படம்: இந்த படத்திற்கு முதலில் சண்டியர் என்றுதான் பெயர் வைக்கப்பட்டது. டாக்டர். கிருஷ்ணாசாமியின் எதிர்ப்பு காரணமாக இந்த படத்தின் பெயர் விருமாண்டி என்று மாற்றப்பட்டது.
 
4). கீதை திரைபடம்: விஜய் நடித்த கீதை படம் எதிர்ப்பின் காரணமாக புதிய கீதை என்று மாற்றப்பட்டது. படத்துக்கு திருச்சி, மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் விஜயை கிருஷ்ணர் வேடத்தில் சித்தரித்திருந்தனர் என்று இந்து முன்னணி, சிவசேனா ஆகிய அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களை கிழித்தனர்.

5). பாபா திரைப்படம்: ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தின் பாடல் வரிகள் எதிர்ப்பு சம்மந்தமாக மாற்றப்பட்டது. இந்த படத்துக்கு எதிராக பாமக வினர், ரஜினியின் கொடும்பாவியை எரித்தனர். தியேட்டர்களுக்கு சென்று படத்தை ஓட விடாமல் கலாட்டா செய்தனர். ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தியேட்டரைத் தாக்கி “பாபா” படப்பெட்டியை சிலர் கடத்திச் சென்றனர். விருத்தாசலத்தில் படத்தைத் திரையிட்ட உரிமையாளர் கடத்தப்பட்டார்.
 
6). நடிகை குஸ்பு: இவர் கற்பு பற்றி பேசிய விசயத்தில் அவரின் உருவ படத்தை கொளுத்தி தமிழகத்தின் பல மாவட்ட நீதிமன்றங்களில் இவர் மீது வழக்குகள் தொடர்ந்தனர். பல்வேறு பெண்கள் அமைப்புகள் இவரது உருவப்படத்திற்கு செருப்பு மாலை போட்டு, விளக்கு மாற்றால் அடித்தனர்.
 
7). நடிகை திரிஷா: இவர் சமர் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இந்த காலத்து பெண்கள் மது அருந்துவது அவர்களது சொந்த விருப்பம் நாம் அதில் தலையிடக் கூடாது என்று கருத்து சொன்னார். இதற்க்கு இந்து மக்கள் கட்சியினர் திரிஷா இதற்க்கு மன்னிப்பு கேட்க்க வேண்டும் மீறினால் அவருக்கு மது பாட்டில்களை பார்சலில் அனுப்பி வைப்போம் என்றனர்.
 
8). நடிகை புவனேஸ்வரி: இவர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவர் மேலும் பல நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக சொல்லி நடிகைகளான வினிதா, நளினி, மஞ்சுளா, சீதா, ஸ்ரீப்ரியா, ஷீலா, அஞ்சு ஆகியோரிகளின் லிஸ்டை கொடுத்தார் என தினமலர் படத்தோடு செய்தி வெளியிட்டது. இதை எதிர்த்து நடிகைகளும், நடிகர் சங்கமும் என்று மொத்த திரையுலகமும் எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என்று பிரமாண்டமான போராட்டங்கள் நடத்தினர்.
 
9). ஓவியர் ஹுசைன்: இவர் உலக புகழ் பெற்ற ஓவியர்களில் ஒருவர். இவர் இந்து பெண் தெய்வங்களை ஆபாசமாக படம் வரைந்தார் என்று இவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இவர் மீது 3 மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனால் இவர் நாட்டை விட்டே சென்றார். பின்னர் இவர் மீது தொடரப்பட்ட வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றம் இவர் மீது தொடரப்பட்ட வழக்கு அடிப்படை ஆதாரமற்றது என்று தள்ளுபடி செய்தது.
இது போன்ற பல்வேறு சம்பவங்களை சொல்லலாம், அப்பொழுதெல்லாம் கருத்து சுதந்திரம் பற்றி பேசாத கூட்டம் இன்று சிறுபான்மை மக்கள் என்றதும் கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறது. தமிழ் கலாச்சாரத்திற்கு Living Together அதாவது கல்யாணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது என்கிற மேலை நாட்டு நாகரிகத்தை தந்த அற்புத கலைஞசர்தான் நமது விஸ்வரூபம் தந்தவர்.
 
*தீவிர ஹிந்துத்துவா ஆதரவாளர் நடிகை கவுதமியோடு இணைந்ததும் இவர் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்*

 
*மலர் விழி*
 
 
 
 
 
 
 

பள்ளி சிறுமிக்காக தெருவோரத்தில் அமர்ந்திருந்த அபுதாபி இளவரசர்

புகைப்படம்: பள்ளி சிறுமிக்காக தெருவோரத்தில் அமர்ந்திருந்த அபுதாபி இளவரசரால் பரபரப்பு ஏற்பட்டது.
அபுதாபியின் இளவரசரும், இராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர், செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த இளவரசர் உடனே காரை விட்டு இறங்கி சிறுமியிடம், ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய்? என கேட்டார்.

அதற்கு அச்சிறும், எனது தந்தை அழைத்து செல்ல இன்னும் வரவில்லை, அதனால் தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என பதிலளித்தார்.

உடனே, தனது காரில் இறக்கிவிடுவதாக இளவரசர் கூறினார், அதற்கு சிறுமியே முன்பின் தெரியாத நபர்களிடம் பேசக்கூடாது என தன் தந்தை தெரிவித்ததாக கூறியுள்ளார்.

உடனே உதவியாளர் அச்சிறுமியிடம், இவர் யாரோ அல்ல அபுதாபியின் இளவரசர் என்று கூறினார். அதற்கு சிறுமி, அது எனக்குத் தெரியும். ஆனால் பழக்கமில்லாதவர்களுடன் செல்லக் கூடாது என்று என் தந்தை கூறியுள்ளார் என்றார். 

இதைக் கேட்ட இளவரசர் சிரித்துவிட்டார். சிறுமியின் தந்தை வரும்வரை அவருக்கு துணையாக சாலையோரத்தில் அமர்ந்திருந்தார். 

இளவரசர் சாலையோரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர்.

பள்ளி சிறுமிக்காக தெருவோரத்தில் அமர்ந்திருந்த அபுதாபி இளவரசரால் பரபரப்பு ஏற்பட்டது.
அபுதாபியின் இளவரசரும், இராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர்..., செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த இளவரசர் உடனே காரை விட்டு இறங்கி சிறுமியிடம், ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய்? என கேட்டார்.

அதற்கு அச்சிறும்மி, எனது தந்தை அழைத்து செல்ல இன்னும் வரவில்லை, அதனால் தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என பதிலளித்தார்.

உடனே, தனது காரில் இறக்கிவிடுவதாக இளவரசர் கூறினார், அதற்கு சிறுமியே முன்பின் தெரியாத நபர்களிடம் பேசக்கூடாது என தன் தந்தை தெரிவித்ததாக கூறியுள்ளார்.

உடனே உதவியாளர் அச்சிறுமியிடம், இவர் யாரோ அல்ல அபுதாபியின் இளவரசர் என்று கூறினார். அதற்கு சிறுமி, அது எனக்குத் தெரியும். ஆனால் பழக்கமில்லாதவர்களுடன் செல்லக் கூடாது என்று என் தந்தை கூறியுள்ளார் என்றார்.

இதைக் கேட்ட இளவரசர் சிரித்துவிட்டார். சிறுமியின் தந்தை வரும்வரை அவருக்கு துணையாக சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.

இளவரசர் சாலையோரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர்

"விஸ்வரூபம் திரைப்படத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகாரப்பூர்வ தடை!

 2 Feb 2013

 அபுதாபி:வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அவமதிக்கும் வகையில் நடிகர் கமலஹாசன் இயக்கி தயாரித்துள்ள ‘விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக தடை
...
விதித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய மீடியா கவுன்சில்(என்.எம்.சி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 24-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தடபுடலான சடங்குகளுடன் இத்திரைப்படம் வெளியாக இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இத்திரைப்படத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்புகள் அரசின் காதுகளுக்கு எட்டியதை தொடர்ந்து தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டிருந்தது.

நேற்று முன் தினம் அதிகாரப்பூர்வமாக விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதிப்பதாக தேசிய மீடியா கவுன்சில் அறிவித்தது. இத்திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பு இன்று வெளியாக இருந்த சூழலில் இந்த அறிவிப்பை கவுன்சில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய அரபு அமீரக மீடியா கவுன்சிலின் தலைவர் ஜுமா லீம் கூறியது: இஸ்லாத்தை தீவிரவாதத்துடன் தொடர்படுத்தியுள்ளதால் இத்திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்று கூறினால் தீவிரவாதம் என்று இத்திரைப்படத்தில் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாம் பொறுமையின் மார்க்கமாகும்.ஒரு நிரபராதியை கொலைச் செய்வது உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களை கொலைச் செய்வதற்கு சமம் என்று இஸ்லாம் கூறுகிறது என்று லீம் தெரிவித்தார்.

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும், மலேசியா மற்றும் இந்தியாவின் சில மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தூது இணையத்தளம் : http://www.thoothuonline.com/


"ராஜஸ்தானில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தது திட்டமிட்ட கலவரம்: பி.யு.சி.எல்!

 
2 Feb 2013

பில்வாரா:ஜனவரி 25-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள அஸிந்த், குலாப் புரா ஆகிய கிராமங்களில் சங்க்பரிவார தீவிரவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய வன்முறை திட்டமிட்ட கலவரமாகும் என்று மனித உரிமை அமைப்பான பி.யு.சி.எல்லின் பிரதிநிதி கவிதா ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.
...

இதுக்குறித்து அவர் கூறியது: “பா.ஜ.க எம்.எல்.ஏ ராம்லால் குர்ஜார், மொஹ்ரா பஞ்சாயத்து தலைவர்(சர்பஞ்ச்) ஹர்ஜி ராம் குர்ஜார், குற்ற பின்னணியைக் கொண்ட மான்சூக் குர்ஜார் ஆகியோர் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கினர். போலீஸார் முன்னிலையில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, வி.ஹெச்.பி உறுப்பினர்கள் முஸ்லிம்களின் கடைகளை கொள்ளையடித்து, தீக்கிரையாக்கினர். ஜும்ஆ தொழுகைக்காக முஸ்லிம்கள் மஸ்ஜிதுக்கு சென்றிருந்த வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

ஜனவரி 13-ஆம் தேதி அப்பகுதியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமையில் திரிவேணி சங்கன் பதசஞ்சலன் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது. வி.ஹெச்.பி மற்றும் ஹிந்துத்துவா அமைப்பான தேவ்ஸேனாவின் உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முஸ்லிம் பகுதி வழியாக சென்ற ஊர்வலத்தில் ஹிந்துத்துவா இயக்கத்தினர் ரகளையில் ஈடுபட்டதுடன் உணர்ச்சியை தூண்டும் வகையில் மோசமான வார்த்தைகளை பேசினர். இதற்கு எதிராக முஸ்லிம்கள் போலீசில் புகார் அளித்தனர். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. பின்னர் 23-ஆம் தேதி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பியின் முன்னிலையில் நடந்த அமைதிக் கூட்டத்தில் பிரச்சனைக்கு ஒத்த தீர்ப்பு ஏற்பட்டது.

இப்பகுதியில் முஸ்லிம்கள் பாரம்பரியமாக கொண்டாடி வரும் பராவஃபாத் ஜலூஸ் என்ற நிகழ்ச்சி 25-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது கலவரத்தை தூண்டுவதே ஹிந்துத்துவா சக்திகளின் சதித்திட்டமாகும். அன்றைய தினம் குர்ஜார் அருகில் உள்ள மஹாவீர் போஜன சாலையில் சிறப்பு விருந்தை ஏற்பாடுச் செய்து அனைவரையும் ஹிந்துத்துவா சக்திகள் அழைத்திருந்தனர். சாலைகள் அனைத்தையும் மூடி முஸ்லிம்களின் ஊர்வலத்திற்கு தடைவிதிப்பதே இதன் நோக்கமாகும். இதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் ஊர்வலத்தை கைவிட்டு
போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால், அவ்விடத்திற்கு வந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ராம்லால் குர்ஜார் தலைமையிலான கும்பல் மஸ்ஜித் மீது தாக்குதல் நடத்தினர். போலீஸ் முன்னிலையிலேயே இருபதுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் கடைகளையும், மோட்டார் சைக்கிள்களையும் இவர்கள் தீக்கிரையாக்கினர். ஆனால் எவரது உயிருக்கும் அபாயம் ஏற்படவில்லை.
கடந்த 11 வருடங்களாக அடிக்கடி வகுப்புவாத வன்முறைகள் நிகழும் பகுதியில் போலீஸின் அலட்சியப் போக்கால் மீண்டும் வன்முறை நிகழ்ந்துள்ளது. பெரும்பாலான கலவரங்களில் தொடர்புடைய மான்சூக் குர்ஜார், தலைமையில் அப்பகுதியில் 400 ஆண்டுகள் பழமையான மஸ்ஜித் இடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடக்கும் முன்னர் அப்பகுதிக்கு வருகை தந்த வி.ஹெச்.பியின் தலைவர் பிரவீன் தொகாடியா கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

ராஜஸ்தானில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலையொட்டியே ஹிந்துத்துவா சக்திகள் கலவரத்தை திட்டமிட்டு நடத்தியுள்ளனர் என கருதப்படுகிறது.” இவ்வாறு கவிதா ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.


 
தூது இணையத்தளம் : http://www.thoothuonline.com/


அமெரிக்காவின் கொள்கைகளை முஸ்லிம்களிடம் விளக்குவதில் அரசு தோல்வியடைந்தது – ஹிலாரி கிளிண்டன்!


Hillary clintonவாஷிங்டன்:அமெரிக்காவின் கொள்கைகளை முஸ்லிம் சமூகத்திடம் வெற்றிகரமாக விளக்கம் அளிப்பதில் அமெரிக்க அரசு தோல்வியடைந்துவிட்டது என்று பதவி விலகும் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். இத்தகைய தோல்விகளின் பொறுப்பை தான் ஏற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்காவின் கொள்கைகளையும், நிகழ்ச்சி நிரல்களையும் விளக்கும் விதமான நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டது. அரபு-முஸ்லிம் ஊடகங்கள் பல வேளைகளில் அமெரிக்காவின் கொள்கைகளை விமர்சித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ, பதில் அளிக்கவோ அமெரிக்காவால் இயலவில்லை என்று ஹிலாரி கூறினார்.
 
புதிய வெளியுறவு செயலாளராக டெமோக்ரேடிக் செனட்டர் ஜான் கெர்ரி இன்று பதவி ஏற்பார்.





காவி பயங்கரவாதமும் கதர் பயங்கரவாதமும்

“மதம் என்பது ஆன்மீக ஒடுக்குமுறை வடிவங்களில் ஒன்றாகும். மற்றவர்களுக்காகவே நிரந்தரமாக உழைத்து பெரும் பளுவைச் சுமந்து வறுமையினால் உழன்று தனிமையில் தவித்திருக்கும் கோடிக்கணக்கான மக்களைச் சகல இடங்களிலும் இந்த மதம் என்னும் ஆன்மீக ஒடுக்குமுறை மிக வலுவாகக் கீழே அழுத்திக் கொண்டிருக்கிறது”- வி.இ.லெனின்.
 
இந்துத்துவ காட்டுமிராண்டிகள்
 
1925 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் நாள் விஜயதசமி தினத்தன்று ராஷ்ட்ரிய சுயம் சேவக்சங்- ஆர்.எஸ்.எஸ். நிறுவப்பட்டது. இதை முன்நின்று நிறுவியவர்கள் மராத்திய சித்பவனப் பார்ப்பனர்கள்: டாக்டர் பி.எஸ்.மூஞ்செ, டாக்டர் எல்.வி.பரஞ்சியே, டாக்டர் தால்கர், டாக்டர் எச்.பி.ஹெகட்கெவர், பாபாராவ் சாவர்க்கர்.
babar_masjid_400இந்த பார்ப்பனர்களின் உண்மையான நோக்கம் இந்து ராஜ்ஜியத்தைக் கட்டியமைப்பது; இஸ்லாமியர்களையும், கிருஸ்துவர்களையும் அந்நியர்களாகவும், வந்தேறிகளாகவும் காட்டி அவர்களுக்கு எதிராக கலவரங்களைத் தூண்டிவிடுவது; இந்தியாவில் புரட்சிகரப் போராட்டங்களும் புரட்சிகரக் கருத்துகளும் பரவாமல் தடுத்து, இந்திய தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் சேவை செய்வதே ஆகும்.
 
காங்கிரஸ் கட்சிக்கு எந்த வகையிலும் குறையில்லாமல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு கைக்கூலிகளாய் செயல்பட்டவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்.
 
‘வீர’ சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில்,
 
"எங்களது நேர்மையை மெய்ப்பிக்க அரசாங்கம் எங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தரட்டும். இந்தியாவைக் கட்டி வைத்துள்ள சங்கிலிகளை உடைக்க இங்கிலாந்திடம் விருப்பம் இருக்கிறது என்று மக்களை நம்பவைக்க எங்களை விடுதலை செய்யட்டும். ஆப்கானிஸ்தானிய, துருக்கிய படைகள் வடக்கிலிருந்து படையெடுத்து வருவதைத் தடுத்து நிறுத்த இந்திய இராணுவத்தில் எங்களால் இயன்ற அளவுக்கு ஆட்களைச் சேர்க்கவும், எதிரியுடன் சண்டை போட்டு அவனைத் தோற்கடிக்கவும் எந்தப் போர் முனைக்கும் நாங்கள் இராணுவத்தில் சேர்க்கும் ஆட்களை அனுப்பவும் உறுதிமொழியைத் தந்துள்ளோம். இந்தியாவின் பாதுகாப்புக்கும், இங்கிலாந்தின் வெற்றிக்கும் இராணுவத்தில் தொண்டர்களாகப் பணியாற்றவும் நாங்கள் முன்வருகின்றோம். விடுதலை செய்யுங்கள்; இந்தியாவிற்குக் காலனிய சுயாட்சி வழங்குங்கள்; இந்தியாவின் விசுவாசத்தையும், நேசத்தையும் பெறுங்கள்."
 
1931 இல் இத்தாலிக்குச் சென்று பாசிஸ்ட் முசோலினியை நேரில் சந்தித்த பி.எஸ்.மூஞ்செ பாசிசப் படைகளின் பயிற்சிக் கல்லூரிகளையும் பார்வையிட்டு வந்தார். அதன் விளைவாக 1934 இல் போன்ஸ்லா இராணுவக் கல்லூரியைத் தொடங்கினார் மூஞ்செ. சனாதன தர்மத்தைக் கற்பிக்க மத்திய இந்து இராணுவக் கல்விக் கழகத்தையும் நிறுவினார்.
 
இந்தியாவிலுள்ள முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் கோல்வால்கர் எச்சரிக்கை விடுக்கிறார்:
 
"இரண்டே இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று அவர்கள் தேசிய மரபினத்துடன் ஒன்றிணைந்து, அதன் பண்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது இந்த தேசிய மரபினம் எத்தனை காலம் அனுமதிக்கிறதோ அத்தனை காலம் அவர்கள் இங்கு வாழ்ந்து விட்டு பிறகு இத்தேசிய இனத்தின் சித்தத்தின் படி நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும். சிறுபான்மையினர் பிரச்சனை பற்றிய ஆரோக்கியமான பார்வை இது ஒன்றுதான்."
 
மேலும் தன்னுடைய முதலாளித்துவ அடிவருடித்தனத்தை மெய்பிக்க பாரதிய மஸ்தூர் சபா (பி.எம்.எஸ்) என்ற தொழிற்சங்கத்தை உருவாக்கியது. முதலாளிகளுக்கும் நிர்வாகிகளுக்கும் எதிராக தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்களை முறியடிப்பது, காட்டிக் கொடுப்பது போன்ற செயல்களை இவை உற்சாகத்துடன் செய்து வந்துள்ள‌து.
 
ஆர்.எஸ்.எஸ் தன் வரலாறு நெடுகிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு எதிராக இருந்து வந்துள்ளது.
மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டியதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ்., சிவசேனைக் கும்பல் வெறியாட்டம் நடத்தி பல தாழ்த்தப்பட்ட மக்களைக் கொன்றனர். பல சேரிப்பகுதிகள் தீக்கிரையாக்கப்பட்டன.
 
அம்பேத்கார் கைப்படச் சேகரித்த நூலகம் ஒன்றும் எரித்து அழிக்கப்பட்டது. அதன் பின் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்ததைக் கண்டித்து போராட்டம் நடத்திய தாழ்த்தப்பட்ட மக்களில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
நர்மதை அணைக்கட்டுத் திட்டத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிவாரணத்தைக் கூடத் தராமல் 2 இலட்சம் பழங்குடி மக்களை அவர்களுடைய வீடுகள், கோவில்கள், நிலங்களுடன் தண்ணீரில் அமிழ்த்தினார், ‘மரண‌ வியாபாரி’ நரேந்திர மோடி.
 
1990-ல் அத்வானி ரதயாத்திரை தொடங்கிய போது பஜ்ரங்தள் ஆட்கள் அவருக்குப் பரிசாகத் தங்கள் ரத்தத்தை ஒரு கோப்பையில் வழங்கினர். அதற்குப் பின்னர், 30-10-1990-இல் பாபர் மசூதி மீது தாக்குதல் தொடுப்பதிலும். 06-12-1992-இல் அதைக் தரைமட்டமாக்குவதிலும் முன்னனிப் படையாகச் செயல்பட்டது பஜ்ரங்தளம். 1985 இல் நாடாளுமன்றத்தில் இரண்டே இரண்டு உறுப்பினர்கள் கொண்டிருந்த பா.ஜ.க மிகப் பெரிய வளர்ச்சியடைய ராமஜன்ம பூமி இயக்கமே காரணம்.
 
24-01-1999 அன்று ஒரிஸ்ஸாவில் ஆஸ்திரேலியக் கிறிஸ்தவ சமயப் பணியாளர் கிரகாம் ஸ்டெய்னும் அவரது இரு மகன்களும் எரித்துக் கொல்லப்பட்டனர். அவர்களைக் கொன்ற கொலை வெறிக் கூட்டம் ‘பஜ்ரங் தளம் வாழ்க, தாராசிங் வாழ்க’ என முழக்கமிட்டதை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
 
2002 -இல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரிய மனிதப் படுகொலைகள் நிகழ்த்தப்ப‌ட்டது. உயிருடன் ஆட்கள் கொளுத்தப்பட்டனர்; கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றிலிருந்து சிசுவொன்று வயிற்றைக் கிழித்து வெளியே எடுத்து எரிக்கப்பட்டது. முஸ்லீம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
ஒரிசா கந்தமால் பகுதியில் 2007 டிசம்பர் தொடங்கி 2008-இறுதி வரை கிறித்தவர்கள் மீது இந்து வெறியர்கள் நடத்திய பாசிச பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவிக் கிறித்துவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகினர். வீடுகள், கிராமங்கள் சூறையாடப்பட்டன. ஆயிரக்கணக்கானவர்கள் அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
 
மகாராஷ்டிராவில் மாலோகான், மத்தியப் பிரதேசத்தில் அஜ்மீர், ஆந்திராவில் ஹைதராபத் மெக்கா மசூதி, கோவாவில் மார்காவோ ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவெறி பயங்கரவாதிகளின் கைங்கர்யம் என்ற உண்மையை அம்பலமாக்கி இருக்கின்றது, ஹெட்லைன்ஸ் டுடே என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம். இக்குற்றவாளிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் இடையே நடந்த இரகசிய உரையாடல்களை ஒலி‍ ஒளிபரப்பியிருக்கிறது.
நிலைமை இவ்வாறு இருக்க பார்ப்பனரல்லாத பெரும்பான்மை இந்து மக்கள் குறிப்பாக தலித் மற்றும் பழங்குடியின மக்கள் இந்த மதவாத சத்திகளின் பின்னால் அணிதிரள்வது முற்போக்கு சக்திகளின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 
ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மதவெறி அமைப்புகளுக்கு உண்மையிலேயே இந்துக்கள் மீது பற்றும் பாசமும் இருக்குமானால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை அமுல்படுத்தப் போராடுவார்களா?
கொலை வழக்கில் மாட்டிய ‘காம கேடி’ ஜெயேந்திரனை சங்கரமடப் பொறுப்பில் இருந்து இறக்கி விட்டு அந்த இடத்தில் ஒரு தலித்தை உட்கார வைக்க சம்மதமா?
 
இது போன்ற கேள்விகளை நீங்கள் அவர்களிடம் கேட்க வேண்டும். கேட்டால் ஆர்.எஸ்.எஸ்.இன் உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் இந்துத்துவ வெறிநாய் வெளியே வந்து ‘லொள்’ என்று குரைக்கும். அவர்களின் வேசம் கலையும்.
 
காங்கிரஸ் - பசுத்தோல் போர்த்திய புலி
 
காந்தி கொலையுண்டு இரண்டாண்டுகள் கூட முடியாத நிலையில் 07.10.1949 இல் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் காங்கிரஸில் அடிப்படை உறுப்பினர்களாகச் சேரலாம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. மேலும் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையும் நீக்கப்பட்டது. இதில் முக்கிய பங்காற்றியவர் வல்லபாய் பட்டேல் ஆவர்.
 
காங்கிரஸ் - ஆர்.எஸ்.எஸ். உறவு பட்டேலுடன் நிற்கவில்லை. நேருவின் கடைசிக் காலத்திலேயே மத்திய அரசாங்க அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி காங்கிரசுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் இடையே சுமுகமான உறவை உருவாக்க முயன்றார். அவரது முயற்சி காரணமாகவே 1963 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த குடியரசு நாள் அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும் பங்கேற்கச் செய்யப்பட்டனர்.
 
காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே, மதன்லால் பாஹவா, விஷ்ணு கர்கரே ஆகியோர் 12.1.01964 அன்று மத்திய அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று மகாராஷ்டிர அரசாங்கம் விடுத்த கோரிக்கையை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. அன்றைக்கு பிரதமராக இருந்தவர் லால்பகதூர் சாஸ்திரி.
 
1971 தேர்தலின்போது இந்திராகாந்தி தேர்தல் வாக்குறுதி ஒன்றை வழங்கினார். சிறுபான்மை மதத்தினரால் நிறுவப்பட்ட ஒரு கல்வி நிறுவனம் என்ற அங்கீகாரத்தை அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்திற்குத் திரும்பவும் தந்து விடுவதாக வாக்குறுதி கூறினார். அத்தகைய அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்குமேயானால் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 30 (1) இன்படி அப்பல்கலைக்கழகம் தன்னாட்சி பெற்றிருக்கும். ஆனால் 1972 மே மாதம் நாடாளுமன்றத்தில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக (திருத்தம்) மசோதா ஒன்றைக் கொண்டுவந்தார். தேர்தல் வாக்குறுதிக்கு மாறான முறையில், அப்பல்கலைக் கழகத்தை மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு துறையாக மாற்றினார். அதனை எதிர்த்து அலிகாரிலும் உ.பி.யின் பிற பகுதிகளிலும் 1972 ஜூன் 5 இல் முஸ்லீம்கள் நடத்திய போராட்டம் ஆயுதமேந்திய போலீசால் கடுமையாக ஒடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் சூறையாடப்பட்டன. ஏராளமான பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர்.
1984_riots_450
அவசரநிலைக் காலத்தில் 1976-இல் இந்திராவின் மகன் சஞ்சய் காந்தியின் தலையீட்டின் கீழ் டெல்லியில் ஜூம்மா மசூதி தூர்குமன் வாயில் ஆகியவற்றுக்கு அருகே இருந்த குடிசை வாழ் மக்களை அகற்றுதல், கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை போன்றவை செய்யப்பட்டன.
 
1980 -இல் இந்திரா மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று, பதவிக்கு வந்தவுடன் ஆகஸ்ட் 13ம் தேதி (ரம்ஜான் தினம்) மொராதாபாத் நகரில் வெடித்த கலவரத்தில் 130 முஸ்லீம்கள் உ.பி. ஆயுதப் போலீசாரால் கொல்லப்பட்டனர்.
 
1983-இல் அலிகார், அலகாபாத், கோத்ரா, பீகார், ஷரிப், நாளந்தா, ஹைதராபாத், பரோடா, புனே, புல்வாரி, டெல்லி, மீரத், அஸ்ஸாம் ஆகிய இடங்களில் நடந்த வகுப்புக் கலவரங்களில் பல முஸ்லிம்கள் உயிரை இழந்தனர். அஸ்ஸாமில் மட்டும் 2000 பேர் இறந்தனர் என்றும் 1500 பேர் காணாமல் போய்விட்டனர் என்றும் அதிகாரப் பூர்வமான தகவல்கள் கூறின.
 
ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில்தான் பூட்டப்பட்டிருந்த பாபர் மசூதியின் கதவுகள் திறக்கப்பட்டு, இராமன் சிலையை வழிபடுவதற்கான இசைவு தரப்பட்டது. 1989 நவம்பர் 9 ஆம் நாள் இராமன் கோயில் கட்ட செங்கல் பூசை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சியின் பிரச்சாரத்தைத் தொடங்க அயோத்தியைத் தேர்ந்தெடுத்த ராஜீவ், இந்தியாவில் இராமராஜ்ஜியத்தை உருவாக்குவதுதான் தனது கட்சியின் குறிக்கோள் என்றார்.
 
1984-இல் இந்திரா காந்தி கொலையுண்டதையடுத்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கொலைவெறியாட்டத்தையும், குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களைத் தண்டிப்பதில் காங்கிரஸ் அரசாங்கம் காட்டிய அக்கறையின்மையையும் குறிப்பிடலாம்.
 
சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்களது பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, உடைமைகள் அழிக்கப்பட்டபோது ராஜீவ் கூறிய வாசகம் "ஆலமரம் (இந்திரா) சாயும் போது நிலத்தில் அதிர்ச்சி ஏற்படாமல் இருக்குமா?".

சீக்கியர் மீது நடத்தப்பட்ட வன்முறை குறித்து 1984 நவம்பர் 17இல் டெல்லியிலுள்ள மனித உரிமை அமைப்புகளான பி.யு.சி.எல், பி.யு.டி.ஆர் ஆகிய இரண்டும் சேர்ந்து நடத்திய ஆய்வினடிப்படையில் குற்றவாளிகள் யார் என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. வன்முறையில் தொடர்புள்ளவர்களென அது குற்றம் சாட்டியவர்களில் 198 பேர் காங்கிரஸ் ஊழியர்கள்; 15 பேர் காங்கிரஸ் தலைவர்கள்; 143 பேர் போலிஸ் அதிகாரிகள் ஆவார்கள்.
 
இராஜீவ் மறைவுக்குப் பிறகு பிரதமரான நரசிம்மராவ் ஆட்சி, பாபர் மசூதி தரைமட்டமாக்கப்படுவதற்கு மறைமுக ஒத்தாசை புரிந்தது.
 
குஜராத் படுகொலைக்குப் பின்பு நடந்த அம்மாநில சட்டமன்றத் தேர்த‌லுக்கான பிரச்சாரத்தை இந்து மத சம்பிரதாயப்படியே தொடங்கியது காங்கிரஸ். இப்படிப்பட்ட கீழ்த்தரமான வரலாறு கொண்ட காங்கிரஸ் தன்னை மதச்சாற்பற்ற கட்சி என்று சொல்வது எவ்வளவு அபத்தமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இந்து மதவெறியைக் கடைபிடிப்பதிலும் அதை நடைமுறைப்படுத்துவதிலும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களுக்கும், காங்கிரசுக்கும் இடையே பெரிய வேறுபாடு கிடையாது.
 
கோடிக்கணக்கான இந்திய மக்களின் வருமானத்தை அட்டைபோல உறிஞ்சி கொழுத்துக் கொண்டிருக்கும் கோயில்களும், மடங்களும் அதனுள் ஆன்மீக வேடமணிந்து ஒளிந்து கொண்டிருக்கும் இந்து மத வெறியர்களும் அரசியல் அரங்கிலிருந்து, சமூக தளத்திலிருந்தும் அப்புறப்படுத்தப்பட வேண்டும். மக்களை வர்க்க உணர்வுடன் ஒன்றுபடுத்த வேண்டும். இதுவே புரட்சிகர சத்திகளின் முன் உள்ள மிகப்பெரிய கடமையாகும்.
 
 
- செ.கார்கி
-keetru.com


அன்புள்ள கமல்ஹாசனுக்கு ஒரு முஸ்லிம் சகோதரனின் மனம் திறந்த மடல்

உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டுமாக.

நீங்கள் உலகப் புகழ்பெற்ற தலைசிறந்த நடிகர் என்பது உண்மை; நீங்கள் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் என்பதும் உண்மை. திரை உலகத்தில் சம்பாதித்து அதை திரை உலகத்திலேயே முதலீடு செய்பவர் என்று உங்களை அனைவரும் பாராட்டுவதும் உண்மை.

kamal_335உங்களின் 'உன்னைப்போல் ஒருவன்' திரைப்படமும், தற்போது 'விஸ்வரூபம்' திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிராக அமைந்தது துரதிஷ்டவசமானது. இப்படங்கள் குறித்து உங்களோடு கலந்துரையாடி எங்கள் குமுறல்களை கொட்டினோம். நீங்கள் அதை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டீர்கள் எனத் தெரியவில்லை.

நினைவிருக்கிறதா கமல் அவர்களே? முன்பு ஒரு முறை நீங்கள் அமெரிக்கா சென்றபோது உங்கள் பெயரில் ஹசன் என்ற பெயர் ஒட்டி இருப்பதைப் பார்த்து, 'முஸ்லிம்' எனக் கருதி உங்களை அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டு அவமானப்படுத்தியதை மறந்து விட்டீர்களா? உங்களைப் போன்றே புகழ் பெற்ற நடிகர் ஷாருக்கானுக்கும், முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும் இதே போன்ற அவமானங்கள் 'முஸ்லிம்' என்ற காரணத்திற்காக நடந்தது.

முஸ்லிம் எப்படி எல்லாம் அவமானப்படுத்தப் படுகிறான், தனிமைப்படுத்தப் படுகிறான் என்பதற்கு இதுவெல்லாம் ஆதாரங்கள்.

இந்நிலையில் இன்று காலை (30-01-2013) நீங்கள் அளித்த பேட்டியை கோவையில் இருந்தவாறு எமது கட்சியின் மாநாட்டுப் பணிகளுக்கு மத்தியில் பார்த்தேன். மிகவும் உருக்கமாக இருந்தது. உங்கள் மீது இரக்கம் ஏற்படும் வகையிலும் அனுதாபத்தை திருப்பும் வகையிலும் தங்கள் வார்த்தைகள் இருந்தன.

உங்களை யார் தமிழ்நாட்டை விட்டு போகச் சொன்னது? உங்களை மிரட்டுவதும், உருட்டுவதும் யார்? பின்னணி என்ன? அது உங்கள் மனசாட்சிக்குத் தெரியும்.

தங்கள் மீது எங்களுக்கு இப்போதும் மரியாதை உண்டு. நீங்கள் எங்களின் சகோதரர். அநீதியாக நீங்கள் யாராலும் பாதிக்கப்பட்டால், நீதியின் பொருட்டு உங்களுக்கு அரணாக இருப்போம். கவலைப்படாதீர்கள். ஆனால் உண்மையான பிரச்சனை என்ன என்பதை திசை திருப்பி முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதற்கு துணை போய் விடாதீர்கள். எங்களின் கோரிக்கை எங்களையும், எங்கள் குர்ஆனையும், வணக்க வழிபாடுகளையும் தவறாக சித்தரிக்க வேண்டாம் என்பதே!

நீங்கள் உலக நிகழ்வுகளைத் தான் படமாக எடுக்க வேண்டும் என விரும்பி இருந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை படமாக எடுக்கவில்லை? பாபர் மஸ்ஜித் இடிப்பைத் தொடர்ந்து மும்பையில் 2 ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை ஏன் படமாக எடுக்கவில்லை? ஈராக்கில் அமெரிக்காவினால் 6 லட்சம் ஈராக்கியர்கள் கொல்லப்பட்டது பற்றி ஏன் படம் எடுக்கவில்லை?

இப்படி பல துயர நிகழ்வுகள் உலகமெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதையெல்லாம் படமாக எடுக்காமல் அமெரிக்காவை திருப்திப்படுத்தி, இந்தியர்களை கேவலப்படுத்தி, அதில் தமிழ்நாட்டு முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி ஒரு படம் எடுத்தது ஏன்? இது தேவையா?

நேதாஜியையும், பகத்சிங்கையும் ஆதிக்க எதிர்ப்புப் போராளிகளாக நீங்கள் பாராட்டும்போது, அமெரிக்காவை எதிர்த்து தங்களின் விடுதலைக்காகப் போராடும் ஆப்கானியர்களை மட்டும் தீவிரவாதிகளாக சித்தரிப்பது ஏன்? அனுதாபத்தைப் பெறுவதற்கு முன்பு எங்களின் நியாயத்தை உணருங்கள்.

இன்று உங்கள் படம் வெளியான சில தியேட்டர்களின் மீது சில விஷமிகள் தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்; பெட்ரோல் குண்டுகளை வீசி இருக்கிறார்கள். இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இப்படி தமிழ்நாடு முழுக்க உங்களுக்கு எதிராக, வேறு ஏதோ காரணங்களுக்காக யார் யாரோ செய்யும் எதிர்ப்புகளுக்கு எங்கள் சமூகத்தை காரணமாக்கக் கூடாது. எங்களுக்கு அதில் எல்லாம் உடன்பாடு இல்லை. உங்களை சரிப்படுத்துவது தான் எங்களுக்கு நோக்கம்; எதிர்ப்பது அல்ல.

தமிழ்நாடு எங்கும் விஸ்வரூபத்தை முன் வைத்து ஒரு பதற்றம் உருவாக்கப்படுகிறது. இதற்குப் பின்னணியில் இருப்பது யார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

உங்களுக்கும், அந்த பெரிய இடத்து தொலைக்காட்சிக்கும் இடையே நடந்த வணிக மோதல்கள் மற்றும் ப.சிதம்பரம் பிரதமராக வேண்டும் என்று நீங்கள் பேசியது போன்றவையெல்லாம் இப்பொழுது உங்களுக்கு எதிராக அரசியல் வடிவம் பெறுகிறது. இதற்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தம் இல்லை.

நல்லவேலையாக இன்று (30-01-2013) மறுபடியும் விதிக்கப்பட்ட தடைக்குப் பிறகு உங்களை ஹாருண் எம்.பி., தேசிய லீக் பசீர், முஸ்லிம் லீக் ஜைனுல் ஆபுதீன் ஆகியோர் சந்தித்திருக்கிறார்கள். என்ன பேசினீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் சில காட்சிகளையும், வசனங்களையும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நீக்கப் போவதாகவும், முஸ்லிம்களுக்கும், எனக்கும் உள்ள பிரச்சனை இதன் மூலம் தீர்ந்துவிட்டதாகவும் நீங்கள் பேட்டியளித்துள்ளீர்கள். இதை கூட்டமைப்பு எப்படி அணுகப் போகிறது என்று தெரியவில்லை. எது எப்படி ஆயினும் இப்பிரச்சனை சுமூகமான முறையில் முடிக்கப்பட வேண்டும்.

எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த பின்னால் கூட நாங்கள் அமைதி வழியிலேயே அனைத்தையும் சந்திக்கிறோம். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்; இதை உங்கள் ரசிகர்களுக்கும் சொல்ல வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

தொலைக்காட்சிகள் வேண்டுமென்றே பதற்றத்தைத் தூண்டுகின்றன. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்பிரச்சனையைக் காரணம் காட்டி பதற்றம் உருவாவதை யாரும் விரும்பவில்லை. அதே சமயம் உங்கள் மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்தக் கோபமும் இல்லை. நீங்கள் எங்களையும் புரிந்து கொண்டு எங்களோடு சகோதரனாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். உங்களுக்கு இறைவன் நேர்வழி (ஹிதாயத்) காட்ட வேண்டும் என பிரார்த்திக்கிறோம். உங்கள் கடன் தீரவும், நீங்கள் அமைதியைப் பெறவும், இம்மண்ணிலேயே வாழவும் ஆண்டவன் உங்களை ஆசீர்வதிப்பானாக.

நாம் எல்லோரும் இந்தியர்கள்; தமிழர்கள். ஒருவரை ஒருவர் மதிக்கும் சகோதரர்கள் என்பதை உணர்ந்து அன்பையும், நேசத்தையும் கட்டிக் காப்போம்.

இப்படிக்கு,
உங்கள் முஸ்லிம் சகோதரன்
- தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி


வியாழன், 31 ஜனவரி, 2013

சென்னை விமான நிலையத்தின் அதிநவீன விரிவாக்க கட்டிடங்கள் : ஹமீத் அன்சாரி திறந்து வைக்கிறார்




சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 2 ஆயிரத்து 15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன விரிவாக்க கட்டிடங்களை, துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி இன்று திறந்துவைக்கிறார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை அதிநவீனப்படுத்தி அழகு படுத்தும் பணிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2 ஆயிரத்து 15 கோடி ரூபாய் வரை திட்டப் பணிகளுக்கு செலவு செய்யப்பட்டு தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான முனையங்களுக்கு பெயர் வைப்பது குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில், அதி நவீனப் படுத்தப்பட்ட விமான முனையங்களுக்கு இன்று திறப்புவிழா நடக்கிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய விமான நிலைய ஆணையகத் தலைவர் அகர்வால் கூறுகையில், "சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் எதிர்கால வளர்ச்சியின் தேவையை சமாளிக்க கூடியவகையில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 462 சதுர மீட்டர் கொண்ட புதிய உள்நாட்டு, மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டுள்ளன. 36 மாதங்களில் முடிக்க வேண்டிய திட்டப் பணிகள் நிலம் கையகப்படுத்துதல் போன்ற பணிகளால் தாமதம் அடைய நேர்ந்தது. தமிழக அரசின் முழுமையான ஒத்துழைப்புடன் இப்போது இந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. விமான முனையங்கள் தற்போது தொடங்கி வைக்கப்பட்டாலும், அவற்றை ஒரு மாதத்தில் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிகை எடுக்கப்படும். இந்த விமான முனையங்களுக்கு பயணிகள் கட்டணத்தை விமான நிலைய குழுக்கள் முடிவு செய்யும் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான முனையங்களுக்கு பெயர் வைப்பது குறித்து மத்திய அமைச்சரவைக் குழுதான் முடிவு செய்யும்." என்று கூறினார்.

குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி இன்று திறப்புவிழா நடத்தி வைப்பதை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளன.



 

விஸ்வரூபம் படத்தினை வெளியிட மீண்டும் தடை. உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவு.

 
ஜனவரி 30: விஸ்வரூபம் படத்தினை வெளியிட மீண்டும் தடை. உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவு.
இதை தொடர்ந்து, விஸ்வரூபத்தை அரசியல் ஆக்குகிறார் கருணாநிதி. இவரை மாதிரி ஒரு கேவலமான அரசியல் தலைவரை தமிழகம் கண்டிருக்காது என்றே சொல்லாம்.

விஸ்வரூபம் படத்தை ஜெயலலிதா தடை செய்ததற்கு கமல், சிதபரத்தை பிரதமர் ஆகவேண்டும் என்று சொன்னார், ஜெயா டிவிக்கு விஸ்வரூபத்தை தர மறுத்தார், இப்படி பல காரணங்களை சொல்கிறார் இந்த அரசியல் கோமாளி.

பிரச்சனைகள் வந்து விட கூடாது என்று படத்தை தடை செய்த தமிழக அரசை கேலி செய்யும் இவர், கோயம்புத்தூர் கலவரம் நடக்கும் பொழுது நான் மூன்று நாட்களாக முதல்வர் பதவியிலேயே இல்லை என்று சொன்னவர்தான் அந்த அளவுக்கு திறமையான ஆட்சியாளர்.

கருணாநிதி பண்ணுகிற மட்டமான அரசியலில் நடுத்தெருவுக்கு வரப்போவது என்னவோ கமல்தான். இதை, இவர் புரிந்த கொண்ட மாதிரி தெரியவில்லை. மேலும் ஏழரையை கூட்டுகிறார். தமிழகத்தை விட்டு வெளியேற போகிறேன், மதச்சார்பில்லாத மாநிலத்துக்கு போக போறேன் என்று சொல்வது, ரசிகர்களை வைத்து அனுதாபம் தேடுவது போன்றவற்றை விட்டு விட்டு உருப்படியான தீர்வை காண முன்வரவேண்டும்.

கமலஹாசன் என்கிற தனி நபர் புகழுக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டு இந்தியாவில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு என்று பல்வேறு வகைகளில் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தை, மேலும் புண்படுத்தும் வகையில் படம் எடுத்து சமூக அமைதியை குலைக்க நினைப்பது சரியா? தான் செய்த தவறை உணர்ந்து அதற்க்கான பரிகாரத்தை செய்ய கமல் முன்வர வேண்டும். இதுவே உண்மையாக பிரச்னையை தீர்க்க உதவும்.

சும்மா கருத்து சுதந்திரம், கத்திரிக்காய் என்று பேசி விட்டு தங்களுக்கு பாதகமான விசயம் வரும் பொழுது அதை காற்றில் பறக்க விடுவதை விட நடு நிலையாக இந்த விஷயத்தை பார்ப்பதே சரியான அணுகுமுறை. கமல் ஹாசன் தனி நபர், அவர் செய்வது வியாபாரம். ஆனால் அவர் தாக்குவதோ ஒரு சமூகத்தை. அந்த சமூகத்திற்கு இது வியாபாரம் இல்லை நம்பிக்கை சார்ந்த விஷயம். நமது கருத்து சுதந்திரம் என்பது அடுத்தவர்களின் மூக்கு நுனிவரைதான் என்பதை கமல் புரிந்து கொள்ள வேண்டும்.

தலிபான் தலைவர் உமர், மதுரையிலும், கோவையிலும் தங்கி இருந்தார் என்று சொல்லும் கருத்து விசமத்தனமான, உள்நோக்கம் கொண்டது. இதன் மூலம் மதுரை, கோவை முஸ்லிம்களை தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்துகிறார். மேலும் உமர் பச்சிளம் பாலகனாகிய தன் மகனிடம் பல்வேறு ரக துப்பாக்கிகளின் தோட்டாக்களை ஒரு துணியில் மறைத்து ஒன்றன் பின் ஒன்றாக காட்டுவதும் அதை அந்த பட்சிளம் பாலகன் தடவிபார்த்து, அது எந்த ரகத்தை சேர்ந்த தோட்டா என்று சரியாக சொல்வதும் ஆகிய இந்த கருத்து, சிறுவர்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் ஊடக பயங்கரவாதம்.

முஸ்லிம்களே சொல்கிறார்கள் தலிபான், லஸ்கர் பற்றி கமல் படம் எடுக்கட்டும் அதை பற்றி கவலை இல்லை. ஆனால் அதில் ஏன் முஸ்லிம்களின் வழிபாடுகளை, நம்பிக்கைகளை அவமதித்து எடுக்க வேண்டும் இதுவே அவர்களது கேள்வி. இதில் சிலர் சென்சார் போர்ட் அனுமதி கொடுத்து விட்டால் படத்தை தடுப்பது முறையில்லை என்கின்றனர். ஏதோ நாமெல்லாம் லஞ்சம் இல்லாத நாட்டில் வாழ்வதாக அவர்களுக்கு நினைப்பு. பிச்சை காசை தூக்கி எறிந்தாலே சென்சார் போர்டு வாலாட்டும், நூறு கோடி செலவில் எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படத்திற்கு கேட்கவா வேண்டும்.

கருணாநிதி, ராமதாஸ், விஜயகாந்த் என்கிற வெத்துவேட்டுகளை நம்பி ஏமாறாமல் படத்தில் இருக்கும் ஆட்சேபணைக் குரிய கருத்துக்களை நீக்கி வெளியிடுவதே கமலுக்கு நல்லது.

சமூக ஒற்றுமை என்பது கண் போன்றது! கண்ணை விற்று வியாபாரம் செய்யாதீர்கள்! என்பதே நமது அன்பான வேண்டுகோள்!

 

-சிந்திக்கவும்

 

30 ஜன., 2013 அன்று புதியதலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட பேசு நிகழ்ச்சியில் பேரா.ஜவாஹிருல்லாஹ்


30 ஜன., 2013 அன்று வெளியிடப்பட்டது
புதியதலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட பேசு நிகழ்ச்சியில் பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்குபெற்று விஸ்வரூபம் சம்பந்தமாக கருத்துக்களை வெளியிட்டார். பஷீரின் தன்னிச்சையான செயல்பாட்டை விமர்சனம் செய்தார். நாள்: 30.01.2013.

 
 
- puthiyathalaimurai.tv

விஸ்வரூபம் பற்றி ஹிந்து சகோதரர் மேலூர் ராஜா அவர்களுக் நன்றி


25947_245581792244875_1323638096_n
முஸ்லிம் சமுதாயத்திற்காக குரல் கொடுக்கும் ஹிந்து சகோதரர் மேலூர் ராஜா அவர்களுக்கு முஸ்லிம் சமுதாய மக்கள்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.சினிமாவை சினிமாவாக பார்ப்போம்னு சொல்றாங்க,அப்புறம் ஏன் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகளா சித்தரிக்கனும்?சினிமாதானே,உண்மையில்லையே ஒரு கற்பனைக்காக என்று இந்துக்களை தீவிரவாதிகளா சித்தரித்து ஒருதடவை எடுக்கலாமே?

(உண்மையில் இந்து தீவிரவாதிகளும் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்)
முதலில் சினிமாவை சினிமாவாக பார்க்கும் சூழல் இங்கு உள்ளதா?இன்னும் முதல்வர்களை தமிழ்சினிமாவில் இருந்தே தேர்ந்தெடுக்கும் மனமுதிர்ச்சியில்தானே தமிழன் இருக்கிறான்?
முஸ்லிம்கள் விவாகாரம் வந்தவுடன் மட்டும் பல நடுசென்டர்கள்,கருத்து சுதந்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆடுவதை பார்க்கும் போது அச்சமாகவே இருக்கிறது.

அமெரிக்காவில் கருத்து சுதந்திரம் என்று போர்னோகிராபிகள் கூடத்தான் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டு ஓடுகின்றன.அது போல் இங்கும் கருத்து சுதந்திரம் செய்யலாமே? பரிந்துரைப்பீர்களா? மாட்டீர்கள் ஏன்? ஒரே ஒரு நிமிடம் சிந்தித்தால் உங்களுக்கு எல்லாமே புரியும்.ஆனால் மாட்டிக் கொண்டது முஸ்லிம்கள்,அதனால் மௌனம் சாதிப்பீர்கள். இதே சூழலில் இந்துத்துவ இயக்கங்கள் இருந்திருந்தால் இந்த திடீர் கருத்து சுதந்திர ஆதரவுவாதிகள் என்ன செய்திருப்பார்கள்? திருடனுக்கு தேள்கொட்டியது போல் இருந்திருக்கும். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற இந்து இயக்கங்கள் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்ட செய்திகள் வருகின்றன. உள்துறை அமைச்சர் காவி தீவிரவாதம் என்று சொன்னதற்கே பரிவாரங்கள் சாமியாடுகின்றன.பாராளுமன்றத்தையே இயங்கவிடாமல் தடுப்போம் என்று பிஜேபி மிரட்டுகிறது.இந்து தீவிரவாதத்தை வைத்து படம் எடுக்க இதே கமல் முன்வருவாரா? படம் எடுப்பது இருக்கட்டும், அதைப்பற்றி பேசித்தான் பார்க்கட்டுமே,அப்புறம் தெரியும் உங்கள் கருத்து சுதந்திரத்தின் லட்சணம்.

குஜராத் கலவர வழக்குகளின் நிலையை அறிவீர்கள். அதே நேரத்தில் கோத்ரா வழக்குகள் எவ்வளவு வேகமாக நடத்தி முடிக்கபட்டன என்றும் அறிவீர்கள்,மும்பை கலவரம் குண்டுவெடிப்பு,கோவை கலவரம்,குண்டுவெடிப்பு எல்லாம் இதுபோலவே கையாளப்பட்டன.குஜராத்,மும்பை, கோவை என்று நீதி மறுக்கப்பட்டு வரும் நிலையில் திரைத்துரை, மீடியாக்கள், பத்திரிக்கைகள் அனைத்தும், இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே முஸ்லிம்களை தவறான கண்ணோட்டத்திலேயே சித்தரித்து வருகின்றன. இதே கமலின் உன்னைப்போல் ஒருவன் முஸ்லிம்களை எப்படியெல்லாம் காயப்படுத்தும் விதமாக இருந்தது என்பதையும் பெரும்பாலோனோர் அறிவோர்கள்.அதைத் தொடர்ந்து துப்பாக்கி படம். அதன் தொடர்ச்சியான விளைவே இந்த விஸ்வரூப எதிர்ப்பும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
சற்று நேரம் அவர்கள் பக்கம் இருந்து புரிந்து கொள்ள முயல்வோம்.காயப்பட்டுக்கிடக்கும் ஒரு சமூகத்தை இப்படி அன்னியப்படுத்த வேண்டாம். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வக்கிரங்களை ஆதரிக்க வேண்டாம்.

யதார்த்தை பிரதிபலிக்கிறோம் என்கிறார்களே சினிமாக்காரர்கள்,குஜராத்தில் எப்படியெல்லாம் அப்பாவிகளும், பெண்களும் குழந்தைகளும் ஓட ஓட விரட்டி,வெட்டி, எரித்து கொல்லப்பட்டார்கள் என்று படம் எடுக்க வேண்டியதுதானே? 10 ஆண்டுகள் ஆகியும் எவனும் மூச்சுக்கூட விடவில்லையே? ஏன்?

சமூகதளங்களில் ரஜினையையோ,விஜயையோ விமர்சித்துப்பாருங்கள்.எவ்வளவு தரக்குறைவான தாக்குதல்கள் வருகின்றன என்று பார்க்கலாம்.இப்படிப்பட்ட முதிர்ச்சியான சமூகத்தை வைத்துகொண்டு விஷப்பரிட்சைகள் எதற்கு? ஏன் இந்த விஷ்வரூபம் தடை செய்யப்பட்டதற்கே கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் எத்தனை பேர் விஷம் கக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கின்றீர்கள்தானே?
சர்ச்சையான விஷயங்களை ஆரோக்கியமாக விவாதிக்கும் அளவுக்கு மனமுதிர்ச்சியான சமூகமாக நாம் மாறும் வரையில் இது போன்ற தடைகள் அவசியமே

- http://vkalathur.info

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

V.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்

 

வி.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்:
                               
 வி.களத்தூரில் 60 ஆண்டுகளாக தீர்வு காப்படாத விசயம் (அரசுக்கு சொந்தமான) பஸ்நிலையம் சர்வே எண் 119/1 என்ற இடம் தான் இதற்கு காரணம்.

 
1.RDO ரேவதியின் பழிவாங்கும் நோக்கம்:-
                               இந்த விசயமாக பெரம்பலூர் மாவட்ட RDO ரேவதி தலைமையில் 107 கேஸ் போடப்பட்டு பேச்சு வார்த்தை நடந்தது அன்று ஒருதலைபட்சமாக RDO செயல்ப்பட்டர். இதனால் முஸ்லிம் மக்கள் நடுநிலைமையை தேடி சுமார் 1000 பொதுமக்கள் சேர்ந்து மவாட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர் ஆட்சியர் அவர்கள் அதை கேன்சல் செய்து மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்தார் மீண்டும் பேச்சு வார்த்தை மாற்றப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன் பேச்சு வார்த்தை நடந்தது அதில் மீண்டும் இஸ்லாமியர்களுக்கு அநீதி இலைக்கப்பட்டது. இந்துக்கள் மட்டுமே அந்த இடத்தில் அதாவது பஸ்நிலையத்தில் விழாக்களுக்கு அனுமதி உண்டு முஸ்லிம்களுக்கு சந்தனகூடு மட்டுமே நடத்த அனுமதி உண்டு என்று தீர்ப்பு அளித்தார். மீண்டும் இஸ்லாமியர்களின் பாரம்பரியமான சந்தனகூடு விழா நடத்த அனுமதி கோரியபோது RDO  ரேவதி இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி கொடுப்பேன் உங்களுக்கு SP யே அனுமதி வழங்கினாலும் நான் உங்களுக்கு அனுமதி வழங்கமாட்டேன் என்று ஆனவமாக கூறினர். இதை கண்டித்து RDO ரேவதியை தமிழக அரசே டிஸ்மிஸ் செய் என்று ஒரு போஸ்டர் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒட்டப்பட்டது.

                      மேலும் பஸ் நிலையத்தில் பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியாவின் பேனர் வைக்கப்பட்டது இதை குற்றம் என்று எதன் அடிப்படையில் 107 கேஸ் போட்டுள்ளார் என்று சென்ணை உயர் நீதி மன்றத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மேல் அதாவது மங்ககள மேடு காவல் ஆய்வாலர் செல்வம் மீதும் மற்றும் RDO ரேவதி மீதும் ரெட் தாக்கல் செய்யப்பட்டது இன்று வரை அவர்கள் கோர்ட்டில் ஆஜராகத காரத்தினால் நிலுவையில் உள்ளது. இவைகள் அணைத்தும் மனதில் வைத்து கொண்டுதான் இந்த வெறி தாக்குதல் நடை பெருகிறது. இதுவும் RDO அவர்களே சொல்கிறார்கள் எப்படி என்றால் 23.1.13 அன்று காலை பெரம்பலூர் SP இஸ்லாமிய தரப்பில் நீங்கள் அரஸட் ஆகி விடுங்கள் மீதியை கோர்டடில் பார்த்து கொண்டு வரும் காலங்களில் பீஸ் மீட்டிங்கில் சுமுக தீர்ப்பு எடுங்கள் என்று சொல்லும் போது RDO இதற்கு மறுப்பு தெரிவித்து இனி இந்த V.களத்தூரில் பீஸ் மீட்டிங்கே இல்லை நான் நடத்த போவதே இல்லை அணைவரையும் தூக்கி உள்ள போடுங்க இவனுங்க அப்பதான் அடங்குவானுங்க அப்பதான் எனக்கும் திருப்தி என்று கூறி காவல் அதிகாரிகளுக்கு ஆனவத்தோடு ஆனையிடுகிறார்.
 
2.காவல் துறையின் பழி வாங்கும் நோக்கம்:-

                                            சில மாதங்களுக்கு முன்பு வாகனம் நிருத்துமிடத்தில் ஷேக் அப்துல்லாவின் வாகனத்தில் கிருஷ்னமூர்தியின் மகன் சிவகுமார் என்பவரின் வாகனம் மோதியதில் சைடு கன்னாடி மற்றும் இன்டிகேட்டர் உடைந்து விட்டது அப்போது நான் வாங்கி தருகிறேன் என்று கூறி பல நாட்கள் ஏமாற்றி வந்தார் மீண்டும் கடைவீதியில் ஷேக் அப்துல்லா கேட்டபோது அவர் நாங்கள் இப்படித்தான் இடிப்போம் உங்களால் என்ன செய்ய முடியும் எங்கள் (இந்துக்கள்) வண்டியை நாங்களே கொளுத்தி விட்டு முஸ்லிம்கள்தான் கொழுத்தினாங்க என்று உங்கள் மீது பலி போடுவோம் போலிஸ் எங்கள் பக்கம்தான் இருக்கும் மேலும் நாங்கள் 100 பேரை கூட்டி வந்து உங்களை உன்டு இல்லைன்னு பன்னுகிறேன் என்று ஆவேசமாக கூறினார் இதனை தொடர்ந்து வாகன உரிமையாளர்கள் ஓட்டுனர்கள் சங்கம் சார்பாக காவல் நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டது

இதை பெற்று கொண்டு அதற்கு ரசீது கொடுத்தார்கள்
 
ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை இதனால் பல முறை காவல் துறையிடம் அலைந்தும் பயன் இல்லை ஆகையால் காவல் துரையின் மீது நடவடிக்கை எடுக்க உள் துறை வரை சென்றதால் காவலர்கள் ஆத்திரமடைந்தனர் .
 
உள்துறைக்கு அனுப்பிய மனு 5 பக்கம் இருப்தால் நாம் இனைக்கவில்லை.
கடந்த மாதம் தேர் திருவிழாவின் போது செல்வராஜ் என்பர் இஸ்லாமியர்களை பார்த்து தகாத வார்த்தையினால் திட்டியதால் காவல் துறையிடம் மனு கொடுக்கப்பட்டது அதற்கும் ளுP மற்றும் னுளுPP வரை பொருப்பு ஏற்று இன்று வரை நடவடிக்கை எடுக்கபடவில்லை இதனால் காவல் துறை மீது மணித உரிமம் வரை மனு கொடுக்கபட்டதால் இப்போது அவர்களின் பலி தீர்க்கும் படலம் தொடர்கிறது
மேலும் இலஞ்சமே வாங்க கூடாது லஞ்சம் வாங்கினால் போலிசால் தண்டனை நேரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று போலிசே லஞ்சம் வாங்கினால்? பொது சிந்தனையாக ஒரு இஸ்லாமிய மாணவன் பாஸ்போர்ட்க்கு ரூ1000 லஞ்சம் கேட்ட ஏட்டுவின் மீது லஞ்ச ஒழிப்பு துரையின் மனு கொடுத்ததின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலிரால் கைது செய்யப்பட்டார் இச்செய்தி பெரம்பலூர் மாவட்ட போலிசரால் பொருக்க முடியவில்லை நம் டிபார்ட்மென்ட்க்கு அவமானம் ஏற்படுத்திய முஸ்லிம்களை பலி வாங்க துடித்தனர்.
பொது மக்கள் தவறு செய்தால் போலிசரால் தண்டிக்பட வேண்டும். போலிஸ் தவறு செய்து தண்டிக்கபட்டால் அது அவர்களுக்கு பெருத்த அவமானமாம் அதன் விலைவு இண்று களத்தூரில் போலிசரால் இஸ்லாமியர்கள் மட்டுமே கைது வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.
மாணவன்தானே எங்களை மாட்டி விட்டான் என்பதை வெறி கொண்டு இன்று காலையில் பள்ளிக்கு செல்ல வந்த மாணவர்களையும் மற்றும் யுனிவர்ஸிட்டி எக்ஸாம்க்கு சென்ற மானர்வர்கள் என்று கூட பார்க்கமால் கைது செய்து அடைத்துள்ளனர் காவல்துறை. இதுவரை முஸ்லிம் என்றால் உடனே அரஸ்ட் ஊமையாக இருந்தாலும் வயது முதிந்தவர்களையும் சிறுவர்களையும் அரR செய்து அவர்களின் வெறி கொன்ட பலியை தீர்க்கின்றனர் இதுவும் அவர்களே சொல்கிறார்கள் எப்படி என்றால் வெரும் 500 ரூபாய் காசு கேட்டதால் எங்களையா மாட்டி விட்டிர்கள். இனியும் உங்களை சும்மா விட மாட்டேன் என்று சொல்லி அவர்களின் அதிகாரத்தை துஸ்பிரோயகம் செய்கிறது மக்களை காக்க வந்த காவளா (எ)லிகள்..
 
3.மாவட்ட ஆட்சித்தலைவரின் பங்கு?
இன்று ஜமாத்தின் மூலம் மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அங்கு என்ன நடக்கின்றது என்று எனக்கு எதுவும் தெரியாது அங்குள்ள சுனுழு வை பாருங்கள் என்று சொல்லி தொடர்பை துன்டித்துள்ளர் என்பதுதான் பெரிய ஆச்சிரியமான விசயம்.
ஒரு ஊரில் நடந்துள்ள பிரச்சனைகள் ஆட்ச்சியர்க்கு எதுவும் தெரியாது என்பது எவ்வளவு அளட்ச்சிய போக்கான விசயம் இந்த மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது அவர்கள் முதல்வரால் மாநிலத்தின் முதல் கலக்டர் என்று கடந்த மாதம்தான் பட்டம் பெற்றுள்ளார்
இவர் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டுமே இவர் எந்த காரனத்தை காட்டி பலி தீர்கநினைத்தார் தெரியுமா?
தமிழகத்தில் அனைத்து இயக்கமும் சேர்ந்து முஸ்லிம்களின் தணியார் சட்டத்தில் புகுந்து விளையாடிய மாவட்ட ஆட்சியரை கண்டித்து பெரம்பலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
அதுவேதான் இன்று மவுனமாக இருந்து சுனுழு மற்றும் காவல் துறைiயின் அட்டகாசங்களை வேடிக்கை பார்க்கிறர். இத்தனை பிரச்சனைக்கு காரனம் மாவட்ட நிர்வாகம்தான் என்பது ஐயமில்லை பல முறை பீஸ் மீட் நடை பெற்றது ஆட்சிதலைவர் களந்து கொள்வதில்லை இன்று களத்தூரில் இவ்வளவு பிரச்சனைகள் மாவட்ட ஆட்சியர்க்கு ஒன்றும் தெரியாது என்கிறார். ஊரில் விசிட் வரவில்லை.. மாவட்டத்தில் என்ன நடக்கின்றது என்பது கூட தெரியாத மாவட்ட ஆட்சியர்க்கு??????????

இத்தனை பிரச்சனைகள் நடந்து முடிந்த நிலையில் தமிழக அரசு மவுனம் சாதிப்பது ஏன்?

வி.களத்தூர் முஸ்லீம்கள் மீது பொய் வழக்கு தமிழகமெங்கும் ஆர்பாட்டம் ஒரு பார்வை.

 

வி.களத்தூர் முஸ்லீம்கள் மீது பொய் வழக்கு-திருச்சி மரக்கடை பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் தடை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 72 பேர் கைது.

திருச்சி, ஜன. 27

திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 72 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூரில் இரு தரப்பினருக்கிடையே முன் விரோதம் இருந்தது. கடந்த 22ம் தேதி அங்கு நடந்த திருமண பெண் அழைப்பு நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட தெரு வழியாக ஊர்வலம் செல்லக்கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டு 10 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து 71 பேரை கைது செய்தனர். இதில், போலீஸ் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் போலீஸ் அனுமதி மறுத்ததுடன் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் சபியுல்லா தலைமையில் 72 பேர் நேற்று மரக்கடை ராமகிருஷ்ண பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்

அவர்களை தடுத்து கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.














மேலும் தமிழகமெங்கும் ஆர்பாட்டம் ஒரு பார்வை.


திருவாரூரில்...














தஞ்சாவூரில்...


மதுரையில்...

புதுக்கோட்டையில்...



பெரம்பலூர் வி.களத்தூர் முஸ்லீம்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்த காவல் துறை நிர்வாகத்தை கண்டித்துதிருவாரூர் மாவட்டம் லச்சுமா காகுடியில் பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் கொண்ட மக்களின் ஒரு பகுதியினர் வரவேற்புரை : ஷேக் அஜ்மல் தலைமை : ஹிலயத் ( மாவட்ட செயலாளர் pfi ) முன்னிலை : ஹாஜி ஷேக் (தஞ்சை மாவட்ட செயலாளர் pfi ) கோசம் : லத்திப் நன்றிவுரை: சாகுல் ஹமீது