புதன், 6 ஜூன், 2012

இன்னும் 105 வருடங்கள் காத்திருக்க வேண்டும்

இன்னும் 105 வருடங்கள் காத்திருக்க வேண்டும் (வீடியோ)





             சென்னை:- இன்று காலை சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வெள்ளி கிரகம் கடந்து சென்றது.  



இந்த அபூர்வ நிகழ்வு இனிமேல்  105 வருடங்களுக்கு பிறகு தான் நடைபெறும் .பூமியில் இருந்து 4.1 கோடி கிலோ மீட்டர் தொலைவில் வெள்ளி கிரகம் உள்ளது. வெள்ளிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் 10 கோடியே 82 லட்சம் கிலோ மீட்டர் ஆகும்.



வெள்ளி சூரியனைக் கடக்கும் இந்த அபூர்வக் காட்சி இன்று காலை 5:55 மணிக்குத் தொடங்கியது. இந்நிகழ்வைப் பொதுமக்கள் பார்ப்பதற்காகச்  சென்னை பிர்லா கோளரங்கம் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது. மெரினா கடற்கரையிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன..



வெள்ளி  சூரியனைக் கடந்த போது ஒரு கருப்புப் புள்ளி மெதுவாக  நகர்ந்து  சென்றதைக் காண முடிந்தது.   சூரியனின் பிம்பம் இதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு திரையில் தொலைநோக்கி வழியாக விழுமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அபூர்வ நிகழ்வை ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கண்டு ரசித்தனர்.



வெள்ளி கிரகத்தின் இந்த  நகர்வை அமெரிக்கா முதல் தென் கொரியா வரை உலகம் முழுவதும் வசிக்கும் மக்கள் கண்டு ரசித்தனர். அமெரிக்காவில் வசிப்பவர்கள் செவ்வாய்கிழமை காலையிலும், ஆசியா பகுதியில் வசிப்பவர்களுக்கு புதன்கிழமையும் சூரியனை வெள்ளி கடந்து சென்ற நிகழ்வு தெரிந்தது.