வியாழன், 7 ஜூன், 2012

திருச்சி, கோவையில் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் : பிரதமர்



              பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், டெல்லியில் நேற்று உள் கட்டமைப்பு மேம்பாட்டுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசியபின், அனைத்துத் தரப்பினரும் பயணம் செய்வதை மேம்படுத்தும் விதத்தில் திருச்சி, கோவை, லக்னோ, வாரணாசி ஆகிய ஊர்களில் சர்வதேச விமான நிலையங்கள்  அமைக்கப்பட்டு, விமானங்கள் இயக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்.
     நேற்றைய கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர், சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர், நிலக்கரி வளத்துறை அமைச்சர், திட்டக்குழுத் துறை தலைவர் ஆகியோர் பங்கேற்றனர்.

      கூட்டத்தில் ஆலோசனை முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், அனைத்துத் தரப்பினரும் பயணம் செய்வதை மேம்படுத்தும் வகையில், திருச்சி, கோவை, லக்னோ, வாரணாசியில் இவ்வாறு சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என்றும், அதற்கான ஒப்பந்த புள்ளிகள் விரைவில் தீர்மானிக்கப் படும் என்றும் கூறினார்.
   
மேலும், இனி ஏர்லைன்ஸ் விமானங்கள் ஏர்லைன்ஸ் ஹப் என்று மாற்றப் படும் என்றும் கூறினார். தவிர, நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான சூழலில் இருப்பதாகவும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.