ஞாயிறு, 7 அக்டோபர், 2012

மது ஒழிப்பு பிரச்சார பேரணி - SDPI

மது ஒழிப்பு பிரச்சார பேரணிசோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் மது ஒழிப்பு பிரசார மனித சங்கிலி போராட்டம் பழைய பஸ் நிலைய காந்தி சிலை அருகில் நடைபெற்றது.
 
தமிழகத்தில் முற்றிலும் மதுபானங்களை அகற்ற வேண்டுமென வலிறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முஹமது ரபீக் தலைமை வகித்தார்.
 
மாவட்ட பொதுச்செயலர் காஜா செரீப் கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் மாவட்டத் துணைத்தலைவர் சாகுல் அமீது மாவட்ட செயலாளர் சித்திக் பாட்ஷா மேற்கு மாவட்ட செயலாளர் அயூப்ஹான் நகர தலைவர் இப்ராஹிம் நகர செயலர் ஹிதாயத்துல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர்.