ஞாயிறு, 7 அக்டோபர், 2012

மக்கள் நலனுக்காக தொடர் போராட்டங்கள். மனிதநேய மக்கள் கட்சி நிர்வாக குழுவில் அதிரடி முடிவுகள்


                              மமக வின் தலைமை நிர்வாக குழு கூட்டம் இன்று (06-10-2012) சென்னையில் நடைபெற்றது. அதில் தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை, நலன்களை முன்வைத்து பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

1. காவிரி நதிநீரில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் செயல்படும் கன்னட வெறியர்களை கண்டித்து டெல்டா பகுதியான திருவாரூரில் எதிர்வரும் அக்டோபர் - 16 அன்று தலையில் கருப்பு முண்டாசு கட்டிக்கொண்டு அறவழி போராட்டம் நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் விவசாய பெருமக்களை பெருமளவில் பங்கேற்க செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2. கூடங்குளம் அணு உலைக்கு எதிராகவும், இரட்டை வேடம் போடும் தமிழக அரசை கண்டித்தும் எதிர்வரும் அக்டோபர் - 29 அன்று தமிழக சட்டசபையை முற்றுகையிடுவது என்றும், இதில் கூடங்குளம் போராட்டக்குழுவில் அங்கம் பெற்றிருக்கும் கட்சிகள் மற்றும் இயக்கங்களோடு கூட்டாக முற்றுகை போராட்டத்தை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

3. எதிர்வரும் நவம்பர் 3 அன்று மமக வின் உள்ளாட்சி பிரதிநிதிகளை அழைத்து திருச்சியில் ஒருநாள் முகாமை நடத்துவது என்றும், இதில் அவர்களது ஒரு வருட பணிகளை ஆய்வு செய்வது என்றும், அவர்களுக்கு தேவையான அலோசனைகளை வல்லுனர்கள் மூலம் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மமக வின் பணிகள் மேலும் செம்மைப்படுதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

4. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக நவம்பர் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை தமிழகமெங்கும் தெருமுனை பிரசாரங்களையும், அதையொட்டிய பரப்புரைகளையும் மேற்கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

5. நாட்டு மக்களை நேரடியாக பாதிக்கும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரத்தை நவம்பர் 23,24,25 ஆகிய தேதிகளில் துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர், நவம்பர் இரண்டு மாதங்களிலும் மமக நடத்தும் மக்கள் நல போராட்டங்கள் தமிழகத்தின் கவனத்தை திருப்பும் என்பதில் ஐயமில்லை.

இதோ களத்தை நோக்கி புறப்பட தொடங்கி விட்டார்கள் மமக வின் படை வீரர்கள்.