திங்கள், 8 அக்டோபர், 2012

சென்னையில் ஹஜ் பயணிகள் விமானம் திடீர் விபத்து!
சென்னையில் ஹஜ் பயணிகள் விமானம் விபத்து!சென்னை விமானநிலையத்தில் நின்றுகொண்டு இருந்த ஏர் இந்தியா விமானம் திடீரென விபத்துக் குள்ளானது.இதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசம...ாக உயிர் தப்பினர்.

சென்னையிலிருந்து சவூதி அரேபியா ஜித்தாவிற்கு, செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் இன்று காலை 10:30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. இதில் ஹஜ் பயணிகள் 421 பேர், சோதனை முடிந்து விமானத்தில் அமர்ந்திருந்தனர்.

பயணிகளின் சரக்குகளை ஏற்றி வரும் டிராக்டர் எதிர்பாராதவிதமாக, விமானத்தின் மீது மோதியது இதனால் விமானம் குலுங்கியது, மேலும் உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அதிலிருந்த ஹஜ் பயணிகள் அனைவரும் உடனே விமானத்திலிருந்து இறக்கப் பட்டு விமான நிலையத்துக்கு மீண்டும் அழைத்து வரப் பட்டனர்.


இதனை தொடர்ந்து குறிப்பிட்ட ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப் பட்டதாக அறிவிக்கப் பட்டது.


இதேபோன்று பல தடவை சென்னை விமான நிலையத்தில் டிராக்டர் மோதிய விபத்துகள் நடைபெற்றது குறிப்பித்தக்கது
,

Thanks to inneram