ஞாயிறு, 3 ஜூன், 2012

கின்னஸ் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழ் நாட்டின் புத்திசாலி மாணவி

இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் பாளையங்கோட்டையை சேர்ந்த 11 வயது மாணவி இன்ஜினியரிங் படிப்பு முடித்தவர்கள் எழுத வேண்டிய எம்.சி.பி., மற்றும் சி.சி.என்.ஏ., தேர்வுகள்உட்பட ஏழுதேர்வுகளை எழுதி சாதனைபடைத்துள்ளார்.
மேலும் இப் பெண்ணின் பெயர் விசாலினி வயது 11. இவர் பாளையங் கோட்டையில் உள்ள ஐ.ஐ.பி.இ., லட்சுமிராமன் மெட்ரிக் குலேஷன் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த பெண் சாதாரண மனிதர்களை விட நுண்ணறிவுத்திறன் (ஐ.க்யூ.,) அதிகம் உள்ளதால், நான்கு வகுப்புகளை இரண்டு ஆண்டுகளில் படித்து தேர்ச்சி பெற்றதன் மூலம், 11 வயதில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு இரண்டரை வயதாகும் போது இவரை பரிசோதித்த மருத்துவர் மற்றவர்களை விட நுண்ணறிவுத்திறன் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். சாதாரண மனிதர்களுக்கு நுண்ணறிவுத்திறன் அளவு, 90லிருந்து 110 வரை இருக்கும்.
ஆனால் விசாலினியின் ஐ.க்யூ., அளவு, 225 வரை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புனேயில் உள்ள நிறுவனம் ஒன்றும், விசாலினியின் ஐ.க்யூ., அளவு, 225 ஆக இருப்பதை, உறுதிசெய்துள்ளது.
விசாலியின் இந்த உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கு, 14 வயது பூர்தியாகியிருக்க வேண்டும் என்பதாலும், இவருக்கு தற்போது 11 வயது தான் ஆகிறது என்பதால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.