சனி, 2 பிப்ரவரி, 2013

நடுநிசி தீர்ப்பு! புறக்கணிக்கப்படும் நியாயம்!

 
 
சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு எதிரான வழக்குகள் இந்தியாவில் உடனே முடிக்கப்பட்டு இதுபோல் இரவோடு இரவாக தீர்பளிக்கப்படும்.
அதே நேரம் பாபர் மசூதியை இடித்து இந்தியாவில் பல்வேறு மதக்கலவரங்களை ஏற்ப்படுத்தி, தொடர் குண்டு வெடிப்புகளில் பங்கு கொண்ட ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு எதிராக ஊடகங்களும், நீதி துறையும், அரசு இயந்திரங்களும் மவுனம்காக்கும்.
 
இந்தியாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் நிரூபிக்கப்பட்டடு, உள்துறை அமைச்சர் நேரிடையாக குற்றம் சுமத்திய பின்னரும் கூட அந்த இயக்கங்களை தடை செய்ய முடியவில்லை. சம்மந்தப்பட்ட இயக்கங்கள் தங்களை தடை செய்து பாருங்கள் என்ன நடக்கும் என்று சவால் விடுகின்றன. ஆனால் முதுகெலும்பில்லாத காங்கிரஸ் அரசோ மவுனம் காக்கிறது. இதை பற்றி எல்லாம் கமலஹாசன் படம் எடுக்க மாட்டார்.
 
சமகாலத்தில், கண்முன்னே நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் ஹிந்துத்துவாவினர் கைது செய்யப்பட்டு, அவர்கள் RSS மற்றும் பாரதிய ஜனதாவுடன் தொடர்புடையவர்கள் என்பதும் நிருபனம் ஆகிவிட்டது. மேலும், அவர்கள காடுகளில் பயிற்சி எடுத்த முகாம்களை தேசிய புலனாய்வு துறையினர் தேடி வருகின்றனர். இத்தருணத்தில் கமலஹாசனும், தினமலர், தினமணி வகைறாக்களும் அதை பற்றி எழுதாமல், பேசாமல், ஆப்கானிஸ்தானில் நடக்கும் பயங்கரவாதம் குறித்து பேசுவது ஏன்?
 
சித்தாந்த ரீதியாக தாங்கள் ஆதரிக்கும் கொள்கைக்கு வலுசேர்க்க, RSS, ஹிந்துத்துவா இயக்கத்தினர் செய்த பயங்கரவாத செயல்களை மறைக்க என்று எடுத்து கொள்ளலாமா? உள்நாட்டில் ஹிந்துத்துவா தீவிரவாதம் நிகழ்த்திய கலவரங்களையும், குண்டு வெடிப்புகளையும், கூட்டு படுகொலைகளையும் பற்றி விஜயக்காந்த், அர்ஜூன், கமலஹாசன் போன்றோர் இதுவரை ஒருபடமாவது எடுத்ததுண்டா? விஸ்வரூபத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மறைமுகமாக ஹிந்துத்துவாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களே!
எங்கே போனது கருத்து சுதந்திரம்:
 
1). பர்ஸானியா திரைப்படம்: இது குஜராத் கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். இது கமலின் விஸ்வரூபம் போல் இல்லாமல் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இந்த படத்தை குஜராத்தில் வெளியிட முடியாமல் தடை செய்யப்பட்டது.
 
2). DAM 999 திரைப்படம்: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டுடன் டேம் 999 திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதாக எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக தடை செய்யப்பட்டது.
 
3). விருமாண்டி திரைப்படம்: இந்த படத்திற்கு முதலில் சண்டியர் என்றுதான் பெயர் வைக்கப்பட்டது. டாக்டர். கிருஷ்ணாசாமியின் எதிர்ப்பு காரணமாக இந்த படத்தின் பெயர் விருமாண்டி என்று மாற்றப்பட்டது.
 
4). கீதை திரைபடம்: விஜய் நடித்த கீதை படம் எதிர்ப்பின் காரணமாக புதிய கீதை என்று மாற்றப்பட்டது. படத்துக்கு திருச்சி, மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் விஜயை கிருஷ்ணர் வேடத்தில் சித்தரித்திருந்தனர் என்று இந்து முன்னணி, சிவசேனா ஆகிய அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களை கிழித்தனர்.

5). பாபா திரைப்படம்: ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தின் பாடல் வரிகள் எதிர்ப்பு சம்மந்தமாக மாற்றப்பட்டது. இந்த படத்துக்கு எதிராக பாமக வினர், ரஜினியின் கொடும்பாவியை எரித்தனர். தியேட்டர்களுக்கு சென்று படத்தை ஓட விடாமல் கலாட்டா செய்தனர். ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தியேட்டரைத் தாக்கி “பாபா” படப்பெட்டியை சிலர் கடத்திச் சென்றனர். விருத்தாசலத்தில் படத்தைத் திரையிட்ட உரிமையாளர் கடத்தப்பட்டார்.
 
6). நடிகை குஸ்பு: இவர் கற்பு பற்றி பேசிய விசயத்தில் அவரின் உருவ படத்தை கொளுத்தி தமிழகத்தின் பல மாவட்ட நீதிமன்றங்களில் இவர் மீது வழக்குகள் தொடர்ந்தனர். பல்வேறு பெண்கள் அமைப்புகள் இவரது உருவப்படத்திற்கு செருப்பு மாலை போட்டு, விளக்கு மாற்றால் அடித்தனர்.
 
7). நடிகை திரிஷா: இவர் சமர் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இந்த காலத்து பெண்கள் மது அருந்துவது அவர்களது சொந்த விருப்பம் நாம் அதில் தலையிடக் கூடாது என்று கருத்து சொன்னார். இதற்க்கு இந்து மக்கள் கட்சியினர் திரிஷா இதற்க்கு மன்னிப்பு கேட்க்க வேண்டும் மீறினால் அவருக்கு மது பாட்டில்களை பார்சலில் அனுப்பி வைப்போம் என்றனர்.
 
8). நடிகை புவனேஸ்வரி: இவர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவர் மேலும் பல நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக சொல்லி நடிகைகளான வினிதா, நளினி, மஞ்சுளா, சீதா, ஸ்ரீப்ரியா, ஷீலா, அஞ்சு ஆகியோரிகளின் லிஸ்டை கொடுத்தார் என தினமலர் படத்தோடு செய்தி வெளியிட்டது. இதை எதிர்த்து நடிகைகளும், நடிகர் சங்கமும் என்று மொத்த திரையுலகமும் எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என்று பிரமாண்டமான போராட்டங்கள் நடத்தினர்.
 
9). ஓவியர் ஹுசைன்: இவர் உலக புகழ் பெற்ற ஓவியர்களில் ஒருவர். இவர் இந்து பெண் தெய்வங்களை ஆபாசமாக படம் வரைந்தார் என்று இவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இவர் மீது 3 மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனால் இவர் நாட்டை விட்டே சென்றார். பின்னர் இவர் மீது தொடரப்பட்ட வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றம் இவர் மீது தொடரப்பட்ட வழக்கு அடிப்படை ஆதாரமற்றது என்று தள்ளுபடி செய்தது.
இது போன்ற பல்வேறு சம்பவங்களை சொல்லலாம், அப்பொழுதெல்லாம் கருத்து சுதந்திரம் பற்றி பேசாத கூட்டம் இன்று சிறுபான்மை மக்கள் என்றதும் கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறது. தமிழ் கலாச்சாரத்திற்கு Living Together அதாவது கல்யாணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது என்கிற மேலை நாட்டு நாகரிகத்தை தந்த அற்புத கலைஞசர்தான் நமது விஸ்வரூபம் தந்தவர்.
 
*தீவிர ஹிந்துத்துவா ஆதரவாளர் நடிகை கவுதமியோடு இணைந்ததும் இவர் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்*

 
*மலர் விழி*