வியாழன், 31 ஜனவரி, 2013

விஸ்வரூபம் பற்றி ஹிந்து சகோதரர் மேலூர் ராஜா அவர்களுக் நன்றி


25947_245581792244875_1323638096_n
முஸ்லிம் சமுதாயத்திற்காக குரல் கொடுக்கும் ஹிந்து சகோதரர் மேலூர் ராஜா அவர்களுக்கு முஸ்லிம் சமுதாய மக்கள்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.சினிமாவை சினிமாவாக பார்ப்போம்னு சொல்றாங்க,அப்புறம் ஏன் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகளா சித்தரிக்கனும்?சினிமாதானே,உண்மையில்லையே ஒரு கற்பனைக்காக என்று இந்துக்களை தீவிரவாதிகளா சித்தரித்து ஒருதடவை எடுக்கலாமே?

(உண்மையில் இந்து தீவிரவாதிகளும் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்)
முதலில் சினிமாவை சினிமாவாக பார்க்கும் சூழல் இங்கு உள்ளதா?இன்னும் முதல்வர்களை தமிழ்சினிமாவில் இருந்தே தேர்ந்தெடுக்கும் மனமுதிர்ச்சியில்தானே தமிழன் இருக்கிறான்?
முஸ்லிம்கள் விவாகாரம் வந்தவுடன் மட்டும் பல நடுசென்டர்கள்,கருத்து சுதந்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆடுவதை பார்க்கும் போது அச்சமாகவே இருக்கிறது.

அமெரிக்காவில் கருத்து சுதந்திரம் என்று போர்னோகிராபிகள் கூடத்தான் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டு ஓடுகின்றன.அது போல் இங்கும் கருத்து சுதந்திரம் செய்யலாமே? பரிந்துரைப்பீர்களா? மாட்டீர்கள் ஏன்? ஒரே ஒரு நிமிடம் சிந்தித்தால் உங்களுக்கு எல்லாமே புரியும்.ஆனால் மாட்டிக் கொண்டது முஸ்லிம்கள்,அதனால் மௌனம் சாதிப்பீர்கள். இதே சூழலில் இந்துத்துவ இயக்கங்கள் இருந்திருந்தால் இந்த திடீர் கருத்து சுதந்திர ஆதரவுவாதிகள் என்ன செய்திருப்பார்கள்? திருடனுக்கு தேள்கொட்டியது போல் இருந்திருக்கும். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற இந்து இயக்கங்கள் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்ட செய்திகள் வருகின்றன. உள்துறை அமைச்சர் காவி தீவிரவாதம் என்று சொன்னதற்கே பரிவாரங்கள் சாமியாடுகின்றன.பாராளுமன்றத்தையே இயங்கவிடாமல் தடுப்போம் என்று பிஜேபி மிரட்டுகிறது.இந்து தீவிரவாதத்தை வைத்து படம் எடுக்க இதே கமல் முன்வருவாரா? படம் எடுப்பது இருக்கட்டும், அதைப்பற்றி பேசித்தான் பார்க்கட்டுமே,அப்புறம் தெரியும் உங்கள் கருத்து சுதந்திரத்தின் லட்சணம்.

குஜராத் கலவர வழக்குகளின் நிலையை அறிவீர்கள். அதே நேரத்தில் கோத்ரா வழக்குகள் எவ்வளவு வேகமாக நடத்தி முடிக்கபட்டன என்றும் அறிவீர்கள்,மும்பை கலவரம் குண்டுவெடிப்பு,கோவை கலவரம்,குண்டுவெடிப்பு எல்லாம் இதுபோலவே கையாளப்பட்டன.குஜராத்,மும்பை, கோவை என்று நீதி மறுக்கப்பட்டு வரும் நிலையில் திரைத்துரை, மீடியாக்கள், பத்திரிக்கைகள் அனைத்தும், இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே முஸ்லிம்களை தவறான கண்ணோட்டத்திலேயே சித்தரித்து வருகின்றன. இதே கமலின் உன்னைப்போல் ஒருவன் முஸ்லிம்களை எப்படியெல்லாம் காயப்படுத்தும் விதமாக இருந்தது என்பதையும் பெரும்பாலோனோர் அறிவோர்கள்.அதைத் தொடர்ந்து துப்பாக்கி படம். அதன் தொடர்ச்சியான விளைவே இந்த விஸ்வரூப எதிர்ப்பும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
சற்று நேரம் அவர்கள் பக்கம் இருந்து புரிந்து கொள்ள முயல்வோம்.காயப்பட்டுக்கிடக்கும் ஒரு சமூகத்தை இப்படி அன்னியப்படுத்த வேண்டாம். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வக்கிரங்களை ஆதரிக்க வேண்டாம்.

யதார்த்தை பிரதிபலிக்கிறோம் என்கிறார்களே சினிமாக்காரர்கள்,குஜராத்தில் எப்படியெல்லாம் அப்பாவிகளும், பெண்களும் குழந்தைகளும் ஓட ஓட விரட்டி,வெட்டி, எரித்து கொல்லப்பட்டார்கள் என்று படம் எடுக்க வேண்டியதுதானே? 10 ஆண்டுகள் ஆகியும் எவனும் மூச்சுக்கூட விடவில்லையே? ஏன்?

சமூகதளங்களில் ரஜினையையோ,விஜயையோ விமர்சித்துப்பாருங்கள்.எவ்வளவு தரக்குறைவான தாக்குதல்கள் வருகின்றன என்று பார்க்கலாம்.இப்படிப்பட்ட முதிர்ச்சியான சமூகத்தை வைத்துகொண்டு விஷப்பரிட்சைகள் எதற்கு? ஏன் இந்த விஷ்வரூபம் தடை செய்யப்பட்டதற்கே கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் எத்தனை பேர் விஷம் கக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கின்றீர்கள்தானே?
சர்ச்சையான விஷயங்களை ஆரோக்கியமாக விவாதிக்கும் அளவுக்கு மனமுதிர்ச்சியான சமூகமாக நாம் மாறும் வரையில் இது போன்ற தடைகள் அவசியமே

- http://vkalathur.info