சனி, 4 ஆகஸ்ட், 2012

தெரியாத சில உண்மைகள்!


இந்தியா முழுவதும் தொடர்ந்து குண்டு வெடிப்புகளை நடத்திய ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீண்டும் நாசகார வேலைகளை செய்ய தீவிர பயிற்சி எடுத்து வருகிறது

புனேயில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பிற்கும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  புனே தொடர் குண்டுவெடிப்பில் சைக்கிள் குண்டில் வெடிப்பொருளாக அம்மோனியம் நைட்ரேட் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக, ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புகள்தாம் அம்மோனியம் நைட்ரேட்டை பயன்படுத்தி குண்டுகளை தயாரித்து வந்துள்ளனர்.  மலேகானில் 2006-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பிலும்  இதே பாணி கடைப்பிடிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயங்கரவாத முகம்: சுதந்திரத்திற்கு பின்பு ஹிந்து முஸ்லிம் கலவரங்களை உண்டாக்கி இந்தியா பாக்கிஸ்தான் என்று பிரிய காரணமாக இருந்தனர். தேசத்தந்தை அண்ணல் காந்தியை கொன்றனர்.

நெல்லி, பாகல்பூர், பீவாண்டி, மும்பை, குஜராத், ஒரிசா, கோவை போன்ற கலவரங்களை நடத்தி சிறுபான்மை மக்களை கொன்று குவித்தனர். அது போதாது என்று இந்தியா முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி அந்த பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி அவர்களை குற்றப்பரம்பரை ஆக்கினார்கள்.

சேது சமுத்திர திட்டம் முதல் அணுவுலை எதிர்ப்பு போராட்டங்கள் வரை மக்களின் அடிப்படை நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இப்படி பட்ட ஒரு நாசகார இயக்கமாகிய ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கிளை அமைப்புகளை தடை செய்யவேண்டும் என்பதே நடுநிலை பேணும் ஒவ்வொரு ஹிந்துக்களின் எண்ணமாகும் இதை உடனே இந்திய அரசு செய்யுமா?

*மலர்விழி*