திங்கள், 30 ஜூலை, 2012

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீ விபத்து குறித்த தகவல்கள் அறிய உதவி எண்கள்...


                             டெ‌ல்‌லி‌யி‌ல் இரு‌ந்து கட‌ந்த ச‌‌னி‌க்‌கிழமை இரவு 10.20 ம‌ணி‌க்கு செ‌ன்னை‌க்கு புற‌ப்ப‌ட்டு வ‌ந்த த‌மி‌ழ்நாடு எ‌க்‌ஸ்‌பிர‌ஸ் இர‌‌யி‌ல் ஆ‌ந்‌திர மா‌நில‌ம் நெ‌ல்லூ‌ர் அருகே இ‌ன்று அ‌திகாலை 4.30 ம‌ணி‌க்கு வ‌ந்தபோது எ‌‌ஸ்11 எ‌ன்ற பெ‌ட்டி‌‌யி‌ல் ‌திடீரென ‌தீ‌ப்‌பிடி‌த்து எ‌ரி‌ந்தது.
இ‌ந்த பெ‌ட்டி‌யி‌ல் 72 பய‌ணிக‌ள் இரு‌ந்தன‌ர். அ‌திகாலை நேர‌ம் எ‌‌ன்பதா‌ல் பய‌ணிக‌ள் அனைவரு‌ம் தூக்கத்தில் இருந்தனர். இதனா‌ல் ‌தீ எ‌ரிவதை அவ‌ர்க‌ளு‌க்கு தெ‌ரிய‌வி‌ல்லை. ‌
இத‌ற்கு‌ள் 47 பே‌ர் உட‌ல் கரு‌கி உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். ‌இதுவரை 21 பே‌ரி‌ன் உட‌ல்க‌ள் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌ல் ப‌லி எ‌ண்‌ணி‌‌க்கை அ‌திக‌ரி‌க்கு‌ம் எ‌ன்று அ‌ஞ்ச‌ப்படு‌கிறது.
‌மி‌ன் க‌‌சிவு காரணமாக ‌தீ ‌விப‌த்து ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கலா‌ம் எ‌ன்று முத‌ல் க‌ட்ட ‌விசாரணை‌யி‌ல் தெ‌ரியவ‌ந்து‌ள்ளது
ரயிலின் எஸ் 11 பெட்டியின் இரண்டு கதவுகளையும் திறக்க முடியாத அளவுக்கு அவை ஜாம் ஆகி விட்டதால்தான் பலர் தீயில் சிக்கி உயிரிழந்ததாக விபத்தில் சிக்கி உயிர் தப்பியவர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தீவிபத்து குறித்து தகவல்கள் அறிய சிறப்புத் தகவல் மையம்
கீழ்க்கண்ட எண்களுடன் தொடர்பு கொண்டு தங்களது உறவினர்கள் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.

சென்னை

சென்னை சென்டிரல் 044- 25357398 செகந்திராபாத்: 040-27786723, 27700868; விஜயவாடா: 0866-2345863, 2345864 நெல்லூர்: 0861-2331477, 2576924

டெல்லி

டெல்லி 011-23342954, 23341072, 23341074; ஹஸரத் நிஜாமுதீன் 011-24359748