ஞாயிறு, 29 ஜூலை, 2012

மாணவனை சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக புகார்: கைதான ஆசிரியர்கள் 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு

மாணவனை சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக புகார்: கைதான ஆசிரியர்கள் 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு


                                    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழன்மாளிகையை சேர்ந்தவர் தேசிங்குராஜன் மகன் பரத்ராஜ் (வயது 14). இவர் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்துவந்தார்.

கடந்த 19-ந்தேதி இரவு மாணவர்கள் மாதாந்திர தேர்வுக்காக விடுதி அறையில் படித்துக்கொண்டு இருந்ததாகவும், அப்போது சிறுநீர் கழிக்க ஆசிரியரிடம் அனுமதி கேட்டபோது அவர் தன்னை அடித்து உதைத்தோடு சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாகவும் தனது தந்தையிடம் சென்று கூறினார்.

இதையடுத்து கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவர் பரத்ராஜ் அங்குள்ள போலீசாரிடம் இதுபற்றி தெரிவித்தார். அதன்பேரில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவலின் பேரில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் மல்லிகா, தொடக்க கல்வி அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் புகார் கூறப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கூறுகையில், பல்வேறு தீய பழக்கங்கள் கொண்ட மாணவர் பரத்ராஜை ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்கள் சிறுநீர் குடிக்க வைத்ததாக மாணவர் தவ றாக கூறியுள்ளார்.

ஆசிரியர்கள் தன்னை அடித்தார்களே தவிர சிறுநீர் குடிக்க வற்புறுத்தவில்லை என்று பரத்ராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனாலும் மாணவரை அடித்த ஆசிரி யர்கள் ராஜா, கருப்பையா, சக்திவேல் ஆகிய 3 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.

சம்பவம் குறித்து மங்கள மேடு இன்ஸ்பெக்டர் செல் வம் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர்கள் ராஜா, கருப் பையா, சக்திவேல் ஆகிய 3 பேரையும் மூவரையும் நேற்று மாலை கைது செய்தார். அவர்கள் மீது 294(பி) (தாக்கி காயப்படுத்துதல்) 324 (தகாத வார்த்தையால் திட்டுதல்) ஆகிய பிரிவுக ளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்ற நீதி பதி சுரேஷ் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு இரவு 11 மணிக்கு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


-maalaimala