ஞாயிறு, 29 ஜூலை, 2012

பெரம்பலூர் அருகே இன்று விபத்து: மரத்தில் ஜீப் மோதி இன்ஸ்பெக்டர் பலி


பெரம்பலூர் அருகே இன்று விபத்து: மரத்தில் ஜீப் மோதி இன்ஸ்பெக்டர் பலி

                       பெரம்பலூர் அருகே உள்ள மங்களமேடு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வம். (வயது 45). இவர் தற்போது திருவண்ணாமலைக்கு மாறுதல் செய்யப்பட்டு உள்ளார். இதையொட்டி நேற்று மாலை அவருக்கு வழியனுப்பு விழா நடந்தது. இந்த நிலையில் இன்று காலை போலீஸ் ஜீப்பில் திருச்சியில் இருந்து பெரம்பலூர் நோக்கி செல்வம் வந்தார். ஜீப்பை அவரை ஓட்டினார்.

சிறுவாச்சூர் என்ற இடத்தில் சென்றபோது ஜீப் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரம் நின்ற புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி இறந்தார்.

விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரிக்கின்றனர். இன்ஸ்பெக்டருக்கு செல்வி என்ற மனைவியும், மகள் ஷாலினி, மகன் நித்தீஸ் ஆகியோர் உள்ளனர். இவர்கள் சென்னையில் வசித்து வந்தனர். 

தகவல் அறிந்ததும் அவர்கள் பெரம்பலூர் விரைந்தனர். செல்வத்தின் உடலை பார்த்து அவர்கள் கதறினர். பலியான இன்ஸ்பெக்டரின் உடலுக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர், டி.எஸ்.பி சவுந்திரராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பலியான செல்வத்தின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் கோடகநல்லூர் ஆகும்-maalaimala