சனி, 7 ஜூலை, 2012

நாகரீக உடைகளை அணிந்து வாருங்கள்: ஆசிரியைகளுக்கு அரசின் திடீர் உத்தரவு

 

                     நமது கலாசாரத்திற்கு ஏற்பவும், பண்பாட்டுக்கு ஏற்பவும், நாகரீகமான முறையில் ஆசிரியைகள் உடை அணிய வேண்டும் என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்குநரகம் திடீரென ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளது.

பள்ளிகள் எல்லாம் திறந்து ஒரு மாதத்தைத் தாண்டியுள்ள நிலையில் இந்த உத்தரவு வந்திருப்பது ஆசிரியைகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் மாதம் 29ஆம் திகதி இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியைகள், ஆசிரியர்கள், வகுப்பறையில் நாகரீமான முறையில் உடையுடன் காணப்பட வேண்டும் என அறிவுறுத்துமாறு பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்துள்ளது.

நாகரீகமற்ற, நமது கலாசார, பண்பாட்டுக்குப் புறம்பான உடைகளை ஆசிரியர்கள், ஆசிரியைகள் அணியக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியைகள் மாணவியருக்கு நல்ல ரோல் மாடல்களாகத் திகழ வேண்டும். அப்போதுதான் மாணவியர்களும் ஆசிரியைகளைப் பின்பற்றி நடக்க முயற்சிப்பார்கள் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் சில ஆசிரியைகள் சரியில்லாத உடைகளுடன் வகுப்பறைகளுக்கு வருவதாக புகார்கள் வருவது வருத்தம் தருகிறது என்று அந்த சுற்றறிக்கை மேலும் கூறுகிறது.

மாணவியரையும், மாணவர்களையும் பாதிக்கும் வகையிலான உடைகளை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அணியக் கூடாது. அது பொதுமக்கள் மத்தியிலும் தவறான கருத்துக்களை ஏற்படுத்த வழி வகுத்து விடும் என்றும் அந்த சுற்றறிக்கை தெரிவிக்கிறது.

இருப்பினும் இந்த சுற்றறிக்கையில் என்ன மாதிரியான உடைகளை ஆசிரியைகள் அணிய வேண்டு