ஞாயிறு, 29 ஜூலை, 2012

மியன்மார் படுகொலைகளை விசாரிக்க ஐநா மனித உரிமை அமைப்பு கோரிக்கை



                     மியன்மார் படுகொலைகளை விசாரிக்க ஐநா மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் இலக்குவைக்கப் பட்ட படுகொலைகளை சுதந்திரமான முறையில் விசாரணை நடாத்தவேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவநீனம் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார் .
 
மியன்மாரில் பல ஆண்டுகளாக பங்களாதேஸ் வம்சாவளி ரோஹினிய முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் இடம்பெற்று வருகிறது . மியன்மார், ரோஹினிய முஸ்லிம்களை சட்டவிரோத குடியேற்றகாரர்கள் என்று அழைப்பதுடன். அவர்களை மியன்மார் மக்களாக அங்கீகரிக்க மறுப்பு தெரிவித்து வருகிறது .
மியன்மார் ஆசியாவின் பலஸ்தீன் என்று ஐநா வினால் வர்ணிக்கப்படுகிறது கடந்த ஜூன் 26 ஆம் திகதி முதல் 650 க்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகொலை செய்யபட்டுள்ளதுடன், 1200 பேர் காணாமல் போயுள்ளனர் .என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதேவேளை பங்களாதேஸ் எல்லையில் சுமார் 4 இலட்சம் மியன்மார் முஸ்லிம்கள் அகதிகளாக பங்களாதேஸ் அரசிடம் புகலிடம் கோரிவருகின்றனர் ஆனால் அவர்களுக்கு அகதி அந்தஸ்தை வழங்கி அவர்களை அகதிகளாக பராமரிக்க பங்களாதேஸ் அரசாங்கமும் மறுத்து வருகிறது
 
அண்மையில் மியன்மார் ஜனாதிபதி ரோஹிணிய முஸ்லிம்களை தனது நாடு மியன்மார் மக்களாக ஏற்றுகொள்ளாது என்றும் அவர்களை வேறு ஒரு நாட்டில் ஐநா குடியேற்ற வேண்டும் என்றும் , ஐநாவே அவர்களை பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் .


-ஏ.அப்துல்லாஹ்   Lankamuslim.org