ஞாயிறு, 29 ஜூலை, 2012

சவூதி அரேபியாவில் நர்ஸ் பணிகள் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு


21 பேருக்கு பணி நியமன ஆணை"சவூதி அரேபிய அமைச்சகத்தின் சுகாதார மருத்துவமனைகளில் செவிலியர் பணி செய்ய பெண்களுக்கு விண்ணப்பிக்கலாம்' என பெரம்பலூர் கலெக்டர் தரேஷ் அஹமது தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:


சவூதி அரேபிய அமைச்சகத்தின் சுகாதார மருத்துவமனைகளுக்கு பெருமளவில் தேவைப்படும் பெண் செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு டில்லி, கொச்சின் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.


பி.எஸ்.சி., தேர்ச்சியுடன் நான்கு வருட பணி அனுபவம் மற்றும் எம்.எஸ்.சி., தேர்ச்சியுடன் இரண்டு வருட பணி அனுபவம் உள்ள 40 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தகுதியுடையவர் ஆவர்.


தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு நிறைவான ஊதியத்துடன், இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம் ஆகியவை வேலையளிப்போரால் வழங்கப்படும்.


தகுதி மற்றும் அனுபவத்திற்குட்பட்டவர்கள், தங்களின் சுய விவரங்கள் அடங்கிய தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், ஃபாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளை நிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட 6 புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.


முகவரி; எண்.48, டாக்டர் முத்துலெட்சுமி சாலை, அடையாறு, சென்னை என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அலுவலகப் பணி நாட்களில் நேரிலோ அல்லது தபால் மூலம் உடனடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 09381800181, 044-24464267, 24464268 என்ற ஃபோன் நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.-dinamala