சனி, 15 டிசம்பர், 2012

புதியதலைமுறை தொலைக்காட்சியின் நேர்படபேசு நிகழ்ச்சியில் பேரா.ஜவாஹிருல்லாஹ் 30.11.2012 அன்று பங்கு பெற்றார்.

2 டிச., 2012 அன்று வெளியிடப்பட்டது
புதியதலைமுறை தொலைக்காட்சியின் நேர்படபேசு நிகழ்ச்சியில் பேரா.ஜவாஹிருல்லாஹ் 30.11.2012 அன்று பங்கு பெற்றார்.


கேப்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (வீடியோ)



11 டிச., 2012 அன்று வெளியிடப்பட்டது
தலைப்பு: இன்றைய அரசியல் நிலவரம், உரை: பேரா.ஜவாஹிருல்லாஹ், டிவி: கேப்டன் டிவி, நாள்: 09.12.2012,

வியாழன், 13 டிசம்பர், 2012

வி.களத்தூர் புஷ்ரா நல அறக்கட்டளை யின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மற்று மலர் வெளியீட்டு விழா - video

வி.களத்தூர் புஷ்ரா நல அறக்கட்டளை யின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மற்று மலர் வெளியீட்டு விழா

நாள் : 24-03-2012 சனிக்கிழமை நேரம் : மாலை 6:45 மணி
 

இடம் : கலிபா உமர் (ரலி) திடல் நடுத் தெரு வி.களத்தூர்  


vkalathur bushra01



vkalathur bushra02

 

vkalathur bushra03

 

vkalathur bushra04

 


புதன், 28 நவம்பர், 2012

பேஸ்புக்கில் கருத்து: 2 பெண்களுக்கு தண்டனை விதித்த மாஜிஸ்திரேட் திடீர் இடமாற்றம்: மும்பை ஐகோர்ட்

                                சிவசேனா தலைவர் பால்தாக்கரே மரணம் அடைந்ததைத் தொடர்ந்து மறுநாள் மும்பையில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. இதை மராட்டிய மாநிலம் பல்கர் நகரை சேர்ந்த 2 இளம்பெண்கள் பேஸ்புக் இணையத்தளத்தில் விமர்சனம் செய்திருந்தனர்.

சிவசேனா நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் அந்த 2 இளம்பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க பல்கர் மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ராமச்சந்திர பகடே உத்தரவிட்டார். பிறகு ரூ.15 ஆயிரம் ஜாமீனில் விடுவித்தார்.

இதற்கிடையே பேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட 2 பெண்கள் கைதானது நாடெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2 பெண்களுக்கு தண்டனை கொடுத்ததும் விமர்சனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு ராமச்சந்திர பகடே இன்று திடீரென பல்கர் மாவட்டத்தில் இருந்து ஜல்கான் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மும்பை ஐகோர்ட் வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், பேஸ்புக்கில் விமர்சனம் செய்த பெண்களை கைது செய்த எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தானே மாவட்ட எஸ்.பி. ரவிந்தர் செகாவ்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என அம்மாநில அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். பால்கர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீகாந்த் பிங்களேவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அமைச்சர் பாட்டீல் கூறியுள்ளார்.


நன்றி tmmk.info

செவ்வாய், 20 நவம்பர், 2012

"மும்பை : பால் தாக்கரே வழியில் பயணிக்கும் "பாசிச" போலீஸ்!



                                  மும்பை ரவுடி பால் தாக்கரே மரணத்தையொட்டி, 2 நாட்களாக நடத்தப்பட்ட கடையடுப்புக்கள், பால் தாக்கரே மீதான மரியாதையால் அல்ல, சிவசேனை ரவுடிகளின் பயத்தினால் தான் என்று, "ஃபேஸ் புக்"கில் கருத்து தெரிவித்ததால் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

மும்பையை சேர்ந்த 21வயது இளம்பெண் (சிங்கம்) "ஷாஹீன்" என்பவர், தெரிவித்திருந்த கருத்துக்கு "ரேணு" என்ற இன்னொரு இளம்பெண் "like" கொடுத்த பாவத்துக்காக அவரும் கைது செய்யப்பட்டார்.

கருத்து சுதந்திரத்துக்கு கடும் பங்கம் விளைவிக்கும் வகையில், 2000 சிவசேனை குண்டர்கள் அவரது வீட்டிற்கு வந்து ரகளை செய்தனர்.


நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர், உடனடியாக ஃபேஸ் புக்கில் தெரிவித்திருந்த கருத்தை நீக்கி விட்டதுடன் வருத்தம் தெரிவித்து புதிய கருத்தையும் பதிவு செய்துவிட்டார்.


என்றாலும் வெறியுடன் திரிந்த "சிவசேனை குண்டர்கள்" ஷாஹீனின் சிறிய தகப்பனாருக்கு சொந்தமான கிளினிக்கை அடித்து நொறுக்கி விட்டனர்.


அதிகார வர்க்கத்தினர், மேற்படி இரு பெண்களின் ஃபேஸ் புக் அக்கவுண்டையும் முடக்கிவிட்டனர்.


போலீசும் தன் பங்குக்கு "மத உணர்வுகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டது" மற்றும் "தகவல் தொழில்நுட்ப முறைகேடு" என (295A, 64A) ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


போலீசின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து, இரு பெண்களையும் தலா ரூ.15,000 ரூபாய் ரொக்க ஜாமீனில் விடுவித்தனர்.


மார்க்கண்டே கட்ஜூ கண்டனம் :


மகாராஷ்டிர போலீசின் கைது நடவடிக்கைக்கு "பிரஸ் கவுன்சில் தலைவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டே கட்ஜூ" கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.


இது தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,


முழு அடைப்புக்கு எதிராக கருத்து சொல்வதை, மத உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறுவது ஏற்க முடியாது.


அரசியல் சட்டம் 19-1ன் கீழ் இப்படி கருத்து தெரிவிக்க சுதந்திரம் இருக்கிறது.


நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம்.. பாசிச சர்வாதிகார ஆட்சி இங்கு நடைபெறவில்லை.


கைது செய்ய உத்தரவிட்ட போலீஸ் மீது உடனடியாக "சஸ்பெண்ட்" அல்லது "கைது" அல்லது "குற்றவியல் நடவடிக்கை" இதில் எது அதிகபட்சமோ, அந்த நடவடிக்கையை மேற்கொண்டாக வேண்டும்.


இதை நீங்கள் செய்ய முடியாத நிலையில் அரசியல் சாசனப்படி.. ஒரு அரசை நடத்த தகுதியற்றவராகிறீர்கள்.. இதற்குரிய சட்டவிளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார்.


- மறுப்பு மீடியா செய்தி