வியாழன், 30 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்து காரைக்காலில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்



 





                                                   அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் (பர்மா) தொடர்ந்து நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களில் இதுவரை மியான்மரில் 7000 முஸ்லிம்களும், அசாமில் 75 முஸ்லிம்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடைபெற்றுவரும் அஸ்ஸாம் இனபடுகொலையை தடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.
அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான இனபடுகொலையை கண்டித்தும், அஸ்ஸாம் இனபடுகொலையை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக காரைக்கால் பெரிய பள்ளி வாசலில் இருந்து பேரணி புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
.
பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முஹமது நஜிமுதீன் தலைமை வகித்தார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நெய்னா முஹமது, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன், மாவட்ட துணை தலைவர் நஜிமுதீன், மாவட்ட பொருளாளர் யூசுப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம், கழக பேச்சாளர் அபூ அஸ்லம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் காசிம், முஹமது மெய்தீன், ம.ம.க மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் நாசர், சாதிக் அலி, மாவட்ட அணி செயலாளர்கள் ராஜா முஹமது, முஹமது ஹசனுதீன், முஹமது ஜியாவுதீன், முஹமது இக்பால், முஹமது கபீர், முஹமது ஹுசைன் சாதிக், முஹமது ஜியாவுதீன், முஹமது இபுராஹீம், நகர பொருளாளர் சபுருதீன், நகரம் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் திருபட்டினம் ஹாஜா ஷேக் அலாவுதீன், முகமது ஆசிக், நிரவி யூனுஸ், ஹமீது சுல்தான், கருக்கங்குடி முஹமது அன்சாரி, திருநள்ளார் முகமது கனி, உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் முஹமது சிக்கந்தர் நன்றி கூறினார்.