ஞாயிறு, 18 நவம்பர், 2012

அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து மாநிலம் முழுவதும் நவம்பர் 23, 24, 25 தேதிகளில் ம.ம.க. பிரச்சாரம்!

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு : மமக கண்டனம்


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளது. இதையொட்டி வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்திய சில்லறை வர்த்தகத்தை ஆக்கிரமிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய சிறுகடை வியாபாரிகளும், வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டு அவர்களுடைய வாழ்வாதாரம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் முடிவினைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் வருகிற 23, 24, 25 ஆகிய தேதிகளில் துண்டுப் பிரசுர விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெற உள்ளது. இதில் வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

-ஜே.எஸ்.ரிபாயீ