புதன், 25 ஜூலை, 2012

மீண்டும் 1000 ரூபாய் நாணயத்தைப் புழக்கத்தில் விட மத்திய ரிசர்வ் வங்கி முடிவு                       கடந்த 2010 ஆம் ஆண்டு ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலின் 1000 மாவது ஆண்டுநிறைவு கொண்டாடப் பட்டது.
அப்போது அந்தநாளின் நினைவாக 1000 ரூபாய் நாணயத்தை மத்திய ரிசர்வ் வங்கி அச்சடித்தது. அது அப்போதைக்கு பொதுமக்களின் தேவைக்கு கொடுத்துவிட்டு பின்னர் நிறுத்தி வைக்கப் பட்டு இப்போது,மீண்டும் அந்த 1000 ரூபாய் நாணயத்தை பொதுமக்களின் புழக்கத்திற்கு விட மத்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அந்த 1000 ரூபாய் நாணயம் 80% வெள்ளி, 20 % காப்பரால் உருவானது. இந்த நாணயம் ஒன்றின் மதிப்பு 4 ஆயிரத்து 725 ரூபாய் என்று சொல்லப் படுகிறது. நாணயத்தின் ஒருபுறம் தஞ்சைப் பெரிய கோயில், இன்னொரு புறம் ராஜராஜ சோழ மன்னனின் உருவம் மற்றும் கவர்னர் கையொப்பம் என இருக்கும் என்று தெரிகிறது.

இந்த நாணயத்தை பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் என்று அத்தனையையும் பிரதிபலிக்கும் விஷயமாக அனைவரும் பார்ப்பதால், இதை வாங்கிப் பாதுகாக்க பலரும் முன்வருவார்கள் என்றும் மத்திய ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நாணயத்தை பொதுமக்கள் வாங்கும்படி மத்திய அரசு ஆன்லைனில் அறிவித்தல் விட ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.