செவ்வாய், 11 செப்டம்பர், 2012

பெரம்பலூரில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்

  அணிதிரள்வீர்!!!                      அணிதிரள்வீர்!!!                       அணிதிரள்வீர்!!!

                          
 கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறையைக் கண்டித்து பெரம்பலூர்  மாவட்ட மனித நேய மக்கள் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.தேதி :   11-09-2012
நேரம் : மாலை  4.00 மணியளவில்
இடம்:   பெரம்பலூர்  புதிய பேருந்து நிலையம் எதிரில்

கூடங்குளத்தில் காந்திய வழியில் போராடி வரும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, பத்திரிக்கையாளர்களையும் தாக்கிய காவல்துறையின் அராஜகப் போக்கை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இன்று 11-09-2012 மாலை 4..00 மணியளவில் பெரம்பலூர்  புதிய பேருந்து நிலையம் அருகில். மனிதநேய மக்கள் கட்சின் மாவட்ட செயலாளர்  M.S.M    சுல்தான் மொய்தீன் தலைமையில் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
போராட்டக்களத்தில் மனிதநேய மக்கள் கட்சியினரின் உரிமை கோஷங்கள்....

கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்
கூடங்குளம் மக்கள் மீது
தாக்குதல் நடத்திய காவல்துறையை
வன்மையாக கண்டிக்கிறோம்....

குழந்தைகளையும் பெண்களையும்
வெறிகொண்டு தாக்குவதா?
மக்கள் உரிமைகளை நசுக்குவதா?
கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்
வன்மையாக கண்டிக்கிறோம்.....

பத்திரிக்கை தோழர்களை
கடுமையாகத் தாக்கிய
காவல்துறையை கண்டிக்கிறோம்....

மன்னிப்பு கேள் மன்னிப்பு கேள்
மக்களிடம் மன்னிப்பு கேள்...

அனுஉலையை காக்கும் அரசாங்கமே
மக்கள் உயிர்களை அழிக்கலாமா?

காந்தி பிறந்த தேசத்தில்
அகிம்சை வழியில் போராடும்
கூடங்குளம் மக்களை
அடக்கி ஒடுக்குவது அநியாயம்!

ஜனநாயக உரிமைகளை பறிக்காதே...
மக்கள் போராட்டங்களை ஒடுக்காதே....

வெல்லட்டும் வெல்லட்டும்
கூடங்குளம் மக்களின்
உரிமை போர் வெல்லட்டும்.....

தமிழக மக்களே... தமிழக மக்களே...
கூடங்குளம் மக்களின்
உரிமை போராட்டத்தை ஆதரிப்போம்.

அமைதி வேண்டும் அமைதி வேண்டும்
கூடங்குளம் மக்களுக்கு
அமைதி வேண்டும்....

வெளியேற்று வெளியேற்று
கூடங்குளம் பகுதியிலிருந்து
காவல்துறையை வெளியேற்று....

-- இவண்
மனிதநேய மக்கள் கட்சி
தமிழ்நாடு