சனி, 15 செப்டம்பர், 2012

முஸ்லிம்களை மோசமாக சித்தரித்து அமெரிக்கா வெளியிட்ட திரைப்படத்திற்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான்- கி- மூன் கடும் கண்டனம்


                                                    முஸ்லிம்களை மோசமாக சித்தரித்து அமெரிக்கா வெளியிட்ட திரைப்படத்திற்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான்- கி- மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

இது பற்றி பான்- கி- மூன் கூறுகையில், இந்த திரைப்படம் கொலை முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
 

ஐ.நா உயர் பிரதிநிதி ஜார்ஜ் காம்பியோ, இவ் விவகாரம் குறித்து அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் கிளிண்டனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் தற்போது ஏற்பட்டுள்ள வெறுப்பான சூழ்நிலை, ஆபத்தான நிலைமை மற்றும் தாக்குதல்கள், மத அடிப்படையிலான வன்முறைகள் ஆகியவை கவலை அளிப்பதாகஉள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
 

மேலும் ஐ.நா பாதுகாப்பு சபையும், 15 நாடுகளின் பிரதிநிதிகளும் இவ்வாறான வன்முறை சம்பவங்களுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.