வியாழன், 13 செப்டம்பர், 2012

இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படம் - முஸ்லிம்கள் கொந்தளிப்பு (படங்கள் இணைப்பு)                                        இஸ்லாத்தையும், முஸ்லிம்கள் உயிரினும் மேலாக கருதும் இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் அவமதிக்கும் விதமாக அமெரிக்காவில் இருந்து வெளியான திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக லிபியாவில் ஆவேசமடைந்த மக்கள் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்திய தாக்குதலில் தூதரக அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவில் வசிக்கும் யூதர் கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவனும், புனித திருக்குர்ஆன் பிரதியை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த கிறிஸ்தவ வெறியன் பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவனும் இந்த ”Innocence of Muslims”  என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படம் குறித்து உலகம் முழுவதும் சோசியல் நெட்வர்க் தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு எதிராக எகிப்து, லிபியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காலையில் இருந்தே எகிப்து தலைநகர் கெய்ரோவில்உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பும், லிபியாவின் பெங்சாய் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்

லிபியாவில் தூதரகத்தின் மீது ராக்கெட் குண்டுகளாலும் துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடத்தியபடி திடீரென உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் கடும் தாக்குதலை நடத்தினர். இதில் ஒரு அமெரிக்க அதிகாரி கொல்லப்பட்டார். மேலும் பலருக்கு கை, கால்கள் உடைந்தன. அமெரிக்கக் கொடியை கிழித்து வீசியதோடு, தூதரகத்தையும்சூறையாடி, தீ வைத்தனர்.

இதையடுத்து லிபிய ராணுவம் விரைந்து வந்து நிலைமையைக்கட்டுப்படுத்தி மற்ற அமெரிக்கர்களை மீட்டு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்றது. அதே போல எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அமெரிக்க  தூதரகத்துக்குள் நுழைந்து அந் நாட்டின் கொடியை கிழித்து எறிந்து, கருப்புக் கொடியை ஏற்றி போராட்டத்தில்ஈடுபட்டனர்.