வியாழன், 13 செப்டம்பர், 2012

காவிதலைவனுக்கு கனிவான வேண்டுகோள்:

ஏழை ஹிந்து மாணவர்களுக்கும்
உதவித்தொகை வழங்க கோரி நீங்கள் நடத்திவரும் போராட்டம் என்பது மக்களை திசை திருப்பும் செயல்,பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை கலக்கும் தந்திரம் என்பதை எங்களைவிட தாங்களே நன்கறிவீர்கள்!
உங்கள் கட்சியையும் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் வளர்க்க காலங்காலமாக மக்களை பிரித்தாளும் சூழ்ச்சிகள் செய்து கலவரங்கள் நடத்தி அதன் நெருப்பில் குளிர்காய்வது உங்கள் இயல்பு என்பது உலகமே நன்கறியும்!

உண்மையாகவே உங்களுக்கு

ஏழை ஹிந்துக்களின் மீது அக்கரை இருக்குமேயானால்
கீழே நான் குறிப்பிடும் விஷயங்களுக்கு போராடி
ஏழை ஹிந்துக்களின் வாழ்வில் ஒளியை ஏற்றுங்கள்!

 
(உங்கள் கணக்குப்படி இவர்களும் ஹிந்துக்களே)

1-நேற்று நரிக்குரவனாக இருந்தவன் இஸ்லாத்தை ஏற்றவுடன்
இன்று அவனால் பள்ளிவாசலில் இமாமாக நின்று தொழுகை நடத்திவைக்க
முடிவதைப்போல்
அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க கோரி மாபெரும் போராட்டம் நடத்துவீர்களா?

2-சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுதந்திரமாக தேவாரம் பாட ஒதுவார் ஆறுமுகச்சாமியை அனுமதிக்காத

பார்ப்பனர்களை கண்டித்தும்
அவர்களை கைது செய்யக்கோரியும் போராட்டம் நடத்துவீர்களா?

3-கிராமங்களில் இன்றும் நிலுவையில் உள்ள இரட்டை டம்லர் முறை

மேல்ஜாதிக்காரர்களின்
தெருக்களில் தாழ்த்தப்பட்ட
மக்கள் தடை,
தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு சுடுகாடு இன்றி பிணத்தை தூக்கி கொண்டு அலையும் அவலநிலை போன்றவற்றை கண்டித்து போராட்டம் நடத்துவீர்களா?

4-பாப்பாபட்டி

கீரிப்பட்டி போன்ற சாதி ஹிந்துக்களின் ஆதிக்கத்தை ஒழித்து அங்கே தேர்வாகும் தலித் பஞ்சாயத்து தலைவர்களை சுதத்திரமாகவும்
பாதுகாப்பாக வாழவும் வலியுருத்தி போராட்டம் நடத்துவீர்களா?

5-தலித் பஞ்சாயத்து தலைவியின் வாயில் மலத்தை திணித்த சாதி ஹிந்துக்களை கைது செய்து கடுமையாக தண்டிக்க கோரி போராட்டம் நடத்துவீர்களா?


6-பிணத்தைக்கூட புதைக்க இடமில்லாமல் அலையும் தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களுக்கு இட வசதி செய்து தரக்கோரி ஆர்பாட்டம் நடத்துவீர்களா?


7-உயர்சாதியினர்களின்

தெருக்களில் செருப்பில்லாமல் நடக்க பணிக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் பரிதாப நிலையை போக்க மற்றும் இதன்மீது நடவடிக்கை கோரி ஆர்பாட்டம் நடத்துவீர்களா?

8-சேரிகளை ஒழித்து சகலவசதிகள் உள்ள பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களை குடியமர்த்தக்கோரி ஆர்பாட்டம் நடத்துவீர்களா?


9-சாக்கடை சுத்தம் செய்வது,செருப்பு தைப்பது போன்ற இழிவான தொழிலில் தாழ்த்தப்பட்ட மக்களை ஒருபோதும் ஈடுபடுத்த கூடாது என மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் ஆர்பாட்டம் நடத்துவீர்களா?


10-ஆளுனர்

அட்வகேட் ஜெனரல்
அட்டர்னி ஜெனரல்
தலைமச்செயலாளர்
உள்துறை செயலாளர்
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
வெளியுரவுத்துறை செயலாளர்
ப்ரதமரின் பாதுகாப்பு அதிகாரி
மேலைநாடுகளுக்கான தூதர்கள் போன்ற பெரிய பொருப்புகளில் பார்ப்பான்களை அகற்றி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை அதிகளவில் பணியமர்த்தக்கோரி ஆர்பாட்டம் நடத்துவீர்களா?


11-ஜாதிக்கொடுமை களுக்கு எதிராக கடுமையான கருப்புச்சட்டங்களை இயற்றக்கோரி ஆர்பாட்டம் செய்வீர்களா?


12-மதுரை மீனாட்சி கோவில் பாரத்தசாரதி கோவில்

திருப்பதி, சிதம்பரம், நடராஜர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர்,
காஞ்சிகாமாட்சி, ராமநாதபுரம் போன்ற பார்ப்பன ஆதிக்கம்வாய்ந்த கோவில்களின் கருவரைகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு நுழையும் போராட்டம் நடத்துவீர்களா?


சொல்லவேண்டுமென்றால்
இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம்!
காவித்தலைவர் அவர்களே உங்களுக்கு உண்மையாகவே ஹிந்துக்களின் மீது அக்கரையும்
பாசமும் பற்றும் இருந்தால் மேற்கூறப்பட்ட இந்த அனைத்து போராட்டங்களையும்
நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூகவிடுதலை மற்றும் சம உரிமைகள் பெற நடவடிக்கை எடுப்பீர்கள்!
அப்படியில்லை என்றால் மவனே ??!