ஞாயிறு, 29 ஜூலை, 2012

அஸ்ஸாம் முஸ்லிம்களை கொன்று குவிக்கும் போடோ விடுதலைப் புலிகள்

 குவஹாத்தி: ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள படிபாரா கானிப்பாஸா கிராமம் அன்றைய தினம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. காலை முதல் அங்குள்ள அனைவரும் கிராமத்தை பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். யாரும் அன்று வயலுக்கு வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகளை குடிசைக்குள் இருத்தி வாசலை மூடினார்கள்.

கால்நடைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். கலவரக்காரர்கள் கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருப்பது உறுதியானது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து குடிசைகள் பற்றி எரிந்து புகை மேலெழும்புவது தெரிந்தது. இளைஞர்கள் கத்தி மற்றும் கம்புகளுடன் கிராமத்தின் நுழைவு பாதைகளில் பாதுகாப்பிற்காக நின்றனர்.

ஆனால் என்ன பயன்? “ராணுவ உடையில் 30க்கும் மேற்பட்ட போடா வன்முறையாளர்கள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்தனர். எங்களால் அவர்களை தடுக்க முடியவில்லை. எங்கள் கண் முன்னால் ஒருவரை சுட்டுக் கொன்றார்கள். வீடுகளை தீயிட்டு கொழுத்தினார்கள். விவசாயப் பொருட்களை கொள்ளையடித்தார்கள். துப்பாக்கி முனையில் எங்களை நிறுத்தி இங்கிருந்து சென்றுவிடுங்கள்” என மிரட்டினார்கள். கொக்ராஜர் கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் நயான் அலி(வயது 22) கூறுகிறார்.
டெஹல்கா பத்திரிகை அஸ்ஸாமில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை வெளிக்கொணர்ந்துள்ளது.


 
நஸீருல்(வயது 4), ராக்கிஃபுல்(வயது 6) சகோதரர்களான இருவரும் போடோ இனவெறியர்களை கண்டதும் ஓடத் துவங்கினர். கொஞ்ச தூரம் சென்ற பிறகு இருவரும் திரும்பி பார்க்கையில் அவர்களது பெற்றோரை காணவில்லை. அவர்கள் திரும்பிச் சென்றபொழுது கிராமம் பற்றி எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் உதவியற்ற நிலையில் அழுதுகொண்டிருந்தார்கள். அப்பொழுது அக்கிராமத்தின் மூத்த நபரான மும்தாஸ் அலி(வயது55) அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு உயிரை காப்பாற்ற தப்பிச் சென்றார்.

“நான் அச்சிறுவர்களை அடையாளங் கண்டுகொண்டேன். அவர்கள் நவ்ஷாத் அலி என்பவரின் பிள்ளைகள். நவ்ஷாதையோ அவரது மனைவியையோ காணமுடியவில்லை. எனவே அவ்விரு சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு உயிரைக் காப்பாற்ற நான் அங்கிருந்து பயந்து ஓடினேன்” என மும்தாஸ் அலி நடந்த நிகழ்வை நினைவு கூறுகிறார்.

கடந்த நான்கு தினங்களாக அச்சிறுவர்களின் பெற்றோரை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர். இதைப்போல நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் குடும்பத்தினரை காணாமல் அகதி முகாமில் உள்ளதாக அகதிகள் முகாமில் உள்ளோர் கூறுகின்றனர்.


பி.எல்.டி(போடோ லிபரேசன் டைகர்ஸ்) என்.டி.எஃப்.பி(நேசனல் டெமோக்ரேடிக் ஃப்ரண்ட்ஆஃப் போடோ லாண்ட்) ஆகிய கிளர்ச்சி பிரிவினைவாத போடோ குழுக்களை சேர்ந்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ளனர். கலவரம் நடத்துவதில் அனுபவம் பெற்றவர்கள் என கிராமவாசிகள் கூறுகின்றனர்.

ஆயுத கலகங்களில் இவர்கள் ஈடுபடுவதால் துப்பாக்கிகள் இவர்களுக்கு சுலபமாக கிடைக்கிறது. சிறுபான்மை சமுதாயங்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை தேடி இவர்கள் ஆவேசத்துடன் பாய்ந்து செல்கின்றார்கள்.

குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்தியது போன்ற திட்டமிட்ட இனப் படுகொலைகளை போடோ இனவெறிக் குழுக்கள் அஸ்ஸாமில் அரங்கேற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

மரண எண்ணிக்கை அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களை விட எத்தனையோ மடங்கு அதிகம் என கிராமவாசிகள் கூறுகின்றனர்.
உறவினர்கள் இல்லாத நூற்றுக்கணக்கான குழந்தைகள் அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். கொக்ராஜரில் ஒரு சிறிய பள்ளிக்கூடத்தை அகதிகள் முகாமாக மாற்றியுள்ளனர். 5 அறைகளை மட்டுமே கொண்ட இந்த பள்ளிக்கூடத்தில் 5 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


 
10 கர்ப்பிணி பெண்கள் தங்கியுள்ள இங்கு கடந்த நான்கு தினங்களாக ஒரு டாக்டர் கூட இல்லை. அரிசி மற்று குடிநீரை ரேசன் போல இங்கு அதிகாரிகள் விநியோகிக்கின்றனர். ஒரேயோரு கழிப்பறையை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்த வேண்டிய நிலை. இதனால் நோய் பரவும் வாய்ப்புள்ளது. தாங்கள் சந்தித்த பயங்கர அனுபவத்தின் காரணமாக மீண்டும் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் சென்றால் சுட்டுக் கொல்லப்படுவோம் என அஞ்சுகிறார்கள். வீடுகளை இழந்த முஸ்லிம்கள் தாங்கள் உயிரோடு இருப்பது அல்லாஹ்வின் கருணை என கூறுகிறார்கள்.

தகவல் தூது ஒன்லைன்

மியன்மார் படுகொலைகளை விசாரிக்க ஐநா மனித உரிமை அமைப்பு கோரிக்கை



                     மியன்மார் படுகொலைகளை விசாரிக்க ஐநா மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் இலக்குவைக்கப் பட்ட படுகொலைகளை சுதந்திரமான முறையில் விசாரணை நடாத்தவேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவநீனம் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார் .
 
மியன்மாரில் பல ஆண்டுகளாக பங்களாதேஸ் வம்சாவளி ரோஹினிய முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் இடம்பெற்று வருகிறது . மியன்மார், ரோஹினிய முஸ்லிம்களை சட்டவிரோத குடியேற்றகாரர்கள் என்று அழைப்பதுடன். அவர்களை மியன்மார் மக்களாக அங்கீகரிக்க மறுப்பு தெரிவித்து வருகிறது .
மியன்மார் ஆசியாவின் பலஸ்தீன் என்று ஐநா வினால் வர்ணிக்கப்படுகிறது கடந்த ஜூன் 26 ஆம் திகதி முதல் 650 க்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகொலை செய்யபட்டுள்ளதுடன், 1200 பேர் காணாமல் போயுள்ளனர் .என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதேவேளை பங்களாதேஸ் எல்லையில் சுமார் 4 இலட்சம் மியன்மார் முஸ்லிம்கள் அகதிகளாக பங்களாதேஸ் அரசிடம் புகலிடம் கோரிவருகின்றனர் ஆனால் அவர்களுக்கு அகதி அந்தஸ்தை வழங்கி அவர்களை அகதிகளாக பராமரிக்க பங்களாதேஸ் அரசாங்கமும் மறுத்து வருகிறது
 
அண்மையில் மியன்மார் ஜனாதிபதி ரோஹிணிய முஸ்லிம்களை தனது நாடு மியன்மார் மக்களாக ஏற்றுகொள்ளாது என்றும் அவர்களை வேறு ஒரு நாட்டில் ஐநா குடியேற்ற வேண்டும் என்றும் , ஐநாவே அவர்களை பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் .


-ஏ.அப்துல்லாஹ்   Lankamuslim.org

சவூதி அரேபியாவில் நர்ஸ் பணிகள் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு


21 பேருக்கு பணி நியமன ஆணை"சவூதி அரேபிய அமைச்சகத்தின் சுகாதார மருத்துவமனைகளில் செவிலியர் பணி செய்ய பெண்களுக்கு விண்ணப்பிக்கலாம்' என பெரம்பலூர் கலெக்டர் தரேஷ் அஹமது தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:


சவூதி அரேபிய அமைச்சகத்தின் சுகாதார மருத்துவமனைகளுக்கு பெருமளவில் தேவைப்படும் பெண் செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு டில்லி, கொச்சின் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.


பி.எஸ்.சி., தேர்ச்சியுடன் நான்கு வருட பணி அனுபவம் மற்றும் எம்.எஸ்.சி., தேர்ச்சியுடன் இரண்டு வருட பணி அனுபவம் உள்ள 40 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தகுதியுடையவர் ஆவர்.


தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு நிறைவான ஊதியத்துடன், இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம் ஆகியவை வேலையளிப்போரால் வழங்கப்படும்.


தகுதி மற்றும் அனுபவத்திற்குட்பட்டவர்கள், தங்களின் சுய விவரங்கள் அடங்கிய தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், ஃபாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளை நிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட 6 புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.


முகவரி; எண்.48, டாக்டர் முத்துலெட்சுமி சாலை, அடையாறு, சென்னை என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அலுவலகப் பணி நாட்களில் நேரிலோ அல்லது தபால் மூலம் உடனடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 09381800181, 044-24464267, 24464268 என்ற ஃபோன் நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.



-dinamala


"பள்ளிப் பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்து சிறுமி பரிதாப சாவு-தாளாளர் உள்பட 4 பேர் கைது!




                            சென்னை ஜியோன் பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து விழுந்து 2ம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஸ்ருதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் விஜயன் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். கைதான நான்கு பேரும் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை சேலையூர் சீயோன் பள்ளிக் கூடத்தில் 2
-ம் வகுப்பு படித்து வந்தவள் ஸ்ருதி. இவர் முடிச்சூர் வரதராஜபுரம் பரத்வாஜ் நகரைச் சேர்ந்த சேது மாதவன் என்பவரின் மகள். சேதுமாதவனின் மூத்த மகன் அதே பகுதியில் ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறான். 2வது மகளை ஜியோன் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விரும்பி தூரத்தையும் பொருட்படுத்தாமல் பஸ்சில் அனுப்பி வைத்து வந்துள்ளனர்.

தினமும் பள்ளிக் கூட பேருந்தில் பள்ளிக்கு சென்றுவிட்டு ஸ்ருதி திரும்புவாள். நேற்று மாலை முடிச்சூர் லட்சுமிபுரம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது மாணவி ஸ்ருதி அமர்ந்திருந்த இருக்கை ஆடியது. அப்போது இருக்கையின் அடிப்பகுதியில் இருந்த ஓட்டை வழியாக ஸ்ருதி கீழே சாலையில் விழுந்தார். அப்போது அதே பேருந்தின் சக்கரம் ஸ்ருதியின் தலையில் ஏறியதில் அவர் மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.


இதைப் பார்த்த பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் அலறித் துடித்தனர். ஆனால் டிரைவர் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பஸ்சை ஓட்டியுள்ளார். பின்னர் சாலையில் போய்க் கொண்டிருந்த மக்கள் கூச்சல் போட்ட பிறகுதான் பஸ்சை நிறுத்தியுள்ளார்.


சாலையில் மாணவி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் பேருந்தை தடுத்து நிறுத்தி ஓட்டுநரை சரமரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் ஓட்டுநரை போலீசில் பொதுமக்களே ஒப்படைத்தனர். இருப்பினும் ஆத்திரம் அடங்காத பொதுமக்கள் பேருந்துக்கும் தீ வைத்தனர்.


பஸ் ஓட்டையிலிருந்து கீழே விழுந்த சிறுமி ஸ்ருதி, மிகக் கோரமான முறையில் பிணமாகிக் கிடந்தது பார்ப்போர் நெஞ்சை உலுக்குவதாக அமைந்திருந்தது.


இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்லாவரம் போக்குவரத்து பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் ஜியோன் பள்ளியின் தாளாளரான விஜயன், பஸ் உரிமையாளர் யோகேஸ்வரன், டிரைவர் ஸ்ரீமான், கிளீனர் சண்முகம் ஆகியோரைக் கைது செய்தனர்.


அனைவரும் தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் சிறைக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து நான்கு பேரும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.


oneindia

புஷ்ரா நல அறக்கட்டளைக்கு உங்களின் கேக் ஆர்டரை கொடுத்து பயனடைவீர்

                         புஷ்ரா நல அறக்கட்டளை கடந்த பல வருடங்களாக வி.களத்தூர், மில்லத் நகர் மக்களுக்கு ஈத் பெருநாள் கேக்குகளை சிறப்பாக வழங்கி வருகிறது.இந்த வருடமும் தனது சேவையை மேம்படுத்தும் விதமாக ரமலான் கேக்கை நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு குறித்த நேரத்தி்ல் டெலிவரி செய்யப்பபடும்.உங்களின் ஆர்டர்களை கீழ்கானும் பொருப்பாளர்களிடம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.