செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

பர்மா விசயத்தில் வாய் திறக்காத அரசியல் கட்சிகள்...............!!


             நம் சொந்தங்களுக்காக நாமும் நமது பங்களிப்பை செலுத்தலாமே.....

அன்பு சகோதரர்களே.....

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....

பர்மாவில் நம் சொந்தங்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக்கப்பட்டும் இந்திய, தமிழக அரசியல் கட்சிகள் வாய் திறக்காமல் இருந்துவருகிறார்கள்,


நம் சொந்தங்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டும் கொஞ்சம் கூட மனிதநேயமின்றி, ஈவு இரக்கமின்றி நமது அரசியல் கட்சிகள் நடந்து வருவது நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது, தொப்பியை அணிந்து கொண்டு நோன்பு கஞ்சி குடிக்க வருகை தரும் அரசியல் கட்சிகள் பர்மாவில் முஸ்லிம்கள் கொடூரமான முறையில் தாக்கப்படும் போது வாய் திறக்காமல் இருப்பதன் காரணமென்ன........???


உலகமே திரும்பி பார்க்கும் அளவில் இன சுத்திகரிப்பை நடத்தி கொண்டிருக்கும் பயங்கரவாத பர்மா அரசுக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் அலை அலையாக ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறது,


இந்நிலையில் துருக்கி அதிபரின் மனைவி நேரடியாகவே பாதிக்கப்பட்ட தமது குடும்பத்தினரை ஆரத்தழுவி, கட்டிபிடித்து ஆறுதல் கூறி தான் கொண்டு சென்ற கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களையும் வழங்கி விட்டு வந்திருந்தார்,


அதேபோல் சவூதி அரேபியாவும் 250 கோடி ரூபாயினை பாதிக்கப்பட்ட தமது குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளது,


அத்துடன் உலகளாவிய முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுப்பதால் ஆட்டம் கண்டு போன பர்மா விழிபிதுங்கி நிற்பதையும் கண்டு வருகிறோம்,


அங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நமது சொந்தங்கள் அகதிகலாக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான நிவாரணம் முஸ்லிம் உலகத்தினர் செய்து வந்தாலும், நாமும் நமது பங்களிப்பாக நமது குடும்பத்தினருக்கு கட்டாயம் செய்ய வேண்டும்,


ஒவ்வொரு இயக்கத்தினரும் அவரவர் சார்ந்த இயக்கத்தின் தலைமையை வலியுறுத்தியும், ஒவ்வொரு ஜமாஅத்தினரும் அந்தந்த ஊர் ஜமாஅத் நிர்வாகிகளையும் வலியுறுத்தி பர்மாவிலுள்ள நமது சொந்தங்களுக்காக வசூல் செய்ய சொல்லி நாமும் நமது பங்களிப்பை செலுத்தலாமே.....


நாம் பெரிய அளவில் செய்யவில்லை என்றாலும் தமிழக முஸ்லிம்களின் சார்பில் நாம் சுமாராக 10 கோடி ரூபாயாவது கொடுக்க வேண்டும்,


நாம் எந்த அரசியல் கட்சியையும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை, எந்த அரசியல்வாதியையும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை...... யாரும் நம் சொந்தங்களுக்காக குரல் கொடுக்க முன்வரவில்லை என்றாலும் நம்மோடு நம்மை படைத்த அல்லாஹ் இருக்கிறான்,


தமிழகத்திலுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் வெறும் 10 ரூபாய் கொடுத்தாலே போதும் 1 கோடி முஸ்லிம்களுக்கு 10 கோடி ரூபாய் சேர்ந்துவிடும்.....


இந்த தருணத்தில் நாமும் நமது அரசியல் கட்சியை இனங்கண்டு கொள்ள வாய்ப்பாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளான்,


இப்படி செய்யலாமா......? உங்களுடைய கருத்துக்களை சொல்லவும்

 
அன்புடன் உங்கள் சகோதரன்