சனி, 6 அக்டோபர், 2012

மகாத்மா காந்திக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர் இவர்!

தமிழகத்தில் தில்லையாடியில் பிறந்தவர் வேதியம் பிள்ளை. 13 வயதில் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று, அடித்தட்டு வேளைகளை செய்தவாறு மேற்படிப்பை மேற்க்கொண்டவர்.
இவர் தாயுமானவர் அடிகளார் வழி வந்தவர் என்பது சிறப்பு.

பாரிஸ்டர் பட்ட மேற்படிப்பை முடித்த காந்தி, தென் ஆப்பிரிக்காவுக்கு வேளை நிமித்தம் சென்றார். அங்கு வெள்ளையரை எதிர்த்தும், இந்திய சுதந்திரத்திற்கும் உழைத்து வந்துள்ளார். காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட, வேதியம் பிள்ளை அவர்கள், தென் ஆப்பிரிக்காவில் காந்தியிடம் நெருக்கமானார். அப்போது, திருக்குரளில் தேர்ச்சி பெற்றிருந்த, வேதியம் பிள்ளை அவர்கள், அவ்வப்போது, திருக்குறளை காந்திக்கு மேற்கோள் காட்டியுள்ளார். திருக்குரலின் மேன்மையை உணர்ந்த காந்தி, தமிழை படிக்க விரும்பினார். அதற்காக, திரு. வேதியம் பிள்ளையிடம் தனக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டார். வேதியம் பிள்ளை அவர்களும், நேரம் வாய்க்கும் போதெல்லாம், காந்திக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளார். தமிழில் கையெழுத்திடும் வரை காந்தியவர்கள், தமிழை கற்றுக் கொண்டார்.

செக்கிழுத்த வ.வு.சிதம்பரனார், சிறையில் தள்ளப்பட்டதால், அவரது குடும்பம் அன்றாட உணவுக்கே சிரமத்தை எதிர் கொண்டது. இதை தென் ஆப்பிரிக்காவில் இருந்த வேதியம் பிள்ளை அவர்கள், மாதா மாதம் ரூ. 50 தவறாமல், ஆறு வருடங்கள், வ.வு. சிதம்பரனார் சிறையிலிருந்து வெளிவரும் வரை கொடுத்து உதவினார்.  நன்றிக் கடனாக, சிதம்பரனாரும், தனக்கு ஆண் குழந்தை பிறந்தால், இவரது பெயரை சூட்ட வேண்டும் என எண்ணினார். ஆனால், பெண் குழந்தை பிறந்தது. அதற்கு வேத நாயகி என பெயர் சூட்டி தனது நன்றியை தெரியப்படுத்தினார்.

வேதியம் பிள்ளை அவர்கள் தமிழின் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக, தில்லையாடியில் பள்ளி ஒன்றை தொடங்கினார். அக்காலத்தில், குழந்தைகளை ஆடு, மாடு மேய்த்தால், மதியம் ஒரு வேளை சாப்பாடு கிடைக்கும். இதனால், வேதியம் பிள்ளை தொடங்கிய பள்ளிக்கு குழந்தைகள் வரவில்லை. சூச்சுமத்தை புரிந்து கொண்டதால், மதிய உணவு கொடுத்ததால், பள்ளியில் குழந்தைகளில் வருகை பெருகிறது. திரு. காமராசர், முதல்வராக இருந்த போது, பல பள்ளிகளை தமிழகத்தில் தொடங்கினார். ஆனால், இங்கு குழந்தைகள் வருவதில்லை. சிலரின் அறிவுரையால், வேதியம் பிள்ளை அவர்களின் தந்திரத்தை தெரிந்து கொண்ட காமராசர் அவர்கள், மதிய உணவுத் திட்டத்தை பள்ளிகளில் தொடங்கினார். குழந்தைகளும் பள்ளிக்கு வந்தார்கள். இதுதான் தமிழக பள்ளியில் மதிய உணவு வந்த கதை.



திரு. வேதியம் பிள்ளை அவர்களின் மகனான திரு. தச்சனா மூர்த்தி (எ) திரு. தென்னவன், வயது 86, சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறந்த தமிழ் தொண்டரான வேதியம் பிள்ளையின் வாரிசுகள், எவ்வித எதிர்பார்ப்பு இல்லாமல், எளிமையாக குடும்பம் நடத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

என இந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்கள் மனிதம் குழுவினர்.

தகவல் : மனிதம்