திங்கள், 1 அக்டோபர், 2012

இமாம் அஷ்ஷஹீத் ஹஸன் அல் பன்னா அவர்களது பத்து உபதேசங்கள்
1. என் நிலையிலும் அதான் ஒலி கேட்டவுடன் தொழுகைக்கு எழுந்து செல்.
 
2. அல்குர் ஆனை ஓது. அதனைப் படி, திக்ர் செய். நேரத்தை பிரயோசனமின்றி கழிக்காதே.
 
3. அறபு மொழியை கற்றுக்கொள். அது இஸ்லாத்தின் அடையாளங்களில் ஒன்று.
 
4. எந்த விடயமாக இருந்தாலும் அதில் அதிகம் தர்க்கம் புரியாதே. தர்ககம் புரிவது எந்த நன்மையையும் தரமாட்டாது.
 
5. அதிகம் சிரிக்காதே. அல்லாஹ்வுடன் தொடர்பு கொண்ட உள்ளம் அமைதியாகவும் கண்ணியாமாகவும் இருக்கும்.
 
6. கேலி பண்ணாதே.
 
7. கேட்பவர்களின் தேவைக்கதிகமாக உனது சத்தத்தை உயர்த்தாதே. அது விகாரமாகவும் மற்றவர்களை நோவினைப் படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.
 
8. தனிமனிதர்கள் பற்றிப்புறம் பேசுவதையும், அமைப்புக்கள் பற்றி குறை கூறுவதையும் தவிர்ந்து கொள். நல்லவற்றை தவிர வேறு எதையும் பேச வேண்டாம்.
 
9. நீ சந்திக்கின்ற உனது சகோதரர்களுடன் அறிமுகமாகிக் கொள். அவர்கள் அதனை உன்னிடம் எதிர்பார்க்காவிட்டாலும் சரியே. நிச்சயமாக தஃவாவின் அடிப்படையே அன்பும் பரஸ்பர அறிமுகமும் தான்.

10.கடமைகள் நேரங்களை விட மிக அதிகமாகும். மற்றவர்கள் தமது நேரத்தை பயன்படுத்த அவர்களுக்கு உதவி செய். அவர்களிடம் உனக்கு ஏதாவது வேலைகள் இருப்பின் சுருக்கமாக முடித்துக் கொள்.
-