சனி, 26 ஜனவரி, 2013

கமல்ஹாசன் கருத்துக்கு தமுமுக கண்டனம்




 



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் கண்டன அறிக்கை:

 விஸ்வரூபம் படம் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கமல்ஹாசன் ஏதேதோ கூறுகிறார். முதலில் கலாச்சார பயங்கரவாத்தை எதிர்கொள்வேன் என்றார். இப்போது முதுகில் குத்திவிட்டார்கள் என்கிறார், தேசப்பக்தி உள்ள முஸ்லிம்கள் எதிர்க்கமாட்டார்கள் என்கிறார்.
முஸ்லிம்களை கொச்சைப்படுத்த கமல் எடுத்திருக்கும் விஸ்வரூபம் படப் பிரச்சனை கருத்து தீவிரவாதமாகவே பார்கிறோம். படத்தை பார்க்க காலத்தை நீட்டித்தார். படத்தை இறுதிவரை பார்த்தப் பின் அதிர்ச்சி அடைந்ததால் அவருடன் மேலும் ஏதும் பேசாமல் கிளம்பினோம். அவர் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கையை படம் தகர்த்து விட்டது.

... இந்தப் படத்தில் எந்த மாச்சரியங்களும் இடம்பெறாது என்றும், கமலுடன் நடந்த முதல் இரண்டு சந்திப்புகளின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்காது என்ற நம்பிக்கையும் எங்களுக்கு ஏற்பட்டது. ஆனால் அவருடைய அலுவலகத்தில்இந்த படத்தை நாங்கள் பார்த்த போது அங்குலம் அங்குலமாக படம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு விரோதமாகவும் அனைத்துகாட்சிகளும், கதாபாத்திரங்களும் ஒரு வெறுப்பு பிரச்சாரமாகவே அமைந்திருந்தது இதன் காரணமாகதான் இப்படத்தை தடை செய்ய தமிழக அரசிடம் கோரினோம்.
படத்தை பார்த்த பின்னர் நாங்கள் படத்திற்கு கமலிடம் நற்சான்றிதழ் எதுவும்தரவில்லை தேசப்பற்று இருக்கின்ற காரணத்தால் தான், நாட்டில் ஏதும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்ற அக்கறையில் தான் களத்தில் இறங்கினோம்.
எனவே கமல்ஹாசன் அவர்களின் கருத்தை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது.

இவண்,
(ஜே.எஸ்.ரிபாயீ)