புதன், 11 ஜூலை, 2012

21 பேருக்கு பணி நியமன ஆணை


21 பேருக்கு பணி நியமன ஆணை


                            மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில், மாவட்ட கலெக்டர் டாக்டர் தரேஸ் அஹமது, தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

மகளிர் திட்டத்துறையின் மூலம் இளைஞர் திறன் வளர்த்தல் பயிற்சியின் கீழ் 30 நபர்களுக்கு ஆடை வடிவமைத்தல் பயிற்சி பெரம்பலூர் ஏ.டி.டீ.சி பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது. இவர்களில் 21 நபர்களுக்கு மாதம் ரூ.4,000 ஊதியத்தில் பெரம்பலூரில் செயல்பட்டு வரும் ஆயத்த ஆடை தயாரிப்பு முன்னணி நிறுவனங்களான வி.ஆர்.பி கார்மெண்ட்ஸ், ஸ்ரீரெங்கா கார்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களில் வேலைக்கான உத்தரவுகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் மீனாட்சி சுந்தரம், மகளிர் திட்ட அலுவலர் கன்னியாகுமரி, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.