புதன், 11 ஜூலை, 2012

பெரம்பலூர் கோ- ஆப்டெக்ஸில் பழசுக்கு புதுசு திட்டம் அறிமுகம்

                   பெரம்பலூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பட்டுச்சோலை பழசுக்கு புதுசு திட்டத்தை பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது குத்து விளக்கேற்றி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்து பேசியதாவது:பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடி புதுமையை யொட்டி பட்டுச்சோலை பழசுக்கு புதுசு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் 28ம் தேதி வரை அமுலில் இருக்கும். இத்திட்டத்தின் கீழ் நான்கு லட்சம் ரூபாய் விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது பழைய பட்டு சேலைகளை கொடுத்துவிட்டு புதிய பட்டு சேலைகளை பெற்றுச்செல்லாம்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் (பொறுப்பு) சங்கரநாராயணன், மேலாளர் கனகசபாபதி மற்றும் பலர் பங்கேற்றனர்