திங்கள், 9 ஜூலை, 2012

சபை நாகரீகம் தெரியாத கோபிநாத்..


                             விஜய் டிவியில் திரைப்படத்துறை சார்ந்தவர்களுக்கு விஜய் டிவி சார்பில் விருதுகள் வழங்கு விழா நிகழ்ச்சியின் மறுஒளி பரப்பு நடைபெற்றது.. அதனை இன்று நான் காண நேரிட்டது.. அதில் தொகுப்பாளர்களாக கோபிநாத்தும், சிவகார்த்திகேயனும் பங்கு கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்..

நிகழ்ச்சியினூடே சிவகார்த்திகேயனை கோபிநாத், 'என்னடா சொல்ற, இருடா, வந்தான் போனான்' என்று அடிக்கடிசொல்லிக் கொண்டே இருந்தார்.. திரைப்பட நடிகர் மோகனையும் தேவையில்லாமல் கிண்டலடித்தார்..

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் அவரது மகன் சரண் ஆகியோர் விருதினைப் பெற மேடைக்கு ஏறினர்.. எஸ்.பி.பி தன் மகனை 'அவர்' என்றே அழைத்தார். அதேபோன்று வைரமுத்துவும் அவரது மகனும் மேடைக்கு ஏறினர்.. வைரமுத்துவும் தன் மகனை 'அவர்' என்றே அழைத்தார்..

நண்பர்களாக இருந்தாலும், அப்பா, பிள்ளை உறவு என்றாலும் கூட சபை நாகரீகம் கருதி அப்பா மகனை 'அவர்' இவர் என்று தான் அழைக்கின்றனர் பெரும்பாலானோர்..வயதில் சிறியவர்களாக இருந்தாலும் இப்படி அழைப்பதின் காரணமாக அழைக்கப்படுபவரின் மதிப்பு கூடுகின்றது. இதுதான் நாகரீகம்..

எவ்வளவு தான் நண்பர்களாக இருந்தாலும், அண்ணன் தம்பிகளாக இருந்தாலும், ஆயிரக்கணக்கானோர் பங்கு பெறும் நிகழ்ச்சியில் மேடையில் பேசும் போது, சபை நாகரீகம் கருதி ஒருமையில் பேசுவதையும், 'அவன், இவன்,வாடா, போடா' என்று கூறுவதையும் கோபிநாத் தவிர்த்திருக்கலாம்..

சிவகார்த்திகேயன் தற்போது ஹீரோ ரேஞ்சில் உள்ளார்.. திருமணமும் ஆகிவிட்டது.. இந்நிலையில் மேடையில் அவரை கோபிநாத் அப்படி அழைத்தது நாகரீகமாக இல்லை..

இது தவிர ஆங்கில உச்சரிப்பும் தற்போது கோபிநாத்திடம் நிறையவே மாறி உள்ளது.. லண்டனில் படித்துவிட்டு அமெரிக்காவில் செட்டிலாகி, நேராக நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்தவர் போல அந்த அமெரிக்கன் ஸ்டைல் பேச்சு கொஞ்சம் மிகையாகவே இருந்தது..

ஏற்கெனவே பேசுபவர்களை தடுத்து நிறுத்திவிடுவதில் தான் மிகுந்த திறமைசாலி என்று பெயரும் இவருக்கு உண்டு.. ஏதோ முக்கியமான செய்தியை சொல்ல வந்தவர்கள் சொல்லாமலேயே முடங்கிப் போன சம்பவங் களும் கோபிநாத் நடத்தும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் பல முறை நடந்துள்ளது..

எவ்வளவுக்கெவ்வளவு உயருகின்றோமோ, அந்தளவிற்கு நாம் பேசும் வார்த்தைகளிலும், மற்றவர்களிடம் நாம் நடந்து கொள்ளும் விதத்திலும் நாகரீகமும், பண்பாடும், பணிவும் வேண்டும் என்பதை கோபிநாத் மறந்தது