புதன், 18 ஜூலை, 2012

பெரம்பலூர் எஸ்பி இன்று பொறுப்பேற்பு

                         பெரம்பலூர் மாவட்ட புதிய எஸ்பி ராஜசேகர் இன்று பொறுப்பேற்கிறார்.         
பெரம்பலூர் எஸ்பி ரூபேஸ்குமார் மீனா பணியிட மாற்றம் செய்யப்பட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்றார். இதைதொடர்ந்து திருச்சி எஸ்பி லலிதா லட்சுமி, பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில்  மதுரை மாவட்ட கியூ பிரிவில் ஏடிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த ராஜசேகரனுக்கு பதவி உயணீர்வு அளிக்கப்பட்டு பெரம்பலூர் எஸ்பியாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டார்.

                     இதைதொடர்ந்து புதிய எஸ்பி ராஜசேகரன் இன்று பொறுப்பேற்கிறார். இவரிடம் அதற்கான பொறுப்புகளை திருச்சி மாவட்ட எஸ்.பி.லலிதாலட்சுமி ஒப்படைக்கிறார்.

                       இதேபோல் பெரம்பலூர் சட்டம்-ஒழுங்கு டிஎஸ்பி சிவக்குமார் கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அந்த பணியிடம் காலியாக இருந்தது.  திருச்சி மாவட்ட குற்றப்பதிவேடுகள் பிரிவு டிஎஸ்பியான பாலசுப்பிரமணியன், பெரம்பலூர் டிஎஸ்பியாக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் நேற்று தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து பதவி உயர்வு பெற்றுள்ள சவுந்தர்ராஜன், பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக நேற்று பொறுப்பேற்று கொண்டா

- dinakaran