வியாழன், 9 ஆகஸ்ட், 2012

பர்மாவில் முஸ்லிம்கள் மீதான கொடூர தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் - சவூதி அரேபியா, குவைத், ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் கடும் எச்சரிக்கை.............!!

                        பர்மாவில் முஸ்லிம்கள் மீதான கொடூர தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் - சவூதி அரேபியா, குவைத், ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் கடும் எச்சரிக்கை.............!!

சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் கடந்த 07.08.2012 அன்று இரு புனித பள்ளியின் காவலரும் சவூதி அரசருமான சகோதரர் அப்துல்லாஹ் அவர்களின் தலைமையில் பாராளுமன்ற அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது,


இக்கூட்டத்தில் மியான்மரில் முஸ்லிம்களை கொடூ

ரமான தாக்குதல் மற்றும் மனிதஉரிமை மீறல் மூலம் தங்களின் சொந்த நாட்டை விட்டு வெளியேற முஸ்லிம்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர் என்றும் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கண்டனக்குரல்கள் எழுந்தன,

மியான்மரில் முஸ்லிம்கள் பாதுகாப்புடனும், நிம்மதியுடனும் வாழ சர்வதேச சமூகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பாராளுமன்ற அமைச்சரவை கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது,


மேலும் மியான்மரில் முஸ்லிம் பெண்கள் கற்ப்பழிக்கப்படது, சிறுவர்கள் கொல்லப்பட்டது உள்ளிட்ட கொடூர இன அழிப்பு தாக்குதல் அனைத்தையும் பற்றி விவாதிக்கப்பட்டு தமது கண்டனத்தை பதிவு செய்ததாக செய்தி நிறுவனமான SPA தெரிவித்துள்ளது.


மற்ற முஸ்லிம் நாடுகள் கண்டம் தெரிவித்துள்ளதா என்பது சரியாக தெரியவில்லை,


கடந்த சனிக்கிழமை அன்று ஈரான் தன்னுடைய கண்டனத்தையும் தெரிவித்ததோடு, முஸ்லிம்கள் மியான்மரில் அத்துமீறி வாழ்கிறார்கள் என்பதை புள்ளி விபரத்தோடு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது, இந்த கண்டனம் வெளியாகி 5 நாட்கள் ஆகியும் எந்த தொலைக்காட்சியும் செய்தி வெளியிடவில்லை,


உலக அளவில் முஸ்லிம்கள் பற்றிய செய்திகளை உலகளாவிய ஊடகங்கள் திட்டமிட்டே மறைக்கின்றன என்பதை மட்டுமே நன்கு உணரமுடிகிறது


இதேபோல் குவைத், பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது