செவ்வாய், 16 அக்டோபர், 2012

சென்னையில் பாப்புலர் ப்ரண்ட் சார்பாக நடந்த உயர் கல்விக்கான கடன் உதவி வழங்கும் விழா

Educational loan scholarship Chennai

                                                12ஆம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில் சேர்ந்துள்ள ஏழை மாணவ மாணவியர்களுக்கு தங்களின் கல்லூரி கட்டணத்தை கட்ட உதவும் வகையில் தேசிய அளவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வட்டியில்லா கடன் வழங்கி வருகிறது. சென்ற ஆண்டு தேசிய அளவில் 24 இலட்ச ரூபாய்க்கான கடன் உதவி வழங்கப்பட்டது.

இவ்வாண்டும் பாப்புலர் ப்ரண்ட் செயல்படும் அனைத்து மாநிலங்களிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த கல்வி உதவியினை பெற மாணவ மாணவியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 

பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு தகுதியான மாணவ மாணவியர்களுக்கு கல்வி கடனுதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் 54 மாணவ மாணவியர்கள் கல்வி கடனுதவி வழங்க தேர்வு செய்யப்பட்டார்கள்.

தேர்வு செய்யப்பட மாணவ மாணவியர்களுக்கான கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி தமிழகத்தில் சென்னை , மதுரை மற்றும் கோவை ஆகிய மூன்று இடங்களில் 14.10.2012 அன்று நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில பொதுசெயலாளர் ஏ.காலித் அவர்கள் தலைமை தாங்கி மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவி தொகையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Educational loan scholarship Chennai