புதன், 17 அக்டோபர், 2012

காவிரிக்காக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தலையில் கருப்பு முண்டாசு கட்டிக்கொண்டு அறவழி ஆர்ப்பாட்டம்

                                               
                                       காவிரி நதி நீரில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குரிய பங்கினை தர மறுக்கும் கன்னட அரசியல்வாதிகளையும், மொழி வெறியர்களையும் கண்டித்து மமக வின் சார்பில் இன்று (16-10-2012) திருவாரூரில் தலையில் கருப்பு முண்டாசு கட்டிக்கொண்டு அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காலை 10.30 மணியளவில் பழைய ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மமக தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில், பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி கண்டன உரை நிகழ்த்தினார். மாநில துணை பொதுச் செயலாளர் சரவண பாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் ஆயிரக்கணக்கில் திரளாக பங்கேற்றனர்.