திங்கள், 15 அக்டோபர், 2012

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் - கலெக்டர் தரேஷ்அஹமது                                        
                          விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும், 18ம் தேதி நடக்கிறது என, கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.
 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும், 18ம் தேதி காலை, 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் தரேஷ்அஹமது தலைமையில் நடக்கிறது. விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், தங்களது விவசாய பணிகள் தொடர்பான பாசன ஏரி, வாய்க்கால்கள் தூர்வாருதல், வங்கி கடனுதவி, உரம், வேளாண்மை இயந்திரங்கள், விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். எனவே இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். கூட்டத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் பங்கேற்று, விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளனர். எனவே பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.