திங்கள், 22 அக்டோபர், 2012

பெரம்பலூர் நகரில் பட்டப்பகலில் பெண்ணிடம் செயின் பறிப்பு

பட்டப்பகலில் டூவிலரில் வந்த மர்மநபர்கள், பெண்ணிடம் செயின் பறித்து சென்ற
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் பாரதிதாசன் நகரைச்
சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மனைவி ராஜாமணி, 40, இவர் நேற்று மதியம், 12.30 மணியளவில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சங்குப்பேட்டை பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே ஒரே டூவிலரில் வந்த, மூன்று மர்ம நபர்கள், திடீரென ராஜாமணியின் கழுத்திலிருந்து, மூன்று பவுன் செயினை
பறித்துக்கொண்டு டூவீலரில் தப்பிசென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர்
மாவட்ட போலீஸ் எஸ்.பி., ராஜசேகரன் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி., சுகாசினி
மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்புதீன்தலைமையில், பெரம்பலூர்
நகர் முழுவதும் தனிப்படை அமைத்து வாகனங்கள் மற்றும் சந்தேகத்திடமான நபர்களிடம் சோதனை மற்றும் விசாரணை நடத்தினர்.

மாவட்ட தலைநகரில் பட்டப்பகலில் பெண்ணிடம் செயின் பறித்து சென்ற சம்பவம் பெரம்பலூர் நகரில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.