திங்கள், 22 அக்டோபர், 2012

துபாய் சரவணபவன் ஊழியர் மர்மச் சாவுசரவணபவன் உணவகம் உலகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்டு இயங்கிவருகிறது, அதில்  துபாயில் இயங்கக்கூடிய சரவண பவன் உணவகத்தில் பணிபுரிந்த தெய்வமணி என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

இன்று சென்னை கொண்டுவரப்பட்ட அவரது உடலை ஏற்க மறுத்த அவரது தாயார் மற்றும் உறவினர்கள், தெய்வமணி துபாயில் சரவணபவன் உணவகத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது பாவித்த அவரது பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க சரவணபவன் நிர்வாகம் மறுத்ததாகவும், இதனால் சென்னை காவல்துறை அதிகாரியிடம் முறையிட்டதாகவும், இவ்வாறு தாம் சரவணபவன் நிர்வாகத்திற்கு எதிராக அளித்த புகாரை திரும்ப பெறவேண்டும் என சரவணபவன் நிர்வாகம் தம்மை மிரட்டுவதாகவும் இதன் காரணத்தினாலேயே அவரது உடலை தாம் ஏற்க மறுத்ததாகவும் தெரிவித்தனர்.

நன்றி-newsalai.com