வியாழன், 15 நவம்பர், 2012

துப்பாக்கி கக்கிய விஷம்

http://www.pagejaffna.com/wp-content/uploads/2012/10/thuppaki--300x199.jpg

                                    நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி என்ற திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த படத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் பல காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தலைமை நிர்வாகிகள் ஜே.எஸ். ரிபாயி, அப்துல் சமது, தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல சமுதாய அமைப்பின் தலைவர்களும், தமுமுக தலைவர்களை தொடர்பு கொண்டு இது குறித்து பேசி வருகிறார்கள்.

இது விசயமாக மமக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நடிகர் விஜய் அவர்களின் தந்தை சந்திரசேகரனிடம் அலைபேசி வழியாக தொடர்பு கொண்டார். அப்போது தனது கண்டனத்தை தெரிவித்து கொண்டதோடு அப்படத்தில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த சந்திரசேகரன் அவர்கள் ஒரு சமூகத்தின் மனம் புன்படுவதை தான் விரும்பவில்லை என்றும், அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விடலாம் என்றும் கூறியிருக்கிறார். துப்பாக்கி படத்தில் திருத்தங்களை கூறுங்கள் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்.

மாநில தலைமையகம் 

-tmmk.info