செவ்வாய், 18 செப்டம்பர், 2012

பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு ராணுவ கல்லூரியில் சேர்க்கை விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசி டிசம்பரில் எழுத்து தேர்வு – கலெக்டர் தரேஸ் அஹமது                                       ராணுவ கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் பாதுகாப்பு துறையின்கீழ் உத்திரகாண்ட் மாநிலம் டேராடூனில் செயல்பட்டு வரும் ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர்ந்து படிக்க மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், பொதுஅறிவு ஆகியவற்றில் வரும் டிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் எழுத்து தேர்வு நடைபெறும்.

5.4.2013 அன்று நேர்முகத்தேர்வு நடைபெறும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் 50 சதவீதத்திற்கு அதிகம் எடுத்த மாணவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டு தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு குறித்து இதர விபரம் தெரிந்து கொள்ள பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளின் தகவல் பலகையில் இதற்கான விபரங்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.

பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர்ந்து பயிலும் இந்த வாய்ப்பை பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.