வியாழன், 20 செப்டம்பர், 2012

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: அமெரிக்காவை கண்டித்து பெரம்பலூரில் தமுமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. (Updated Photos )பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் காந்தி சிலை முன்பாக 15-09-2012 சனிக்கிழமை மாலை 5மணியளவில் துவங்கியது. இந்நிகழ்விற்கு மாவட்ட தமுமுக தலைவர் மீரா மொய்தீன் தலைமை தாங்கினார். மாவட்ட ம.ம.க செயலாளர் சுல்தான்மொய்தீன், மாவட்ட தமுமுக செயலாளர் பொறியாளர் ரசீது, கழக பேச்சாளர் திருச்சி ரபீக் ஆகியோர் மிகவும் ஆக்ரோசமாக, அமெரிக்காவை கண்டிக்க இந்திய அரசை வலியுறுத்தியும் கண்டன உரையாற்றினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தமுமுக பொருளாளர் இலியாஸ், தமுமுக து.செயலாளர் குதுரத்துல்லா, மமக து.செயலாளர் சித்தீக், மாணவர் இந்தியா மாவட்ட தலைவர் ஜமீர் பாஷா, மாவட்ட செய்தி தொடர்பாளர் பாஷா, ஒன்றிய செயலாளர் விஸ்வக்குடி சபியுல்லா, பொருளாளர் சாதிக்பாஷா, நகர செயலாளர்கள் ஹனீபா, சமீம், ஷாஜஹான், ஹாலித், வி.களத்தூர் நகரத்தலைவர் T.R.M.சபியுல்லா, செயலாளர்கள் முகம்மது ரபீக், சாகுல்ஹமீது மற்றும் நிர்வாகிகளும், திரளான தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
தகவல் TRMS
 
tanks  http://vkalathur.info