சனி, 22 செப்டம்பர், 2012

"ஹஜ் யாத்திரை-தங்குமிடச் செலவை குறைக்க அமிக்கஸ் க்யூரி சிபாரிசு!



                                       புனித ஹஜ் யாத்திரைக்கான விமான பயணச்செலவு, சவூதி அரேபியாவில் தங்குமிடச்செலவு ஆகியவற்றை குறைப்பது தொடர்பாக அமிக்கஸ் க்யூரி (நீதிமன்றத்திற்கு உதவுபவர்) உச்சநீதிமன்றத்தில் சிபாரிசுகளை அளித்துள்ளார்.ஹஜ் தொடர்பாக உச்சநீதிமன்றம் நியமித்த அமிக்கஸ் க்யூரி ஹுஸேசா அஹ்மதி இந்த சிபாரிசுகளை அளித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் நீண்டகாலத்திற்கோ அல்லது குறைந்தது 10 ஆண்டுகளுக்கோ தங்குமிடத்தை வாடகைக்கு எடுத்து குறைந்த செலவில் புனித பயணிகளுக்கு அளிப்பது சாத்தியமா? என்பதுக் குறித்து மத்திய அரசு ஆராயவேண்டும் என்று அமிக்கஸ் க்யூரியின் அறிக்கையில் சிபாரிசுச் செய்யப்பட்டுள்ளது.இதனை அடுத்த வருடம் முதல் அமல்படுத்துவது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் பிரமாணப்பத்திரத்தை சமர்ப்பிக்கவேண்டும்.ஏர் இந்தியா மூலமாகவோ தனியான் விமான நிறுவனங்கள் மூலமாகவோ குறைந்த கட்டணத்தில் புனிதப்பயணம் சாத்தியமாகும் வகையில் மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகத்தின் பரிந்துரைகளை பிரமாணப்பத்திரமாக சமர்ப்பிக்கவேண்டும்.அமிக்க
ஸ் க்யூரியின் சிபாரிசுகளின் அடிப்படையில் இரு அமைச்சகங்களும் அடுத்த மாதம் 20-ஆம் தேதிக்குள் பிரமாணப்பத்திரத்தை சமர்ப்பிக்க நீதிபதிகளான அஃப்தாப் ஆலம் மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் அடங்கிய பெஞ்ச் கோரிக்கை விடுத்துள்ளது.

அமிக்கஸ் க்யூரியின் அறிக்கையின் நகல்கள் விமானப்போக்குவரத்து துறை செயலாளருக்கும், வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளருக்கும் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாநில ஹஜ் கமிட்டிகளின் பணிகளை மேம்படுத்துவது தொடர்பான கேள்விகளுக்கு ரெஜிஸ்ட்ரியில் இருந்து அனைத்து ஹஜ் கமிட்டிகளுக்கும் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஹஜ் காலக்கட்டத்தில் தாங்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி ஏர் இந்தியா பணியாளர்களின் அமைப்பும் இவ்வழக்கில் கட்சிதாரராக இணைந்திருந்தபோதும் அவர்களது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.கடந்த 18-ஆம் தேதி விமானப்பணியாளர்கள் டெல்லி ஏர்போர்டில் போராட்டம் நடத்தியதை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க மத்திய ஹஜ் கமிட்டிக்காக ஆஜரான காலித் அர்ஷித் முயன்றாலும் நீதிமன்றம் அதனை பரிசீலனைக்கு எடுக்கவில்லை.


அமிக்கஸ் க்யூரியின் சிபாரிசுகள் குறித்து உச்சநீதிமன்றம் மகிழ்ச்சி தெரிவித்தது.இவ்வழக்கின் விசாரணை நவம்பர் மாதம் எட்டாம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.


thoothu