செவ்வாய், 18 செப்டம்பர், 2012

பெரம்பலூரில் அமெரிக்காவை எதிர்த்து போராட்டம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம்

                                                           இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக மதிக்கும் அண்ணல் நபிகள் நாயகத்தையும் இழிவாகச் சித்தரித்து திரைப்படம் எடுத்த சாம் பேசில் என்ற யூத இயக்குனரையும் இந்தப் படத்தை உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கின்ற டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியையும், இவர்களுக்கு ஆதரவு கொடுத்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கையும் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக பெரம்பலூரில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் நமதூரிலிருந்து பெருந்திரளான சகோதர, சகோதரிகள் மற்றும் சிறுவர்கள் பேருந்து மற்றும் வேன்கள் மூலம் சென்று கலந்துக்கொண்டனர்.
 
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் 15-9-2012 மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி சுல்தான் இபுறாஹீம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.
 
மாவட்டத்தின் பல்வேறு கிளைகளிலிருந்தும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்திரளான‌ ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். 
இந்த ஆர்ப்பாட்டங்களில், அமெரிக்க அரசின் இஸ்லாமிய விரோத போக்கிற்கு எதிராகவும், நபிகளாரை இழிவுபடுத்தி படம் எடுத்த இயக்குனரையும், இதற்கு உறுதுணையாக இருந்த பாதிரியையும் கைது செய்து தூக்கில் போட வேண்டுமென்று மக்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.