சனி, 22 செப்டம்பர், 2012

சவுதி அரேபியாவில் (Jubail) சாலை விபத்து - 35 இந்தியர்கள் பலி                                சவுதி அரேபியாவில் 17/09/2012 இரவில் ஏற்ப்பட்ட சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 35 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

சவுதி அரேபியாவில்
17/09/2012 இரவு 7 மணியளவில் பணியாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து ஒன்று அவ்வழியே வந்த டேன்கர் லாரியில் மோதி வெடித்து சிதறியது.இந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தாதகவும் 12 பேர்
படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பேருந்துக்கு சொந்தமான நிறுவனம் நாசர் அல் ஹாசிர் என்றும் அது கேரளாவைச் சேர்ந்த ரவி பிள்ளை என்பவருக்கு சொந்தமானது எனவும் அறியப்படுகிறது.

இந்த பேருந்தில் பயணித்தவர்கள் தமிழ்நாடு,கேரளா,ஆந்திராவைச
் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட முடியாத அளவிற்கு சிதைந்துள்ளதால் முழு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளது.

Thanks to Newsalai.