ஆரோக்கியம்


தினமும் தேன் பருகினால் இளமையாக இருக்கலாம...!
தேன் ஓர் இனிய உணவுப்பொருள் மருத்துவ குணமும் கொண்டது, பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகிறது. தினமும் தேன் பருகினால் என்றும் இளைமையாக இருக்கலாம் என்பது அறிவில் ரீதியான உண்மை என்று பயன்படுத்திய பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேனில் அடங்கியுள்ள பொருட்கள்:

1. தண்ணீர் 17 முதல் 70 சதவீதம்.

2. பழச்சர்க்கரை 40 முதல் 80 சதவீதம்.

3. திராட்சை சர்க்கரை 10 முதல் 30 சதவீதம்.

4. கரும்பு சர்க்கரை 1 முதல் 90 சதவீதம்.

மேலும் சிலிக்கா, கிருப்பு, தாமிரம், மாங்கனீஸ், கால்சியம், குளோரின், பொட்டாசியம், கந்தகம், பாஸ்பரஸ், அலுமினியம், மக்னீசியம் உள்ளிட்ட பொருட்களும் அடங்கியுள்ளது.

தேன் சாப்பிடுவதால் உள்ள பயன்கள்:

1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதியாகும்.

2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும்.

3. தேனும் வெங்காயச்சாறும் கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசமடையும்.

4. தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா உபாதையில் இருந்து தப்பலாம்.

5. உடம்பில் இரத்த குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும் பாலும் கலந்து சாப்பிட்டால் சோகை நோய் தீரும்.

6. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து சாப்பிட்டால் ஆறாத புண் ஆறிவிடும்.

7.வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்கு தொப்பு ளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

8. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலும்பிச்சை பழம் சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் போல் சுறுசுறுப்பாக இருக்கும் நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடி விடும்.

9. அதிகாலையிலும், படுக்க செல்வதற்கு முன்பும் தேன் பருகினால் உடலுக்கு நல்லது.

10. அல்சர் நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு தேக்கரண்டி தேன் சாப்பாட்டிற்கு முன் சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும் உள்ளிட்ட ஏராளமான பலன்கள் தேனில் உள்ளது.****************************************


இதுவரை தெரிந்திராத மிளகின் மருத்துவக் குணங்கள்!!!பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.. இந்த பழமொழி மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி.. அப்படி என்ன மகத்துவம் இந்த நல்ல மிளகில்…? …

உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு. இந்த மிளகு இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது . தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா, மைசூர், மற்றும் தமிழ்நாட்டில் கன்னி...யாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளான கொல்லிமலை, சேர்வராயன் மலைகளிலும் நல்லமிளகு அதிகம் விளைகிறது. உலகிலேயே தலைசிறந்த தரம் வாய்ந்த நல்ல மிளகு தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது என்பது நவீன ஆராய்ச்சி கூறும் தகவல். மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது. நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும். வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு. நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது. நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது. வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது. மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது. உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது. இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள். இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும்போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டுவிடுவார்கள். வெளியில் தயாரிக்கப் படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்.

இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையோர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோய்யும் நெருங்கியதில்லை.. தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது.

மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது. தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது.

உடலுக்கு நலன் தரக்கூடியதில் மிளகும் ஒன்று. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. மேலும் இருமல், மலச்சிக்கல், ஜலதோசம், செரிமானம், இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், பல் பாதுகாப்பு, பல் சம்பந்தமான நோய்கள் வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம். மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும். லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது.

நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது… புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து. ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. ஏனெனில் மிளகு புரையழற்சி மற்றும் நாசிநெரிசல் போன்றவற்றிற்கு சிந்த நிவாரணம் தரக்கூடியது. இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது. மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..

ஆக்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும். மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், வலி நிவாரணம் கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாசபிரச்சனைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து.. மேலும் பல் வலி பல் சிதைவு போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர்.

முடிந்த மட்டும் மிளகு பொடியை வீட்டிலே தயார் செய்யுங்கள். கடைகளில் கிடைக்கும் செயற்கை மிளகு தூள்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே புத்துணர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள கூடியது. வீட்டிலே தயார் செய்யும் பொடி கால வரையறையின்றி பயன்படுத்தலாம் மிளகு பொடியும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.. ஒரு சிட்டிகை அளவு மிளகு பொடி சேர்த்து சமைத்தால் சுவை மற்றும் செரிமானம் கிடைக்கிறது. உடல் நலத்தில் ஒட்டு மொத்த சுகாதாரத்திற்கும் மிளகு நல்லது. அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.

 

********************************************************************************

 

பசலைக் கீரையின் மருத்துவக் குணங்கள்


மருத்துவக் குணங்கள்:

பசலைக்கீரை இலையாக அமைந்த கறியாகும். அதில் இரும்பு சத்து ஏராளமாக உள்ளது. எனவே இரத்தம் குன்றியுள்ள சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் நன்மை தருகின்றது. பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து உள்ளது. மருந்தாகும் மதிப்பு உள்ளது. இதில் பெரும் அளவில் வைட்டமின் சத்துக்கள் உள்ளன. சுண்ணாம்புச்சத்து உள்ளது. இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து (ஹிமொகுளோபின்) உள்ளது. புரதங்களைப் பலப்படுத்தும் அமிலங்கள் உள்ளன. அது  நம்மைப் பேணிப் பாதுகாக்கும் உணவு. அதில் காரசத்துள்ள தாதுப் பொருள்கள் ஏராளமாக உள்ளன. ஆதலால் அது தொற்று நோயிக்கு எதிர்பான தடுப்புச் சக்தியை மிகவும் ஆற்றலுடன் பேணுகின்றது.
   
பசலைக்கீரையை உட்கொண்டால் எரிச்சலூட்டும் ஒரு வகை நச்சு அமிலச்சத்து மிகமிகச் சிறிய அளவில் உண்டு. தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதச்சத்தும் இதில் மிகமிகச்சிறிய அளவில் உண்டு. ஆனால் வைட்டமின் சத்துக்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி ‘ ஆகியனவும், பொட்டாசிய உப்பின் காரச்சத்தும் ஏராளமாக உள்ளன. வைட்டமின் ‘ஏ’ பார்வைக் கோளாரைக் குணப்படுத்தும். இரத்த விருத்தி உண்டாக்கும். இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. சோடியம், போலாசின், கால்சியம் உள்ளன ஆனால் கொழுப்பு சத்து கிடையாது.
   
பசலைக்கீரை மிகவும் சுலபமாக செரிக்கின்றது. குளிர்ச்சி தருகின்றது. ஊட்டச்சத்து உள்ளது. எரிச்சலைத் தணிக்கின்றது, மிக உயர்ந்த உணவாக உள்ளது. பித்தம், நீர்தாரை, வெட்ட நோய்கள் குணமாகின்றன. தோல்நோய்கள், மேகம், சீதபேதி குறைகின்றது. இதன் இலைச் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க நீர்கோவை குணமாகும். இந்தக் கீரை சாப்பிடும் போது தாது கெட்டி படும். மூளைக்கு சக்தியைக் கொடுக்கும். இலையை வாட்டி தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். இதை சிறிதளவு தண்ணீரில் சமைக்க வேண்டும். சமைத்த பின் தண்ணீரை வெளியில் கொட்டிவிடக் கூடாது ஏனெனில் அதில் மிகுந்த ஊட்டச்சத்துப் பொருள்கள் உள்ளன. மிளகு, பூண்டு, தக்காளி சேர்த்து ரசம் வைக்கலாம்.
   
பசலைக்கீரையின் இளம், மென்மையான முளைகளைச் சமைக்காத பச்சடிகளில் பயன்படுத்தலாம். இவற்றைப் பச்சடிக் கீரையின் கொழுந்துகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். இது நல்ல பசியைத் தூண்டிவிடுகின்றது. பருப்புகளுடன் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளும் கீரை வகைகள் மிகவும் நன்மை தருகின்றன.
   
பசலைக்கீரை மலத்தை நன்றாக இளகச் செய்கின்றது. எரிச்சலைத் தணிக்கின்றது. திசுக்களின் அழிவை இது குறைக்கின்றது. இதில் உடல் வறட்சிக்கு எதிரான பெரிபெரி என்னும் வீக்க நோயிக்கு எதிரான கரப்பான் வியாதிக்கு எதிரான சத்துக்கள் கணிசமான அளவில் உள்ளன. கொழுந்தாக உள்ள கொடிச் சுருளைப் பச்சையாகவே உண்பது மிகுந்த நன்மையைத் தருகின்றது.
   
நீரிழிவு, இரத்தக் குறைவு, கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பசலைக்கீரை மிகவும் உதவுகின்றது. இதன் சாறு, சிறுநீரில் கற்கள் இருந்தால் அவற்றைக் கரைக்க உதவுகின்றது. கற்களைக் கரைத்து வெளியேற்றும் சக்தி அதற்கு உள்ளது. சிறுநீரகக் கோளாறுகளையும் இது அகற்றுகின்றது. இதன் சாற்றைக் கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகும்.
   
இலைகளை (1 லிருந்து 10 வரை) கஷாயம் வைத்து அருந்தினால் காய்ச்சல், கல்லடைப்பு, சுவாசப்பைகளிலும் குடல்களிலும் ஏற்பட்டுள்ள வீக்கங்கள், சுவாசிப்பதில் சிரமம், வேகமாக இயங்கும் சுவாசம் ஆகியவை குணமாகின்றன. இத்தகைய நோய்களின் போது இது எரிச்சலைத் தணிக்கின்றது. துவர்ப்பு மருந்தாக உதவுகின்றது. சிறுநீரைப் பெருக்குகின்றது.
   
வளரும் இளம்பெண்கள் பசலைக் கீரையை ஏராளமாக உண்ணவேண்டும். அதில் இரும்புச் சத்து ஏராளமாக உள்ளது. சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது.**********************************************

 


 சந்தோஷமான வாழ்க்கைக்கு ஓட்ஸ் உணவு

 

உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை
கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும் , உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும் , கடந்த100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நிரூபித்துள்ளனர்.
 

முழுமையான நிவாரணி

 
ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் இ , துத்தநாகம் , செலினியம் , காப்பர் , இரும்புச்சத்து , மெக்னீசியம் , மாங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன. இதில் அதிக அளவு புரதமும்உள்ளது.  நீரிழிவு நோயாளிகளும் , கொழுப்பு சத்து , உடல்பருமன் கொண்டவர்களும் , உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

தினமும் ஒரு கப் ஓட்ஸ்
 

தினசரி காலை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் செல்களை அகற்றுகிறதாம். இதில் உள்ள ரசாயனம் புற்றுநோய் செல்களை எதிர்த்து அவற்றை அழிக்கின்றனவாம். கெட்ட கொழுப்புகளை நீக்குகிறதாம். நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ் பருகுவதன் மூலம் அவர்களுக்கு ஜீரணம் மெதுவாக நடைபெற்று ரத்தத்தில் சர்க்கரை உடனே கலப்பது தடுக்கப்பட்டது.  

இதயநோய் 

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி ஓட்ஸ் உணவு கொடுத்து வந்ததன் மூலம் இதயத்தில் ரத்த நாளங்களில் படிந்திருந்த கெட்ட கொழுப்புகள் அகன்றன. தமனிஇறுக்கம் நீங்கி மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்தது. உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கப்பட்டது. உடலில் உடல் பலவீனம் மறைந்தது. இறந்து போன செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உருவானது.

 

இளமை

இளமையை தக்கவைக்கும் ஒட்ஸ் சத்துக்கள்
பெண்கள் அழகாக , இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் பச்சை வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும். கோதுமையும் , பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடவும் , இதனால் கோபமும் , கவலையும் பறந்து போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மகிழ்ச்சியான வாழ்க்கை 11 , 12 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள். அதற்குப் பிறகு கடந்த ஆறுஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள். இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள்தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும் , ஆரோக்கியமாகவும் , நல்ல வருமானத்துடன் , சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஓட்ஸ் உணவானது குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். எனவே தினசரி ஒரு கப் ஓட்ஸ் உணவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது என்று அறிவுத்துகின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

 

 *****************************************************

 

 அழகு.............இளமை...... கிரீன் டீ................

 

                                     அதிகாலையில் எழுந்த உடன் டீ குடிக்காவிட்டால் சிலருக்கு எதையோ இழந்தது போல இருக்கும். கிரீன் டீ எனப்படும் பச்சைத் தேநீர் அருந்துவது பலரிடம் இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. உடலுக்குத் தேவையான ‘ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட்’ கிரீன் டீயிலிருந்து மிக அதிக அளவில் கிடைக்கிறது. வைட்டமின் ‘சி’ யிலிருந்து கிடைக்ககூடிய ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அளவை விட 100 மடங்கும் வைட்டமின் ‘ஈ’ யிலிருந்து கிடைப்பதைவிட 25 மடங்கும் அதிகம் கிரீன் டீ யில் கிடைப்பதாக கூறப்படுகிறது.
 
பொதுவாக பறிக்கப்பட்ட தேயிலை உடனடியாக உலர்த்தபடாவிட்டால் வாடி வதங்கி ஆக்ஸிஜனேற்றம் அடந்து அதில் உள்ள குளோரோபில் எனப்படும் பச்சையங்கள் சிதைவுற்று ‘டானின்’ வெளிவருகிறது. இதுவே டீயின் துவர்ப்பு மற்றும் கசப்புத் தன்மைக்கு காரணமாகிறது.இது ஒருவகையான நொதித்தல் வினை போன்றதாகும்.

கிரீன் டீ தயாரிப்பில் இவ்வாறு நொதிக்க விடாமல் இளங்குருத்து தேயிலைகள் உலர வைக்கும் முன்பாக மிதமாக சூடாக்கப்படுவதால் அதில் உள்ள நொதிகளின் வினை மந்தமாக்கப் பட்டு கசப்பு சுவை தரக்கூடிய ‘பாலிபீனால்கள்’ சிதையாமல் பாதுகாக்கப் படுகிறது. அழகு.............இளமை...... கிரீன் டீ................


கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.

பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.
சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.

எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிரீன் டீயின் நன்மைகள்

*  ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

*   உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

*   உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

*    ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

*    இதய நோய் வராமல் தடுக்கிறது.

*    ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

*    உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

*   புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

*    புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.

*    எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

*   பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.
    வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

*    ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

*    சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.
    பருக்கள் வராமல் தடுக்கிறது.
*    நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

*    மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.
*    உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.

பயன்படுத்தும் முறை:


கூடுமானவரை பால் சேர்க்காமலே இது உட்கொள்ளப்படுகிறது. வரக்காபி [டீ]என்பதுபோல இது 'பிளெய்ன் டீ' யாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே சிறப்பு.

இது 'டிப் டீ' எனப்படும் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.
மற்ற டீ போல நேரிடையாக கொதிக்க வைக்கத் தேவையில்லை. அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது.

80-85 டிகிரி வெப்பநிலைக்கு கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பையை சுமார் 1-3 நிமிடம் மூழ்க வைத்தாலே போதும்.இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ அருந்தலாம்.

சுவைக்குத் தேவையானால் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அருந்தலாம்.
விருப்பமானவர்கள் வாசனைக்கு புதினா இலைகள்,எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் பருகலாம்.

ஒருமுறை சாறு இறக்கிய பிறகு வேண்டுமானால் மீண்டும் கொதிநீர் சேர்த்து இரண்டாவது முறையும் வடிக்கட்டி குடிக்கலாம்.

Source:Daily Thanthi (Sunday Magazine 20/11/2011)
 *******************************************

முருங்கையைவிட வெங்காயத்தில் உள்ளது வயாகரா!!


 

                முருங்கைக்காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதை விட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன. தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியாகமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம் பிடித்திருக்கிறார்.

மிகச்சிறிய குளவியோ, தேனீயோ கொட்டி விட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்து விடுவது உண்டு. தேனீ போன்றவை கொட்டி விட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள். ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா? வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப்பொருளை சிதைத்து விடுகிறது.

விஷத்தையும் முறித்து விடுகிறது. ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைககள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, சூப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம்.

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப்பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது. பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவு கள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்து விடுகிறது.

பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பார்கள். இவ்வாறு அடக்கி வைப்பதால் அதில் நுண்ணுயிர்களின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் போதும்.

வெங்காயம் கழிவுப்பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியே தள்ளி விடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும். யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத்தொல்லை இருந்தால் நிறைய வெங்காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும். முதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்தி விடுகிறது.

வெங்காயத்தையும், கடுகு எண்ணையையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்து விடும். எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு செலனியச் சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும்.

இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகளைச் சாப்பிட்டால் செலனியம் சத்து கிடைக்கும். மனநிலையில் சமநிலை உண்டாகும். சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளிப்பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும்.

இதைத் தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான். உடல் எடை அதிகமாக இருந்தாலும் கூட அதை வெங்காயம் குறைத்து விடும். புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப் பொருள் வெங்காயம் புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்தி விடுகிறது.
மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது. முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன. வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத்தாக்கிலிருந்து தப்ப விரும்பினால் வெங்காயத்தை உள்ளங்கை, கன்னங்கள், வயிறு, குதி கால் போன்ற இடங்களில் தடவிக் கொள்ளலாம்.

பெரியவெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவை தான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்றே பெயர். வெங்காயத்தை சாப்பிடுங்கள், நோய் இல்லாமல் வாழுங்கள்.

              

 ******************************************

சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலமா?

 சிலர் பழங்கள் சாப்பிட்டால் சக்கரை கூடும் என்பர். சிலர் சில பழங்கள் உண்ணலாம் என்பார்கள்.

எது உண்மை ? எது பொய் ? இது பற்றி கொஞ்சம் அலசுவோம்!!
 
1.சக்கரை நோய் உள்ளவர்கள் மூன்று வேளையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது!
சாப்பிடக்கூடிய பழங்கள்:

1.ஆப்பிள்
2.ஆரஞ்சு
3.சாத்துக்குடி
4.மாதுளை
5.கொய்யா
6.பப்பாளி 


சாப்பிடக்கூடாத பழங்கள்:   
1.மாம்பழம்
2.வாழை
3.பலாப்பழம்
4.சப்போட்டா
5.திராட்சை
6.சீதாப்பழம்
7.தர்பூசணி
8.அன்னாசி
9.எலுமிச்சை
10.தக்காளி
11.நெல்லிக்காய்
 
2.சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பழங்களில் உள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரகத்தை பாதிக்கும்.

3.பழங்களில் உள்ள மாவுச்சத்தின் பெயர்- ஃப்ரக்டோஸ்( குளுக்கோஸ் அல்ல). இது ஜீரணமாக இன்சுலின் தேவையில்லை. இதனை அளவோடு உண்டால் சக்கரை கூடாது. அதிகம் உண்டால் இது ஈரலுக்கு சென்று குளுக்கோஸாக மாறிவிடும்.
 
4.நமது உடலுக்குத் தேவையான மாவுச்சத்து 60% தானியங்களிலிருந்து கிடைக்கிறது. இதில் 10% பழங்களிலிருந்து எடுத்துக்கொண்டால் தானிய மாவுச்சத்து 50% ஆகக் குறையும்.
 
5.பழங்களில் உள்ள நார்ச்சத்து சக்கரை விரைவாக உயர்வதைத் தடுக்கிறது. , மலச்சிக்கலைத் தடுக்கிறது , பசியைக் கட்டுப்படுத்துகிறது , வயிறு நிறைவை ஏற்படுத்துகிறது.
 
சக்கரை நோயாளிகள் பழம் உண்ணலாம் என்று அறிந்தோம்.
வாழைபழம் மலச்சிக்கலுக்கு நல்லது என்று உண்பார்கள். அது சக்கரை நோயாளிகளுக்கு உகந்தது அல்ல , ஏனெனில் அதில் மாவுச்சத்து அதிகம்.
பப்பாளி: பப்பாளியில் விட்டமின் 'ஏ' அதிகம். ஆகையால் சக்கரை நோயாளிகளுக்கு உகந்த பழமாக உள்ளது. மேலும் இது செல் சிதைவையும் தடுக்கிறது. இதுவும் கொய்யாவும் மலச்சிக்கலுக்கு உகந்தவை.
ஆரஞ்சு , சாத்துக்குடி , நெல்லி: விட்டமின் 'சி' இவற்றில் இருப்பதால் புண்கள் எளிதில் ஆறும் , அதனால் சக்கரை நோயாளிகள் உண்பது நல்லது.

ஜூஸ்:

சிலர் பழம் உண்ணலாம் என்றவுடன் பழ ஜூஸ் குடிக்கலாம் என்று எண்ணுகிறார்கள். இது தவறு.
 
1.ஜூஸில் பழத்தில் உள்ள நார்ச்சத்து இல்லை.
2.மேலும் சக்கரையை விரைவில் உயர்த்தும்.
3.விட்டமின்களும் வீணாகின்றன.

சக்கரை சேர்க்காத பழரசங்கள்:

இவற்றில் சக்கரை போடாவிட்டாலும் சுவைக்காக செயர்க்கை இனிப்புக்கள் மற்றும் குளுக்கோஸ் சேர்க்கிறார்கள்
கர்ப்பிணிப்பெண்கள் ஜூஸ் அருந்தினால் சக்கரை கூடும். ஆகையினால் அதிகம் ஜூஸ் அருந்தக்கூடாது.
 
மேலும் பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பைக்குறைத்து பழங்கள் சேர்த்துக்கொண்டால் இரத்த அழுத்தம் குறையும்.
 
காலை உணவு: ஒரு இட்லியைக் குறைத்து ஒரு ஆப்பிள் சேர்க்கவும்.

நூறு 100 கிராம் பழங்களில் உள்ள முக்கிய சத்துக்கள்:

பழம் மாவுச்சத்து புரதம் நார்ச்சத்து கலோரி
ஆப்பிள் 19 கிராம் 0.36கிராம் 3.3 கிராம் 72
சாத்துக்குடி 7.06 0.4 1.9 20
பப்பாளி 13.7 0.85 2.5 55
தர்பூசணி 89 71 80 80
 
மதிய உணவு: மூன்றில் ஒரு பங்கு சாதம் குறைத்து விட்டு ஒரு கொய்யா சேர்க்கவும்.
 
இரவு உணவு: ஒரு சப்பாத்தியைக் குறைத்து 100 கிராம் பப்பாளி உண்ணவும்.
இப்படி உண்டால் மாச்சத்து (சக்கரைச் சத்து) குறைந்து நார்ச்சத்து அதிகமாகும். அத்துடன் விட்டமின்கள் , தாது உப்புக்களும் கிடைக்கின்றன.
வ்யிறும் நிறைந்து உண்ட திருப்தி ஏற்படும்.
 
உங்களுக்கு சக்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறதா ? ஒரே நேரத்தில் சாப்பிடாமல் 250 கிராம் பழங்களைப் பகிர்ந்து உண்ணவும்


****************************************

உப்பு ரொம்ப தப்ப

 


சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சர்க்கரை என்பதே வெள்ளை நஞ்சாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் மற்றொரு வெள்ளை அபாயம் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது அது – உப்பு.

எவ்வளவு ருசியாகச் சமைத்தாலும் உப்பில்லாவிட்டால் அதை வாயில் வைக்க முடியாது என்பது உண்மைதான். அதே நேரம், உப்பு அளவுக்கு அதிகமாகும்போதும் பல உபத்திரவங்களை அளித்துவிடும். உங்கள் உடம்பில் உப்பு அதிகரித்தால், அதிகமான தண்ணீரை உடம்பு சேர்த்து வைத்துக் கொள்ள ஆரம்பிக்கும். அப்போது உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சினைகள், சிறுநீரகக்கற்கள் ஏன் பக்கவாத பாதிப்பு கூட ஏற்படும். அதிகமான உப்பு, ரத்தக் குழாய்களில் படிந்து, சீரான ரத்த ஓட்டத்துக்குத் தடையை ஏற்படுத்துவதே முக்கிய காரணம்.

இந்த அடைப்பு நீடிக்கும் போது இதய நோய்கள், மாரடைப்பு போன்ற ஆபத்துகள் அடுத்து வரும். 32 நாடுகளில் 10 ஆயிரம் பேர் அன்றாடம் உணவின் மூலம் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அன்றாடம் 6 கிராம் உப்பு அதிகமாக எடுத்துக் கொண்டாலும் அது உயர் ரத்த அழுத்தத்தைஏற் படுத்துவதைக் கண்டுபிடித்தனர். அது இதய நோய்களின் அடித்தளமாகவும் அமைகிறது என்பதை அறிந்தனர். பரம்பரை ரீதியாக இதய நோய் பிரச்சினைகள் இல்லா விட்டாலும் அன்றாட உப்பு அளவில் கவனம் வைப்பது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

salt_370உணவில் அதிகமாக உப்புப் போட்டுக் கொள்ளும் வழக்கம் எனக்கில்லையே என்று நீங்கள் கூறலாம். ஆனால் நீங்கள் சாப்பிடும் நொறுக்குத் தீனிகளில் உப்பு அதிகமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

 உங்களுக்கு அடிக்கடி குடும்பத்துடன் துரித உணவகங்களில் சாப்பிடும் வழக்கம் இருந்தால் அதன் மூலமும் கூடுதல் உப்பு உங்களுக்குள் செல் கிறது. உடனடி உணவுகளிலும் பேக்கிங் செய்யப் பட்டு வரும் உணவுகளிலும் அவற்றைக் கெடாது பாதுகாக்கும் ‘பிரிசர்வேட்டிவ்’ ஆக உப்பு பயன் படுத்தப்படுகிறது.

பாக்கெட் பாப்கார்ன், ஊறுகாய், சாஸ் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் உப்பு அதிகம். கடைகளில்  கிடைக்கும் பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்ற வற்றில் கூட உப்பு இருக்கிறது. இப்படி பெரும்பாலான உணவுப் பொருட்களில் உப்பு சேர்க்கப்படு வதற்குக் காரணம் அது எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கும் பாதுகாப்புப் பொருள் என்பதுதான். சரி, உப்பினால் ஏற்படும்  உபத்திரவங்களைத் தவிர்ப்பது எப்படி? உடம்பிலிருந்து நச்சுக் கழிவுகளை எல்லாம் வெளியேற்றும் வகையில் நிறைய தண்ணீர் குடியுங்கள்.

•  காரசாரமான நொறுக்குத் தீனிகள், ஊறுகாய் போன்றவற்றைத் தவிருங்கள்.

• துரித உணவுகளைத் தவிர்த்து, வீட்டு உணவை விரும்புங்கள்.

• நிறைய காய்கறிகள், பழங்கள் சாப்பிடுங்கள். உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்தை அவை    
   அளிக்கும்.

• உடம்பில் தண்ணீர் தேக்கம் ஏற்படுவதால் நச்சுகளின் அதிகரிப்பை நீராவிக் குளியல்      போன்றவை மூலம் போக்கலாம்.

• பேக்கிங் உணவுகளில் உப்பு சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். சோடியம் குளோரைடு என்று குறிப்பிட்டிருப்பதால் நாம் அதைக் கவனிக்காமல்    போகலாம்.

• உப்பைக் குறைத்து சுவையைக் குறைக்காமல் சமைக்கும் முயற்சிகளில் ஈடுபடுங்கள். அதற்கேற்ப நறுமணப் பொருட்கள் போன்றவற்றைச் சேருங்கள்.


******************************************************

நம் உடலைப் பற்றிய நாம் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் ....


                               குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில்300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்துபெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.

நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.

நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.

பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம்,ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.

நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்ததொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.

நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.

முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.

மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.

ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.

இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.

மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.

நமது மூளை 80% நீரால் ஆனது.

நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.

நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடி தான்.

மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.

பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.

மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.

மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம், கண்கள் 31 நிமிடங்கள் ....
******************************************

ஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்

           ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது.. இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும்.

கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.

காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’, முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

ஆலிவ் மரம் நன்கு வளர சூரிய ஒளியும், உலர் நிலமும், நல்ல கோடை வெயிலும், மிதமான குளிரும் தேவை. ‘திரவத்தங்கம்’ என்று இந்த எண்ணெய் மதிக்கப்படுகிறது.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.

இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய்

மார்பக புற்றுநோயை ஆலிவ் எண்ணெய் தடுக்கும்.
பெண்கள் தினசரி உணவில் 10 ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், மார்பக புற்றுநோயை தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிற்து.

புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களை தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றி பார்சிலோனாவின் ஆடனோமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

மனித உடலுக்கு பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்படது. தினசரி ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து வந்தனர்.

அதில் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித்தொழிப்பது தெரிய வந்தது. மேலும், மரபணுவுக்கு சேதம் ஏற்படாமலும் அது பாதுகாப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்மூலம், மரபணு பாதிப்பால் ஏற்படக்கூடிய மற்ற புற்றுநோய்களையும் ஆலி எண்ணெய் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி ஆராய்ச்சியாளர் எஜுர்ட் எஸ்ரிச் கூறுகையில், " பெண்கள் தினசரி உணவில் 50 மிலி அல்லது 10 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம் " என்றார்.

உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய். அதை கட்டுப்படுத்த ஆலிவ் எண்ணெய் உதவும் என்றார் அவர்.

ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்றார்.

இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.

இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

நன்றி; http://tndawa.blogspot.com*****************************************

இயற்கை உணவுகளும் மருத்துவப் பயன்களும்காரட்

ஐரோப்பா, வடக்கு ஆசியா, அபிசீனியா, வடக்கு ஆப்பிரிக்கா, காஷ்மீர் பகுதிகளில் காரட் விளைந்ததாக வரலாறு உள்ளது. இன்று உலகம் முழுவதும் முழுக்க எல்லா இடங்களிலும் காரட் விளைகிறது. காரட் வேர் உள்ள கிழங்கு வகை யாகும். ஒரு அடி நீளம் உள்ள காரட்டுகளும் உண்டு. தில்லி காரட்டுகள் நன்றாகவும், சுவையாக வும் இருக்கும்.
காரட் லேசான இனிப்பும், பசியைத் தூண்டுவதாகவும், நீர் இளக்கியாகவும் செயல் படும் தன்மையும் கொண்டது. பவுத்திரத்துக்கும், வயிற்றுக் கடுப்பு, வயிற்றில் பூச்சித் தொல்லை களுக்கும் மருத்துவ ரீதியான பலன்களைத் தந்து உதவுகிறது. இருமலைப் போக்கும். இதை மிக அதிகமாகத் தின்றால் பித்தமாகும்.
வைட்டமின் சி, வைட்டமின் டி, நியாசின், பைரிடாக்சின், ஃபோலிக் அமிலம், பயாடின், பென்டோதினிக் அமிலம் மற்றும் பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், தாமிரச்சத்துக்களும் காரட்டில் குறைந்த அளவு உள்ளன.
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரி மானம் ஆகக் கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு நாளைக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். உருளைக் கிழங்கை விட ஆறுமடங்கு கால்சியம் காரட்டில் உள்ளது. வளரும் குழந்தைகள் தினமும் காரட் சாறு குடித்தால் அது முழுமையான உணவாகும். கால்சியம் மற்றும் கரோட்டின் சத்துக்கள் நிறைய உள்ளன. கரோட்டீனை, கல்லீரல் வைட்டமின் ஏ-ஆக மாற்றிச் சேமித்துக் கொள்கிறது.

மருத்துவப் பயன்கள் :

காரட்டை மென்று தின்றால் பற்கள் பலப்படும். வாய், ஈறு சுத்தமாகும், சிறிதளவு உப்பு சேர்த்து காரட் சீவலுடன் சாப்பிட்டால் எக்சீமா குணமாகும். கண்களின் நலத்தைக் காப்பதில் காரட்டிற்கு ஈடில்லை. டோகோகிளின் என்கிற ஹார்மோன் காரட்டில் உள்ளது. இன்சுலின் போன்றதான இது, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.
அமெரிக்காவின் தேசியப் புற்றுநோய்க் கழகம், 1962 வாக்கில் தேசிய இதய, நுரையீரல், ரத்தக் கழகங்களுடன் இணைந்து நாடு தழுவிய மருத்துவப் பரிசோதனை இயக்கம் ஒன்றை நடத்தியது. 22,000 அமெரிக்கவாசிகளுக்கு காரட்டுகளையும், பச்சைக் காய்கறிகளையும் கோடி ரூபாய்களை இதற்காக அமெரிக்க அரசாங்கம் செலவழித்தது.
மேலும், ரஷ்யாவைச் சேர்ந்த டாக்டர். மெட்சினிகோப் என்பவரது ஆய்வுப்படி, காரட்டுக்கு கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் உள்ளதாக மருத்துவ உலகம் அறிந்து கொண்டது. காரட் கெட்ட பாக்டீரியாக்களை, குடல்களி லிருந்து அழித்து வெளியேற்றுகிறது. குடல் நோய்களிலிருந்து காரட் சாறு காக்கிறது. குணமாக்குகிறது. குடல் புண்ணை ஆற்றுகிறது.
சிறுநீரகக் கோளாறுகளில், குறிப்பாக நெப்ரிடிஸ் கோளாறுகளின் போது காரட் சாறு தரலாம். ஏனெனில் காரட் நல்ல நீரிளக்கி, சிறுநீர் சரியாகப் போகாதவர்களும் காரட் ஜுஸ் குடிக்க வேண்டும். உடலிலுள்ள தேவையற்ற யூரிக் அமிலத்தை காரட் வெளியேற்றுவதால், மூட்டுவலி, கீல்வாத நோய்கள் குணமாக உதவுகிறது. பித்தப்பைக் கற்களைக் கரைப்பதுடன், கல்லீரல் கோளாறுகள், நெஞ்சக நோய்கள், சரியாகவும் ரத்தம் வெளியேறாத மாதவிலக்கு ஆகியவற்றுக்கும் காரட் உண்பது நோயை குணப்படுத்தும் சிறந்த வழியாகும். காரட்டில் அதிகமாக வைட்டமின் ஈ உள்ளதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
இந்த வைட்டமின் ஈ உடலுக்கும் மிகவும் நலம் பயக்கக்கூடியது என்று பிரபல சத்துணவு நிபுணர்கள் கருதுகிறார்கள். இது மலட்டுத் தன்மையைப் போக்க மிகவும் உதவுகிறதாம். புற்றுநோய் செல்களை ரத்தத்தில் உயிர்வாழாமல் செய்கிறது. இந்த வைட்டமின் ஈ, புற்றுநோய் வராமலும் காக்கிறது என்று விலங்குகளுக்கு அதிக அளவு உணவாகக் காரட்டைக் கொடுத்து கண்டறிந்துள்ளார்கள். இது மனிதர்களுக்கும் பொருந்துகிறது என்றும் நிச்சயம் தினம் ஒரு காரட், புற்றுநோயை அண்டவிடாது என்றும் இயற்கை மருத்துவ உலகம் உறுதிபடக் கூறுகிறது.

தேங்காய்

வரலாற்றில் முதல்வகை தேங்காய் விளைந்த இடமாக அறியப்பட்டது இந்தியக் கடலோரம் மற்றும் பசிபிக் கடல் பகுதிகள்தான். இன்று உலகம் முழுக்கத் தேங்காய் விளைவிக்கப்படுகிறது.
தாகத்தை அடக்கி, சிறுநீரின் நிறத்தை இயல்பாக்கி, நீர் இளக்கித் தன்மையுடன் உள்ள இளநீரில் சத்துக்கள் பல உள்ளன. தேங்காய்க்குள் பருப்பு வராத சமயத்திலுள்ள நீர் சற்றே கசப்பு அல்லது ருசியின்றி லேசாக உப்புக் கரித்துக் கொண்டிருக்கும். பருப்பு வரத் தொடங்கியதும், வழுக்கையாகும் தருணத்தில் நீர் இனிப்பாக, இளநீராகும். இந்த இளநீரில் உள்ள சர்க்கரை உடனடியாக உறிஞ்சப்பட்டத் தக்கது. சுத்தமானது, கிருமிகள் அற்றது.

மருத்துவப் பயன்கள் :

சிறுநீரகக் கோளாறுகளுக்கும், சிறுநீரகக் கற்கள் பிரச்சினைக்கும், இளநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், இளநீர் மிக நல்ல நீரிளக்கி ஆக இருப்பதுதான். காலராவுக்கு சிகிச்சையளிக்கும்போது இளநீர் அருந்துவது பயன்தரும். காலராவின்போது, வாந்தி பேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே, முக்கியமான தாது உப்புக்களும் வெளியேறிவிடும். இது சில சமயம் மரணத்திற்கும் ஏதுவாகும். இந்தச் சமயத்தில் இளநீரிலுள்ள உடலுக்கு நீர்த்தன்மையைத் தருவதோடு, தேவையான தாது உப்புக்களையும் சேர்க்கும். மேலும், இளநீர் நோய்க்கிருமி எதிர்ப்புச் சக்தி, கெட்ட பாக்டீரியாக்களை எதிர்ப்பதால், குடலிலுள்ள காலரா கிருமிகளை வெளியேற்றவும் செய்யும். ஊசி மூலம் காலராவுக்காக பொட்டாசியத்தை உடலில் ஏற்றுவதைவிட இளநீரிலுள்ள பொட்டாசியம் மிகுந்த மருத்துவப் பயனுடையது என்று வெப்ப நாடுகளின் மருத்துவ நிபுணர்கள் மருத்துவ விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இளநீரிலுள்ள வைட்டமின் பி கலவைச் சத்து இதயத்தை பலமாக்கும். நரம்பு மண்டலத்திற்கு ஊட்டமளிக்கும். செரிமான மண்டலத்தையும் செயல்துடிப்போடு சீராக்கும்.

வெள்ளரி

வெள்ளரியில் பிஞ்சாகவும், காயாகவும், இரண்டு வகையுண்டு. வெள்ளரியும் நல்ல நீரி ளக்கி, செரிமானத்திற்கு உதவுவது. தன்வந்திரி நிகண்டு காரா கூறுகிறது. இப்படி வெள்ளரிப் பிஞ்சு பித்தத்தைத் தணித்து, குடல்களுக்குக் குளிர்ச்சியை ஊட்டுகிறது. சிறுநீரகக் கோளாறு களைச் சரி செய்கிறது. எரிச்சலைக் கட்டுப்படுத்து கிறது. தலைச்சுற்றலைத் தடுக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின் படி, வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்களைக் குணமாக்குகிறது எனக் கண்டறியப் பட்டுள்ளது. எனவே, வெள்ளரி ஒரு முக்கியமான காய்கறியாகும்.  பொதுவாக, வெள்ளரியைத் துண்டுகளாக நறுக்கித் தின்பர். ஆனால், வெள்ளரியைச் சாறாக பயன்படுத்தும் பொழுது ஏராளமான மருத்துவப் பலன்கள் அதிலிருந்து முழுமையாகக் கிடைக்கும். வெறும் வயிற்றில் காலையில் ஒரு டம்ளர் வெள்ளரிச்சாறு குடித்தால் உடலுக்கு மிக நல்லது. வெள்ளரியில் கலோரிகள் குறைவானதால், உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொள்பவர் களுக்கு நன்றாக ஒத்துழைக்கும். வெள்ளரிச் சாறுடன், விதைகளையும் சேர்த்து உட்கொண் டால் மிக அதிகப் பலன்கள் விளையும்.

மருத்துவப் பயன்கள் :

கீல்வாதத்தைப் போக்க உதவுகிறது வெள் ளரி. சிறுநீர்க் கோளாறுகளுக்கும் உதவக் கூடியது. நீரிழிவு நோயாளிகளும், உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்களும் வெள்ளரியை அதிகமாக உட்கொள்வது சாலச் சிறந்தது.

நெல்லி

மனிதன் பிறந்ததிலிருந்து இன்றுவரை உடல்நலம் காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது நெல்லி. குளர்காலத்தில் அதிகமாகக் கிடைக்கும் கனி இது. வேறெந்தக் கனியைக் காட்டிலும் மருத்துவப் பண்புகளுடன் இருப்பதில் நெல்லியே முதலிடம் வகிக்கிறது. உடலின் ஒட்டுமொத்த வலுவுக்கும் நெல்லி ஒரு காயகல்பமாகத் திகழ் கிறது. உலகில் புகழ்பெற்ற லேகியமாக இருக்கிற சயவனப் பிரசாவில் முக்கிய சத்து நெல்லிதான். ஒரு எலுமிச்சையளவு கூட பெரிதாக விளையக் கூடியது இது. லேசாக வெளுத்த பச்சை நிறமான இது அழகான குத்துக்கோடுகள் கொண்டது.
இதனுடைய சுவையில் லேசான அமிலநெடி இருக்கும். முடியை வளர்க்கும். விந்துவைக் கூட்டும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். கண்பார்வைப் புலனை மேம்படுத்தும், கபம், பித்தம், வாய்வு என்ற மூன்று கோளாறுகளையும் நீக்கும். மனிதனுக்கு இடம், பொருள், காலம், வயதை மீறி என்றுமே பயனளிக்கக் கூடியது. வைட்டமின் சி இக்கனியில் தான் மிக மிக அதிகம். இது மனிதனுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கூட்டும்.
மேலும், நெல்லிக்கனியில் காலிக் அமிலமும், அல்புமினும் அடங்கியுள்ளன. வைட்டமின் சி சத்தை நீண்டகாலம் தேக்கியிருக்கும். நிழலில் உலர்த்தப் பட்டால் வைட்டமின் சி சத்தை நீண்ட காலம் தேக்கியிருக்கும். உலர்த்தப்பட்ட நெல்லிக் கனியில் 2,400 மில்லி கிராம் முதல் 2,600 மில்லி கிராம் வரை 100 கிராமுக்கு என்ற கணக்கில் வைட்டமின் சி இருக்கும். ஒரு மனிதனின் ஒரு நாளைய வைட்டமின் சி தேவையின் அளவு 75 மில்லி கிராம். ஒரு நெல்லிக்கனியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் சி-யின் அளவு 16 வாழைப்பழங்களிலிருந்து கிடைப்பதை விடவும், மூன்று ஆரஞ்சுப் பழங்களிலிருந்து கிடைப்பதை விடவும் அதிகமானது.
நெல்லிக்காயை சிறுசிறு துண்டுகளாக்கி, கொட்டையை எடுத்தெறிந்துவிட்டு சாறாக்கலாம். நெல்லிக்காயை நறுக்கும்போது இரும்புக் கத்திக்குப் பதிலாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கத்தியால் நறுக்கவேண்டும். இரும்புடன் நெல்லி உரசும்போது, அதன் மருத்துவப்பண்பு குறைகிறது. அதிகாலையில், வெறும் வயிற்றில் நெல்லிச்சாறு பருகுவது நல்லது.
நெல்லிக்காயை ஒரே சமயத்தில் அதிகமாகத் தின்ன முடியாது. எனவே, சாறாக்கி அருந்துவது நல்லது. தேனைக் கலந்தும் இதன் சாற்றைக் குடிக்கலாம். வெல்லத்தையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம். நெல்லிக்கனியை, சாறாகப் பயன் படுத்துவதுதான் அதை வேறெந்த முறையில் உபயோகிப்பதைக் காட்டிலும் மேலானது.

மருத்துவப் பயன்கள் :

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தரவல்லது. இரண்டு மூன்று மாதங் களுக்கு விடாமல் நெல்லிச்சாறு பருகி னால் விந்து உற்பத்தியாகி ஆண்மை பெருகி மலட்டுத்தன்மை நீங்கும். கண் நோய்களுக்கும், பார்வைத் திறனுக்கும் நெல் லியைக் கொண்டு நிவாரணம் பெறலாம். மலச் சிக்கல் நீங்க பெரிதும் உதவுகிறது. ரத்தத்தைச் சுத்திகரிக் கிறது. நீடித்த செரிமான மின்மைக்கு நல்ல மருந்து. மஞ்சள் காமாலை நோயையும் தீர்க்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். இதயத்திற்கு வலுவைச் சேர்க்கும்.

(மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)
-.keetru.com