சனி, 20 அக்டோபர், 2012

தொலைபேசி உரையாடல் "டேப்" அழிந்து விட்டது : புலனாய்வுத்துறையின் "சதி" நீதிமன்றத்தில் அம்பலம்!


                  மும்பை குண்டுவெடிப்பில், தொலைபேசி உரையாடல்களை ஆதாரமாக கொண்டு, முஸ்லிம்கள் கைது செய்யப்பட வழக்கில், மேற்படி தொலைபேசி உரையாடல் குறித்த (CDR) "டேப்" அழிந்து விட்டதாக, கூறி நீதிமன்றத்தில் தலைகுனிந்து நின்றது,புலனாய்வுத்துறை.

சென்ற ஆண்டில் "மும்பை லோக்கல் ரெயிலில்" குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்ட வழக்கில், அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள், கமால் அஹ்மத் அன்சாரி, டாக்டர் தன்வீர் அஹ்மத், முஹம்மத் பைசல் ஷேக், இஹ்திஷாம் சித்தீகி, முஹம்மத் மாஜித் ஷரீப், ஷேக் ஆலம், முஹம்மத் சாஜித் அன்சாரி, அப்துல் வாஹித், முசம்மில், சுஹைல் மஸ்வூத், சமீர் அஹ்மத், நவீத் ஹுசைன் மற்றும் ஆசிப் கான் ஆகிய 13 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அப்பாவி முஸ்லிம்களின் விடுதலைக்காக "ஜம்யியதுல் உலமா" (அர்ஷத்  மதனி) சார்பில் தொடரப்பட்ட வழக்கில், முஸ்லிம்கள் சார்பில் ஆஜரான வக்கீல்களின் சரமாரிக்கேள்விகளுக்கு, பதிலளிக்கமுடியாமல் திணறினார்,புலனாய்வுத்துறை சார்பில் ஆஜரான "அடிஷனல் சாலிசிட்டர் ஜெனெரல்" தார் யூஷ் கம்பாட்டா.

குறிப்பாக, "தொலைபேசி உரையாடல்"களை முக்கிய ஆதாரமாக புலனாய்வுத்துறை கூறியிருந்தபடியால், அந்த உரையாடல்கள் அடங்கிய "டேப்" ஆதாரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கோரினர்,முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர்கள்.

கைது செய்யப்பட்டவர்கள், குண்டுவெடிப்பின் போது சம்பவ இடத்தில் இருந்ததாக, புலனாய்வுத்துறை கூறியிருந்தது.
மேலும், அவர்கள் தங்களுக்கிடையில் பேசிக்கொண்டதாக சொல்லப்படும் உரையாடல்கள் மற்றும் சம்பவம் நிகழ்ந்த போது அவர்கள் எங்கிருந்தனர்? போன்ற "தொலைதொடர்பு" ஆதாரங்கள் குறித்து கேள்வியெழுப்பியபோது, அது குறித்த ஆவணங்கள் அழிந்து விட்டதாக, அரசு வக்கீல் கூறினார்.

இதை  கேட்டு கடும் கோபமடைந்தார் நீதிபதி "அபை தப்சே".
தொலைபேசி உரையாடல் அழிந்து விட்டதென்றால், புலனாய்வுத்துறை அதிகாரிகளை-குறிப்பாக, கைது நடவடிக்கைக்கு  தலைமை தாங்கிய "ராகேஷ் மாரியா" என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி கோரிக்கை விடுத்தனர், நமது வழக்கறிஞர்கள்.

இதை குறித்துக்கொண்ட நீதிபதி, முதல்கட்ட "வாத-பிரதிவாதங்களுக்கு பிறகு, அது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.
முஸ்லிம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடும்போது, கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்கள் அப்பாவிகள், அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதர்கள், சம்பவ இடத்தில் அவர்கள் இருக்கவுமில்லை, தொலைபேசியில் பரஸ்பரம் பேசிக்கொள்ளவுமில்லை என்று வாதிட்டனர்.

அத்துடன், குறிப்பிட்ட நாளின்போது, இவர்கள் எந்த எல்லைகளில் இருந்தனர்? யாரோடு பேசினர்? போன்ற எல்லா விவரங்கள் குறித்தும், உரிய தகவல்கள்களை வழங்கிட, சம்மந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட கோரிக்கை வைத்தனர்.

இந்த வழக்கில், "ஜம்யியதுல் உலமா" சார்பில், யோக் சௌத்ரி, ஷரீப் ஷேக், வஹாப் கான், மற்றும் அன்சாரி தம்போலி ஆகியோர் வாதாடினர்.

நன்றி - maruppu.in

அதிசயம்!.... ஆனால் உண்மை!! : சென்னையில் "வக்ப்" வாரிய சொத்து மீட்பு!                     சென்னை உட்பட தமிழகம் முழுவதும், இஸ்லாமிய மக்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புடைய "வக்ப்" சொத்துக்கள் உள்ளன.

இதில், 90% சொத்துக்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது.

வேதனை என்னவென்றால், இந்த சொத்துக்களை மீட்பதற்காக ஆங்காங்கே உள்ள "உள்ளூர் மக்கள்" முயற்ச்சித்தாலும் -ஆக்கிரமிப்பாளர்களே அசைந்து கொடுக்க முற்பட்டாலும், "வக்ப் வாரியத்தில் வேலை பார்க்கும் ஊழலின் ஊற்றுக்கண்களாக செயல்படும் அதிகாரிகள்" பெரும் தொகையை "கையூட்டு" பெற்றுக்கொண்டு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக, நேரடியாகவே களத்தில் இறங்கி, ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு சட்டரீதியான (குறுக்கு வழிகள் குறித்த) ஆலோசனைகளை வழங்கி, அவர்களுக்கு உறுதுணையாக செயல்படுவர்.

அந்த அளவிற்கு, வக்ப் வாரியத்தில் "லஞ்சம்" தலை விரித்தாடுகிறது.

இதில், ஓரிரு அதிகாரிகள் மட்டும் விதி விலக்காக இருக்கலாம்.

தற்போது, சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த, வக்பு வாரியத்துக்குச் சொந்தமான பல கோடி மதிப்புள்ள 2 கிரவுண்ட் இடம் மீட்கப்பட்டது.

அங்கு கட்டப்பட்டிருந்த 2 மாடிக் கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

அந்தக் கட்டடத்தை இடித்து, வேலி அமைக்கும் பணி செவ்வாய்கிழமை (16/10) நடைபெற்றது.

இந்த இடத்தை "திமுக பிரமுகர்" ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்தார்.

வக்பு வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன், முதன்மைச் செயலர் அப்துல் ரசாக் ஆகியோர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கட்டடம் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டது.

"அ.தி.மு.க"வை சேர்ந்த "எம்.ஜி.ஆர். ரசிகர்" மன்றத்தலைவரும் வக்ப் வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன், நேரடியாக களத்தில் இறங்கி மீட்பு நடவடிக்கையில் ஈடு பட்டது,பாராட்டுக்கு உரியது.

இதே ஐஸ் ஹவுஸ் பகுதியில் மட்டும் வக்பு வாரியத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.200 கோடி மதிப்புள்ள 27 கிரவுண்ட் நிலம் தனியாரின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது.

அவை அனைத்தையும் முறையான முயற்சிகள் மூலம் மீட்கப்பட வேண்டும், என்பதே ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களின் கோரிக்கையாகும்.

இது குறித்து தமிழ்மகன் உசேன் குறிப்பிடும்போது, முதல் கட்டமாக சென்னையில் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து வக்பு வாரிய இடங்களும் மீட்கப்படும்.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு வாரியத்துக்குச் சொந்தமான இடங்கள் மீட்கப்படும் என்றார்.


நன்றி - maruppu.in

"ராமஜென்ம பூமி" சுற்று வட்டாரங்களில் எந்த இடத்திலும் மசூதி கட்ட விடமாட்டோம் : உமா பாரதி!


                                  பாபர் மசூதியை ராமஜென்மபூமி என சார்ச்சைக்கு உள்ளாக்கிவிட்டதால், புதிதாக பொறுப்பேற்றுள்ள உத்தர பிரதேச அரசு, சுமூகமான ஒரு நிலைக்கு முயற்சிப்பதாக, ஊகங்கள் அடிப்படையில் "ஹிந்துத்துவா சக்திகள்" பேசி வருகின்றன.

குறிப்பிட்ட 70 ஏக்கர் நிலத்தை விட்டுவிட்டு, அதன் அருகில் உள்ள ஒரு இடத்தில் மசூதி கட்டும் நிலத்தை முலாயம் சிங் தேடி வருவதாக, அவர்கள் சொல்கின்றனர்.

இது தவிர, அலகாபாத் கட்டப்பஞ்சாயத்து (கோர்ட்) தீர்ப்பு மூலம், முஸ்லிம்களுக்கு கிடைக்கப்பெற்ற 3ல் ஒரு பகுதி நிலத்தில் "தோட்டம்" அமைத்து பராமரிக்கும் திட்டம் உள்ளதாகவும் "வதந்திகள்" கசிய விடப்படுகிறது.

இதில், முஸ்லிம்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், யூகங்களுக்கு பதிலளிக்க தேவையில்லை என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் அமைதி காத்து வருகின்றனர்.

இந்நிலையில் தான், ஹிந்துத்துவா சக்திகள் தொடர்ந்து அனல் கக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கங்கை நதி பாதுகாப்பு யாத்திரை மேற்கொண்டுள்ள பா.ஜ.க.வின் உமா பாரதி, நேற்று "காஸ் கஞ்" பகுதியில் அமைக்கப்பட்ட மேடையில் "மத துவேஷ கருத்து"க்களை கொட்டி தீர்த்தார்.
அங்கு பேசிய உமா பாரதி, எக்காரணம் கொண்டும், ராமஜென்மபூமியை சுற்றியுள்ள எந்த பகுதியிலும் மசூதி கட்டுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,என்றார்.

ராமர் கோவில் விவகாரம் அரசியல் ரீதியாக பலவீனமடைந்து விட்ட போதிலும், அதை பற்றி எனக்கு கவலை இல்லை.

ராமஜென்மபூமிக்கு அருகாமை பகுதிகளில் மசூதி உருவாவதை என்ன விலை கொடுத்தேனும் தடுப்போம், என்றார்,உமா பாரதி.

-maruppu.in

மில்லத் நகர் பள்ளி வாசல் திடலில் புதிய மின்கம்பம் மாற்றபட்டது.

IMG-20121018-WA0003(1)

                                          பல வருடமாக மில்லத் நகரில் பல மின் கம்பங்கள் விழும் நிலையில் உள்ளன. புதிய கம்பத்தை  மாற்ற பல முறை மனுக்கள் மக்களால் கொடுக்கபட்டது அதன் பலனாக மில்லத் நகர்  பள்ளிவாசல் திடலில்  விழும் நிலையில் இருந்த கம்பத்தினை 18 /10 /2012 வியாழன் அன்று மதியம் 2 :00 மணி அளவில் புதிய மின் கம்பம் மக்கள் உதவியுடன்  மாற்றப்பட்டுள்ளது.

மற்ற கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?


இடம் மில்லத் நகர்  பள்ளி வாசல் திடல்

புகைப்படம் M மன்சூர் 
பக்ரீத் பெருநாளில் பி.எட். கலந்தாய்வு ஒத்தி வைக்குமாறு மமக கோரிக்கை                            முஸ்லிம்களின் பக்ரீத் பெருநாளில் நடைபெறவிருக்கும் பி.எட். கலந்தாய்வு மற்றும் கருத்தரங்குகளை ஒத்தி வைக்குமாறு மனிதநேய மக்கள் கட்சியின் மூத்தத் தலைவரும் இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா தமிழக உயர்கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மேலும் அக்கடித்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

வருகின்ற 27.10.2012 அன்று முஸ்லிம்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் பி.எட். பயிற்சியில் பயின்றுவரும் மாணவ/மாணவியர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் கருத்தரங்கம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதால் அதில் காலை 9:30 மணிக்கு பங்கேற்க வேண்டும் என்று மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொலைதூர கல்வி இயக்குநர் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பக்ரீத் தினத்தன்று தமிழக அரசு விடுமுறை நாளாகவும் அறிவித்துள்ளது. இப்புனிதநாளில் காலை 8 மணி முதல் 12 வரை முஸ்லிம்கள் தங்களின் இறை கடமைகளை நிறைவேற்றியவாறு இருப்பர். இந்த வேளையில் தேர்வு எழுத்துவதுதோ கவுன்சிலிங் மற்றும் கருத்தரங்குகளில் பங்கேற்பது என்பது சிரமம்.

எனவே 27.10.2012 நடைபெறவுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக பி.எட். கவுன்சிலிங் மற்றும் கருத்தரங்க தேதிகளை மாற்றம் செய்து ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்கு உயிர்பலி நான்குமடங்கானது

111118213022_dengue_mosquito_argentina_304x171_sciencephotolibrary_nocredit

                                  இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் உயிரிழந்திருப்பதாகவும் இந்திய நடுவணரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது இந்த ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் ஐயாயிரத்து முந்நூற்றுக்கும் அதிகமானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர்களில் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய அளவில் திரட்டப்பட்ட மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிலவிய டெங்கு தாக்குதல்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இதன் தாக்குதல் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாகவும், உயிரிழப்புக்கள் நான்குமடங்கு அதிகரித்திருப்பதாகவும் அந்த புள்ளிவிவரம் கூறுகிறது.

மேலும் தென்னிந்தியாவின் பிற மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்னாடகாவின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது கூட தமிழ்நாட்டில் தாக்குதல் இரண்டு மடங்காகவும், உயிரிழப்புக்கள் நான்கு முதல் ஐந்து மடங்காக இருப்பதாகவும் இந்த புள்ளிவிவரன்கள் காட்டுகின்றன.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்கு தாக்குதலும் உயிர்ப்பலியும் தீவிரமானதற்கு அரசின் மெத்தனம், அதிகாரிகளின் திட்டமிடாமை, பொதுமக்களின் ஒத்துழைப்பின்மை மற்றும் மருத்துவர்களின் கவனக்குறைவான சிகிச்சை ஆகிய நான்குவிதமான காரணிகள் இருப்பதாக கூறுகிறார் தமிழக அரசின் பொதுசுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர் எஸ் இளங்கோ அவர்கள்.

- BBC TAMIL

புதன், 17 அக்டோபர், 2012

தமிழன் தொலைக்காட்சியில் இவர்கள் பார்வையில் நபிகள் நாயகம்(ஸல்)                  இன்ஷா அல்லாஹ் இன்று(17-10-2012)இரவு இந்திய நேரம் 10 மணிக்கு
தமிழன் தொலைக்காட்சியில் மானுட வசந்தம் நிகழ்ச்சியில்

இவர்கள் பார்வையில்
நபிகள் நாயகம்(ஸல்)


என்ற தலைப்பில் கவிஞர் ஈரோடு தமிழன்பன்
அவர்களின் அழகிய உரை.அறிஞர் அண்ணா பார்வையில் நபி(ஸல்) ஆற்றொழுக்கான உரை

இதே நேரத்தில்
www.tamilantelivision.com என்ற இணையதள முகவரியிலும் காணலாம்

--
Thanks & Regards,
K.Jalaludeen
Joint Secretary

ISLAMIC FOUNDATION TRUST

138, PERAMBUR HIGH ROAD
CHENNAI - 600 012
INDIA

TEL: +91-44-2662 4401/ 4332 6446

FAX: +91-44-2662 0682
E-MAIL: iftchennai12@gmail.com
Website: www.ift-chennai.org

Read Samarasam (Tamil Fortnightly) at
www.samarasam.net
 
 
 
 

SDPI கட்சி நடத்திய மது விலக்கை முழுமையாக அமல்படுத்தக்கோரி தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் (புகைபடம் )

சென்னையின் பிரமாண்ட முன்னேற்றத்துக்கு ரூ. 879 கோடி ஒதுக்கீடு                                                   சென்னை: சென்னை மாநகர வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் ரூ. 879.78 கோடி நிதியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கி உத்தரவிட்டு உள்ளார்.(செய்தி)

தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் பரவும் அளவுக்கு மின்சார வெட்டு இருக்கையில் சென்னைக்கு இப்போது 879.78 கோடிகளை அள்ளிக் கொட்ட வேண்டுமா? சிங்கார சென்னை என்று பல்லாயிரம் கோடிகளை செலவிட்டும் சாக்கடை நாற்
றத்தில் தான் சென்னையில் பெரும்பாலான மக்கள் வாழ்கின்றனர். மெரினாவை சுத்தப்படுத்த பல்லாயிரம் கோடிகளை செலவிட்டு மெரீனா சுத்தமாகத் தான் இருக்கிறதா?

முடிந்தவரை ஒப்பந்தகாரர்கள் சம்பாதிக்க வழிவிட்டு வரும் தேர்தலுடன் தமிழக முதல்வர் அரசியலுக்கு முழுக்குப் போடப் போகிறாரா? ஒருநாளைக்கு நான்கு மணிநேரம் கூட மின்சாரம் இல்லாமல் தமிழக மக்கள் சொல்லொணா துன்பத்தில் இருக்கையில் முதலமைச்சர் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது பற்றி மக்கள் ஆச்சரியத்துடன் விழி பிதுங்குகிறார்கள்.மின்வாரிய பொறியாளரின் காம களியாட்டம்

சுப்பிரமணிமின்வாரிய பொறியாளரின் காம களியாட்டம்: 100க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசம்!

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து, அதை, "லேப்-டாப்' மற்றும் சி.டி.,யில் பதிவு செய்து, ரசித்து வந்த, 57 வயதான மின் வாரியப் பொறியாளரை, போலீசார் கைது செய்தனர். பொறியாளரின் காம லீலைகளை அறிந்த போலீசார், அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மின் வாரிய அலுவலகத்தில், உதவியாளராக பணிபுரியும் கண்ணம்மாள், 44, என்பவருக்கு, "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்துள்ளார். சுப்பிரமணியத்தின் ஆசை வார்த்தைக்கு அடி பணியாத கண்ணம்மாள், வால்பாறை போலீசில் புகார் செய்தார்; மின்வாரிய அதிகாரி என்பதால், சுப்பிரமணியத்தை, போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதன் பிறகும் கண்ணம்மாளுக்கு, செக்ஸ் டார்ச்சரும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த கண்ணம்மாள், கோவை எஸ்.பி.,யிடம் புகார் மனு கொடுத்தார். எஸ்.பி., அலுவலகத்திலிருந்து வந்த உத்தரவை அடுத்து, கடந்த மாதம், 21ம் தேதி, சுப்பிரமணியத்தை கைது செய்த போலீசார், வழக்கு பதிந்தனர். இதையடுத்து அவர், பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். சுப்பிரமணியத்தின் பின்னணியை புரட்டிய போலீசாருக்கு, அதிர்ச்சி காத்திருந்தது

சுப்பிரமணியத்திடம் இருந்து, போலீசார் கைப்பற்றிய, அதிநவீன, "வீடியோ கேமரா' மற்றும் "லேப்-டாப்'பில், 13 வயது முதல், 50 வயது நிரம்பிய பெண்களுடன், பல்வேறு கோணங்களில், சுப்பிரமணியம் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள், பதிவாகி இருந்தன. மேட்டுப்பாளையம் அருகே உள்ள, பில்லூர் மின்சார வாரிய கட்டுமானப் பிரிவில், சுப்பிரமணியம் பணிபுரிந்தபோது, அங்குள்ள ஓய்வு விடுதியில், பல பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதுதவிர, அங்குள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும், "செட்டில்மென்ட்' பகுதிக்குச் சென்று, பெண்கள் குளிக்கும் பொது அறையில், ரகசிய கேமராவை பொருத்தி, அந்தக் காட்சிகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதை, வாடிக்கையாக வைத்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் இருந்து, புரோக்கர் மூலம், கல்லூரி மாணவியரை வர வழைத்து, உல்லாசமாக இருந்ததும், "லேப்-டாப்'பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது, "காம வலையில்' பல குடும்ப பெண்களும் சிக்கி உள்ளனர். இதுகுறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

- முகவை எஸ். சம்சுதீன்

புஷ்ரா நல அறக்கட்டளைக்கு உங்களின் கேக் ஆர்டரை கொடுத்து பயனடைவீர்

                                         கடந்த பல வருடங்களாக வி.களத்தூர், மில்லத் நகர் மக்களுக்கு ஈத் பெருநாள் கேக்குகளை சிறப்பாக வழங்கி வருகிறது.இந்த வருடமும் தனது சேவையை மேம்படுத்தும் விதமாக வரும் பக்ரீத் பெருநாள் அன்று லப்பைகுடிகாட்டிலும் பக்ரீத் கேக்கை நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு குறித்த நேரத்தி்ல் டெலிவரி செய்யப்பபடும்.உங்களின் ஆர்டர்களை கீழ்கானும் துபாயில் உள்ள நமது பொருப்பாளர்களிடம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஒரு கேக்கின் விலை 13 திர்ஹம் மட்டுமே! 

ஆர்டர் பெறும் கடைசி தேதி : 23.10.2012
கேக் ஆர்டர்களுக்கு கிழ்க்கண்ட சகோர்களை  தொடர்பு கொள்ளவும்:

A . அப்துல் சலாம்                          055 1153584
 
 F அப்துல் ரஹ்மான்                    050 6402386


F முஹம்மது இஸ்மாயில்      055 8498129


S பைஜுர் ரஹ்மான்                    055 2893450


அ சம்சு தீன் (அல்குஸ்)              050 3685044


S சலீம் பாஷா (ஷார்ஜா)           056 1522651


M முஹம்மது இஷாக் (அபுதாபி)     056 6737912

இப்படிக்கு
புஷ்ரா நல அறக்கட்டளை

TNTJ சகோதரர்களுக்கு வேண்டுகோள்

அப்துல் ரசாக்அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ,

கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணன் பி.ஜே அவர்கள் உடல்நலம் பற்றிய தகவல் ஃபேஸ்புக்கி்ல் பார்த்தேன். 1989 ம் ஆண்டு முதல் 2004 ம் ஆண்டு வரை அண்ணனை விட்டு பிரிந்து இருக்கிறேன். சேர்ந்து இருந்த காலத்திலும் பிரிந்து இருந்த காலத்திலம் நான் பி.ஜே ப்ற்றியும் பி.ஜே சார்ந்துள்ள இயக்கங்கள் பற்றியும் அவதுர்று பேசியதில்லை. பி.ஜே யும் நானும் ஒரே மேடையில் பல கூட்டங்களில் பேசியிருக்கிறோம் ஆனால் பி.ஜே அவர்களின் உடல் நலம் பற்றிய அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட வார்த்தைகள் தவறானது என்பதை ஃபேஸ்புககில் சுட்டிக்காட்டி இருந்தேன். உடல் நிலை சரியில்லை என்று சொன்னால் மருத்துவம் பார்க்க வேண்டும், அதை விட்டு விட்டு எனக்கு உதவி செய்ய யாரும் வராதீர்கள் என்று பி.ஜே கூப்பாடு போடுகிறார்.

நான் கேட்கிறேன் பி.ஜேக்கு உதவி செய்ய கியு வரிசையில் மக்கள் காத்து நிற்கிறார்களா? அல்லது பி.ஜே தனக்கு உதவி செய்யும் படி மறைமுகமாக உதவி கேட்கும் வார்த்தைகளா? அடுத்து பி.ஜே சொல்கிறார் : "நான் மருத்துவமனையில் சேர்ந்த உடன் உளவுத்துறைக்கு உடனே தெறிந்துவிடும்" என்று , திருவாளர் பி.ஜே மருத்துவமனையில் சேர்வதற்கும் உளவுத்துறைக்கும் என்ன சம்பந்தம்? அப்படியானால் திருவாளர் பி.ஜே  உளவாளியா? காட்டிக்கொடுப்பவரா? அடுத்து பி.ஜே சொல்கிறார் : "எதிரி அமைப்புகளுக்கு உடனே தெறிந்துவிடும்" எதிரி அமைப்புகள் என்றால் யார்? சகோதர அமைப்புகளை மார்க்கம் அறிந்த பி.ஜே அவர்களே எதிரி அமைப்பு என்று சொல்லலாமா? தன்னையும் தனது TNTJ  அமைப்பை பின்பற்றுபவர்களையும் தவிர மற்றவர்கள் எல்லாம் நேர்வழி பெறாதவர்கள் என்று ஃபத்வா கொடுத்த பி.ஜேக்கு வேண்டுமானால் அது சகஜமாக இருக்கலாம்.

நான் அனுப்பிய செய்தியை ஃபேஸ்புக்கில் படித்தவர்கள் TNTJ இய்கத்தை சேர்ந்தவர்கள், பி.ஜே மீது பக்தி கொண்டவர்கள், நான் அனுப்பிய கடிதத்தின் சாராம்சத்தை சரியாக புறியாதவர்கள் என்னிடத்தில் நேரடியாக விளக்கம் கேட்பதை விட்டுவிட்டு சகோதர அமைப்பான INTJ யின் எஸ்.எம் பாக்கர் அவர்களையும் இணையதள எழுத்தாளர் முகவைத்தமிழன் (எ) ரைசுதீனை பற்றியும் உண்மைக்கு மாறான புணையப்பட்ட பத்திரிகை தகவல்களை அடிப்படையாக கொண்ட அவதூறான செய்திகளை பரப்பியதோடு எனக்கும் அனுப்பியுள்ளார்கள். எந்த ஒரு சகோதர இயக்கங்களை சேர்ந்தவர்களையும், தனது அமைப்பில் உள்ள தனக்கு அடுத்த கட்டத்தில் உள்ள நிர்வாகிகள் தன்னை முந்த முயன்றால் அவர்கள் மீதும் பொறாமை கொண்டு அவதுர்று பேசுவதும் , பொய்யான குற்றம் சுமத்துவதும் தீர விசாரிக்காமல் தவறான செய்திகளை பரப்புவதும் பி.ஜே அவர்களின் தனிப்பன்பு இதையே அவர் தனது பக்தர்களுக்கும் கற்றுக்கொடுத்துள்ளாரா?

காவல்துறையால் போடப்படும் வழக்குகள் அணைத்தும் உண்மையானது அல்ல!;! பெரும்பாலும் பழிவாங்கும் நோக்கில் பொய்யான வழக்குகளையே பிரபலமானவர்கள் மீது காவல்துறை பதிவு செய்கிறது. இன்னும் தமிழகத்தில் காவல்துறையால் போடப்படும் வழக்குகளில் 95 சதவீதம் பொய் வழக்குகள் என்று பிற்பாடு நீதிமன்றத்தில் நிறுபிக்கப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் நசிரபராதிகளாக விடுதலை செய்யப்படுவது நமது கண்கூட காணும் நிகழ்ச்சிகள் . காவல்துறை போடும் வழக்குகள் எல்லாம் உண்மையானால் பி.ஜே அவர்கள் மேல் தொண்டி காவல்நிலையத்தில் போடப்பட்ட வழக்குகள் உண்மையா? மலேசியாவில் போதைப்பொருள் கடத்தியதாக பி.ஜே மீது போடப்பட்ட வழக்கு உண்மையா? இதைக்கூட TNTJ அமைப்பினர் உணர வேண்டாமா?

தவ்ஹீது பிரச்சாரத்தை மேற்கொள்ள கூடிய பி.ஜேயும் அவருடைய பக்தர்களும் இஸ்லாமிய அமைப்புகளை பற்றி தவறாக பேசுவது ஏன்? தேர்தல் காலங்களில் ஏதாவது ஒரு கட்சியை தாங்கி பிடித்து கொண்டு பி,ஜேயும் அவரது பக்தர்களும் பிரச்சாரம் செய்வது சரியா? அரசியலே வேண்டாம் , அரசியலில் சீட்டு கேட்க மாட்டோம் , தவ்ஹீது மட்டுமே எங்களது கொள்கை என்று முழங்கும் நீங்கள் தேர்தல் காலங்களில் பி.ஜே ஆதரிக்கும் வேட்பாளர் குடிகாரன், விபச்சாரன், திருடன், லஞ்சம் வாங்குபவன் என் யாராக இருந்தாலும் அவர்களை ஆதரித்தம் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்வதுதான் அண்ணனின் தவ்ஹீதா? பி.ஜே அவர்கள் தான் ஆதரிக்கும் வேட்பாளரின் கையை பிடித்து "இவருக்கு நீங்கள் வாக்களிப்பீரா?" என கூவினால் உடனே பக்தர்கள் "அல்லாஹீ அக்பர்" என்று பதிலுக்கு கூவுகிறார்கள்.....நேர்மையற்றவர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்கும் "அல்லாஹீ அக்பர்" என் கூவுவதற்கும் என்ன சம்பந்தம்'? இனிமேல் தவ்ஹீது பிரச்சாரம் செய்யக்கூடிய TNTJ அமைப்பினர் உலக லாபம் தேடாமல் மறுமைக்காக உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

அண்ணனின் பக்தனல்ல அல்லாஹ்வின் விசுவாசி
அப்துல் ரசாக் - சேர்மன் , பி.வி.எம் அறக்கட்டளை
தொலைபேசி : 9443465765 - 9842423752


காவிரிக்காக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தலையில் கருப்பு முண்டாசு கட்டிக்கொண்டு அறவழி ஆர்ப்பாட்டம்

                                               
                                       காவிரி நதி நீரில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குரிய பங்கினை தர மறுக்கும் கன்னட அரசியல்வாதிகளையும், மொழி வெறியர்களையும் கண்டித்து மமக வின் சார்பில் இன்று (16-10-2012) திருவாரூரில் தலையில் கருப்பு முண்டாசு கட்டிக்கொண்டு அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காலை 10.30 மணியளவில் பழைய ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மமக தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில், பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி கண்டன உரை நிகழ்த்தினார். மாநில துணை பொதுச் செயலாளர் சரவண பாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் ஆயிரக்கணக்கில் திரளாக பங்கேற்றனர்.
 
செவ்வாய், 16 அக்டோபர், 2012

சென்னையில் பாப்புலர் ப்ரண்ட் சார்பாக நடந்த உயர் கல்விக்கான கடன் உதவி வழங்கும் விழா

Educational loan scholarship Chennai

                                                12ஆம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில் சேர்ந்துள்ள ஏழை மாணவ மாணவியர்களுக்கு தங்களின் கல்லூரி கட்டணத்தை கட்ட உதவும் வகையில் தேசிய அளவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வட்டியில்லா கடன் வழங்கி வருகிறது. சென்ற ஆண்டு தேசிய அளவில் 24 இலட்ச ரூபாய்க்கான கடன் உதவி வழங்கப்பட்டது.

இவ்வாண்டும் பாப்புலர் ப்ரண்ட் செயல்படும் அனைத்து மாநிலங்களிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த கல்வி உதவியினை பெற மாணவ மாணவியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 

பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு தகுதியான மாணவ மாணவியர்களுக்கு கல்வி கடனுதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் 54 மாணவ மாணவியர்கள் கல்வி கடனுதவி வழங்க தேர்வு செய்யப்பட்டார்கள்.

தேர்வு செய்யப்பட மாணவ மாணவியர்களுக்கான கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி தமிழகத்தில் சென்னை , மதுரை மற்றும் கோவை ஆகிய மூன்று இடங்களில் 14.10.2012 அன்று நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில பொதுசெயலாளர் ஏ.காலித் அவர்கள் தலைமை தாங்கி மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவி தொகையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Educational loan scholarship Chennai