திங்கள், 30 டிசம்பர், 2013

தினமும் தேன் பருகினால் இளமையாக இருக்கலாம...!

தேன் ஓர் இனிய உணவுப்பொருள் மருத்துவ குணமும் கொண்டது, பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகிறது. தினமும் தேன் பருகினால் என்றும் இளைமையாக இருக்கலாம் என்பது அறிவில் ரீதியான உண்மை என்று பயன்படுத்திய பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேனில் அடங்கியுள்ள பொருட்கள்:

1. தண்ணீர் 17 முதல் 70 சதவீதம்.

2. பழச்சர்க்கரை 40 முதல் 80 சதவீதம்.

3. திராட்சை சர்க்கரை 10 முதல் 30 சதவீதம்.

4. கரும்பு சர்க்கரை 1 முதல் 90 சதவீதம்.

மேலும் சிலிக்கா, கிருப்பு, தாமிரம், மாங்கனீஸ், கால்சியம், குளோரின், பொட்டாசியம், கந்தகம், பாஸ்பரஸ், அலுமினியம், மக்னீசியம் உள்ளிட்ட பொருட்களும் அடங்கியுள்ளது.

தேன் சாப்பிடுவதால் உள்ள பயன்கள்:

1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதியாகும்.

2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும்.

3. தேனும் வெங்காயச்சாறும் கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசமடையும்.

4. தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா உபாதையில் இருந்து தப்பலாம்.

5. உடம்பில் இரத்த குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும் பாலும் கலந்து சாப்பிட்டால் சோகை நோய் தீரும்.

6. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து சாப்பிட்டால் ஆறாத புண் ஆறிவிடும்.

7.வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்கு தொப்பு ளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

8. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலும்பிச்சை பழம் சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் போல் சுறுசுறுப்பாக இருக்கும் நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடி விடும்.

9. அதிகாலையிலும், படுக்க செல்வதற்கு முன்பும் தேன் பருகினால் உடலுக்கு நல்லது.

10. அல்சர் நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு தேக்கரண்டி தேன் சாப்பாட்டிற்கு முன் சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும் உள்ளிட்ட ஏராளமான பலன்கள் தேனில் உள்ளது.

இந்திய விமான நிலையங்களில் அதிக கட்டணம்: ஐஏடிஏ      இந்திய விமான நிலையங்களில் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணமே இந்தியாவில் அத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக உள்ளது என சர்வதேச விமான போக்குவரத்து ஆணையமான ஐஏடிஏ கூறியுள்ளது. 

      மேலும் இந்திய விமான நிலையங்களின் மோசமான கட்டமைப்பு வசதியும் வளர்ச்சியை பாதிப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. விமான எரிபொருளுக்கு அதிக வரி விதிக்கப்படுவதும் விமானத் துறை வளர்ச்சியை பாதிப்பதாக ஐஏடிஏ கூறியுள்ளது.


http://bit.ly/KghCDV


PuthiyaThalaimurai TV | http://www.puthiyathalaimurai.tv/

ஜெர்மன்......!!!!!!! உலக சாதனை...!


சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்து ஜெர்மன் உலக சாதனை படைத்துள்ளது.

இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு சமம் ஆகும்.

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவிற்கு பின் ஜெர்மன் தனது அணு மின் திட்டத்தை கைவிட்டு, வேறொரு எரிசக்திக்கு மாறி உள்ளது.

இதில் சூரிய ஒளி மின் சக்தி தொழிலில் ஜெர்மன் முன்னணி வகிப்பதால் இதன் மூலம் மின் தேவையினை பூர்த்தி செய்கிறது.

இதன் ஒரு பகுதியான சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்த துங்கியுள்ளது.

இந்தாண்டு ஜெர்மன் முதல்கட்டமாக 7.5 ஜிகாவாட் மின்
உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தினை நிறுவியது.

இதில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படவே ஒரு மணிக்கு 22 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்
உற்பத்திக்கு சமம் என கணக்‌கிடப்பட்டுள்ளது. (ஒரு ஜிகாவாட் என்பது 1000 மெகாவாட் ஆகும்) இதன் மூலம் தற்போது நாட்டின் 50 சதவீத மின்தேவையினை சூரிய ஒளி சக்தி மூலம் பூர்த்தி செய்து ஜெர்மன் ‌ சாதனை படைத்துள்ளது.

நம் இந்தியா....... ?


நம் தமிழ் நாடு.....???? ஒட்டு மொத தமிழகத்துக்கு 12-13 ஆயிரம் மெஹா வாட் மின்சாரம் மட்டுமே...தேவை.... 22 ஜிஹா வாட் மின்சாரம் இருந்தால் இந்தியாவுக்கு தடை இல்லா மின்சாரம் வழங்க முடியும்....????? மிக குறைந்த செலவிலும்....பாதுகாப்பாகவும்....???

தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது : ஜவாஹிருல்லாஹ் பேட்டி !
வரும் மக்களவை தேர்தலில், தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாது என 'மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்' ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் சங்கரன்பந்தலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

வரும் மக்களவைத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் இடம்பெறுவது என்பது குறித்து ஜனவரி 10 ந்தேதி சென்னையில் நடைபெற உள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும்.

2014 தேர்தலில் மோடி அலை வீசுகிறது என்பது ஒரு மாயை.

தமிழகத்தை பொருத்தவரை கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

அதே போன்ற நிலைதான் வரும் 2014 தேர்தலில் ஏற்படும், தமிழக மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.

பேட்டியின்போது கட்சியின் மாநில பொதுச் செயலர் தமீமுல் அன்சாரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

தி.மு.க. கூட்டணியில் நீடிப்பது ஏன்? காதர் மொய்தீன் விளக்கம்.


திருச்சி: பாரம்பாரிய பண்பாட்டினையும், திராவிட நெறிமுறைகளையும் பின்பற்றி வருவதே தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருப்பதற்கு காரணம் என்று இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் காதர் மொய்தீன் விளக்கம் அளித்தார்.

திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாடு  நேற்று மாலை நடைபெற்றது. கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் காதர் மொய்தீன் தலைமையில் நடந்த மாநாட்டில் இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவரும் மத்திய வெளிவிவகாரத்துறை இணை அமைச்சருமான அகமது சாஹிப், காயிதே மில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரகுமான் எம்.பி, கேரள முன்னாள் கல்வி அமைச்சர் அப்துல் பாசித் ஆகியோர் கலந்து கொண்டு  சிறப்புரை ஆற்றினர்.

தொடர்ந்து மாநாட்டில், மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையில் வலுவான கூட்டணி அமைய வேண்டும். ஜனநாயக, சமய சார்பற்ற, சமூக நீதியை நிலை நிறுத்தும் திராவிட நெறியின் பாரம்பரியத்தை அரசியல் கட்சிகள் தொடர வேண்டும்.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அரசியல் சாசன அடிப்படை உரிமைகளுக்கும், மதச் சுதந்திரத்துக்கும் எதிராக இருக்கும் பிரிவு 44ஐ முற்றிலுமாக நீக்க வேண்டும். நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின்படி, சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 15 சதவிகிதமும், முஸ்லீம்களுக்கு 10 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்ததைப் போல, தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ள முஸ்லீம்களுக்கு  இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும். முஸ்லீம்களாக மதம் மாறியவர்களுக்கும் பிற்பட்ட வகுப்பினர் என்றே சான்று வழங்க வேண்டும். நாடு முழுவதும் இஸ்லாமிய வங்கி முறையை அமல்படுத்த வேண்டும். பள்ளிவாசல், கோவில், தேவாலயங்களில் நடைபெறும் திருமணங்கள்  தொடர்பாக அந்தந்த நிர்வாகங்கள் அளிக்கும் சான்றிதழ்களை திருமணப் பதிவு ஆதாரமாக ஏற்று பாஸ்போர்ட் வழங்க வேண்டும்.

இயற்கைக்கு மாறான ஒரு பால் உறவுக்கு அங்கீகாரம் கொடுக்கும் எந்த முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபடக் கூடாது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுவிக்க வேண்டும். ஏழை, எளிய முஸ்லீம் மாணவர்களுக்கு துரிதமாக கல்விக் கடன் கிடைக்கச் செய்வதுடன் அதற்கான வட்டியையும் அரசே ஏற்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய அகமது, முஸ்லீம் லீக் கட்சி 1952ஆம் ஆண்டு  முதல்  தற்போதுவரை நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து வருகிறது. அதற்கு காரணம் நம் கட்சி சமுதாயத்திற்காக தொடர்ந்து பணியாற்றி வருவதால் கிடைத்த அங்கீகாரம் இது. நாம் ஒருபோதும் மதவாத,பாசிஸ சக்திகளூடன் கைகோர்க்க மாட்டோம். மதசார்பற்ற சமூக நீதிக்காக பாடுபடும் ஜனநாயக சக்திகளுடன்  மட்டுமே கூட்டணி அமைப்போம். காயிதே மில்லத்தை சென்னை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து, கவர்னர் பதவி கொடுப்பதாக பேரம்பேசி முஸ்லீம் லீக்கை கலைத்துவிடும்படி மவுண்ட் பேட்டன் கூறினார். அதற்கு காயிதே மில்லத் மறுத்தார்.

அதே கொள்கை பிடிப்புடன் இன்னமும் தமிழகத்தில் முஸ்லீம் லீக் இருந்து வருவது மகிழ்ச்சி. அண்ணா, அவருக்குப் பின் கருணாநிதி என தோழமை நீடிக்கிறது. இந்த கட்சிக்களுடன் உள்ள  தோழமை பாரம்பரியமானது. உணர்வு பூர்வமானது. அப்படிப்பட்ட கூட்டணி வெற்றி பெற உண்மையாக உழைப்போம்" என்றார்.

கடைசியாக பேசிய பேராசிரியர் காதர் மொய்தீன், "தி.மு.க கூட்டணியில் தொடர்ந்து இருப்பதற்கு காரணம் தி.மு.க பாரம்பாரிய பண்பாட்டினையும், திராவிட நெறிமுறைகளையும் பின்பற்றி வருவதால் இந்திய முஸ்லீம் லீக் தொடர்ந்து தி.மு.க.வுடன் உள்ளது. தமிழகத்தில் 58 முஸ்லீம் அமைப்புகள் உள்ளதில் முஸ்லீம்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் இந்திய முஸ்லீம் லீக் இயக்கம் தான்" என்றார்.

மாநாடு முடிப்பதற்கு இரவு 10.45 மணி ஆனதால் காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.  இதனால் அங்கு பரபரப்பு  ஏற்பட்டது.


சி.ஆனந்தகுமார்
சவுதி, ஆரம்கோ எண்ணெய் மேடை கடலில் மூழ்கியதில் 3 பேர் பலி.(aramco)

                சவுதி அரசுக்கு சொந்தமான ஆரம்கோ என்ற எண்ணெய் நிறுவனத்தின் பராமரிப்பின் கீழ் பல எண்ணெய் மேடைகள் அந்நாட்டின் கடற்பரப்பில் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றான சபானியா சவுதியின் நிலப்பரப்பில் இருந்து 50 கி.மீ தொலைவில் 15 கி.மீ ஆழத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இங்கிருந்து தினமும்1.2 மில்லியன் பேரல்கள் எண்ணெய் எடுக்கப்படுகின்றது. உலகளவில் பெரிய எண்ணெய் மேடையாகக் கருதப்படும் இது சவுதி அரேபியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள தஹ்ரான் நகரிலிருந்து 265 கி.மீ வடக்கே உள்ளது.

உற்பத்தி மற்றும் கையிருப்பு அளவில் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களின் அடிப்படைத்தளமாக தஹ்ரான் விளங்கி வருகின்றது. சபானியாவில் உள்ள எண்ணெய் மேடையில் நேற்று பராமரிப்புப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதற்காக நிறுவப்பட்ட பராமரிப்பு மேடையில் இருந்தவண்ணம் பல ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த மேடை கடலில் மூழ்கியது. அந்த சமயத்தில் 19 கடல்மைல் தொலைவில் உள்ள ரஸ் அல் கப்ஜி துறைமுகத்தின் அருகே கடலோரப் பாதுகாப்புப் பிரிவினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விபத்து குறித்த தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த அவர்கள் கடலில் விழுந்தவர்களில் 24 பேரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தனர்.

அவர்களில் பலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த ஊழியர்களில் இன்னும் இரண்டு இந்தியர்களையும், ஒரு வங்கதேசத்தவரையும் காணவில்லை என தேடும்பணி தொடர்ந்து நடைபெற்றதான் இறுதியில், காணமல் போன மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

http://zeenews.india.com/news/nation/saudi-oil-rig-sinks-in-persian-gulf-2-indians-among-dead_900063.html


நாசாவிற்குச் செல்லும் தமிழக கிராமத்துமாணவர் சலீம்கான்.

மாறிவரும் பருவநிலை குறித்து இளம் விஞ்ஞானிகளின் கருத்துகளைக் கேட்பதற்கான கருத்தரங்கம் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தமிழ்நாட்டின் கம்பம் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்குக் கிடைத்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் சலீம்கான்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாறுபாடு குறித்து ஆராய்ச்சி செய்துவரும் மாணவரான இவர், உயர்ந்து வரும் புவியின் வெப்பத்தால், மாறிவரும் பருவநிலை மாறுபாடு குறித்தும், இதனால் தமிழகத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்.
கடலூர் மாவட்டத்தில், வெள்ளாற்றிற்கும் கொள்ளிடத்திற்கும் இடையேயான கடற்கரைப் பகுதியில் இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார்.
2100 ஆம் ஆண்டிற்குள் 50 செ.மீ அளவிற்கு கடல் மட்டம் உயர வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் வெள்ளாற்றிற்கும் கொள்ளிடத்திற்கும் இடையேயான பகுதியில் உள்ள கிராமங்கள் கடலுக்குள் மூழ்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறுகிறார் சலீம்கான்.
இந்த ஆராய்ச்சிக்கு நடுவில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் இளம் விழிப்புணர்வாளர் விருதினை பெற்றுள்ள சலீம், வரும் 12ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஆய்வு மையத்தில் நடைபெறவுள்ள பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு தனது ஆராய்ச்சி குறித்து விளக்கமளிக்க உள்ளார்.
சர்வதேச விஞ்ஞானிகளின் கருத்தரங்கில் சலீம் உட்பட மொத்தம் 40 இளம் விஞ்ஞானிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் அவர்களின் கருத்துகளையும், ஆராய்ச்சி முடிவுகளையும் பெறும் நாசா, அவற்றை உயர்ந்து வரும் புவி வெப்பத்தை கட்டுப்படுத்தும் பணிகளில் பயன்படுத்தவுள்ளது.


மதுவுக்கு எதிரான உண்ணாவிரதம்இன்று 7ஆவது நாளாக உண்ணாவிரதம் மதுரை அரசு மருதுவானையில் காவல்துறையின் கட்டுபாட்டின் கீழ் தொடர்ந்து கொண்டு இருக்கும் சகோதரி நந்தினி. 

தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் மதுக்கடைகளை மூடுவதற்க்கான இந்த அரபோரட்டதிர்க்கு ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கி உள்ளனர். கோவை மற்றும் திருநெல்வேலி சட்டகல்லுரி மாணவர்கள் சேலம் மாவட்ட மாணவர்கள் இதற்கு ஆதரவாக மக்களிடம் கை எழுது இயக்கம் நடத்தி வருகின்றனர். அதை முதல்வருக்கும் ,அமைச்சர்களுக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க உள்ளனர்.திருநெல்வேலி சட்ட மாணவர்கள் இதற்க்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

மதுகடைகலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் துத்துக்குடி இல் மிகபெரிய பேரணி நடத்த எற்பாடு செய்துள்ளனர்.மேலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இப்போராட்டத்தை தமிழ்நாட்டில் வாழும் அவர்கள் உறவினர்கள் அனைவர்களுக்கும் கொண்டு சேர்த்து வருகின்றனர். தொலைபெசிமூலம் மனபூர்வமாக வாழ்த்தி வருகின்றனர் .கர்நாடக தமிழர்கள் அனைவருக்கும் நம் போராடும் செய்தி சென்று விட்டது .அவர்கல் அனைவரும் நம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிதுள்ளனர்.மதுரை வழக்கரின்கர்கள் சங்கத்தின் சார்பில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.இளைன்கர்கள் பலர் குறுஞ்செய்தி(message ) மூலமாகவும் facebook மூலமாகவும் செய்திகளை பரப்பி வருகின்றனர் .இவ்வாறு நமது போராட்டங்களும் சூடுபிடிது வருகின்றது. முதலமைச்சர் தனி பிரிவின் சுகாதாரத்துறை மூலம் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மருதுவர்கள்ளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது எப்படியாவது எங்கள் உண்ணாவிரதத்தை முடிக்க வைக்க பல்வேறு முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன .

ஆனாலும் நாங்கள் போரட்டத்தை தொடர்கிறோம். இனியும் அரசாங்கம் இதற்க்கு முடிவு கட்டவில்லையனில் தமிழ்நாடில் மதுவுக்கு எதிரான போராட்டம் தீபிடிக்கும்.இப்போதாவது வீண் வீராப்பை விட்டுவிட்டு மதுக்கடைகளை மூடினால் ஆட்சியில் இருப்பவர்கள் சிறிதாவது தப்பிக்கலாம் .இல்லையனில் தமிழ்நாட்டு இளைன்கர்கள் துரத்தி துரத்தி அடிப்பார்கள்.நண்பர்களே ! நீங்களும் முடிந்தளவு இப்போரடதிற்கு அதரவு கொடுங்கள்.

- சகோதரி சட்டக்கல்லூரி மாணவி நந்தினி


முத்துப்பேட்டை முகைதீன்
மனிதநேய மக்கள் கட்சி
யார் இந்த மலாலா ?

மேற்கத்திய நாடுகள் தலையில் தூக்கி வைத்து படம் காட்டி வரும் முக்கிய நபர் மலாலா.

மேற்கத்திய நாடுகளின் கருத்து :

மலாலா பாகிஸ்தானை சேர்ந்தவர், பெண் கல்விக்காக குரல் கொடுத்தவர். இவரை தாலிபான்கள் சுட்டு பொசுக்கினர். இங்கிலாந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இன்றும் பெண் கல்விக்காகவும் குரல் கொடுப்பவர். தீவிரவாதத்திற்கு எதிரானவர் என்றும் மேற்கத்திய நாடுகள் இவரை பற்றி ஒரு படத்தை ஒட்டி கொண்டிருக்கிறது.

யார் இந்த மலாலா ? ஏன் அவளை மேற்கத்திய நாடுகள் தூக்கிவைத்து கொண்டாடுகின்றனர் உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை அறிய முதன் முறையாக களம் இறங்கியது பாகிஸ்தானை சேர்ந்த டான் பத்திரிக்கை.

இந்த பத்திரிக்கை மலாலா பற்றி 5 மாதங்களாக சேகரித்து வைத்திருந்த செய்தி இதோ...

இந்த பத்திரிக்கை மேற்கொண்ட ஆய்வில் மலாலாவை பற்றிய தகவல்களை அவள் சிரு வயதிலிருந்தே சிகிச்சை பெற்று வரும் மலாலாவின் மருத்துவரிடமே சேகரித்தார்கள்.

மலாலாவுக்கு காதில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதுண்டு. அதனால் அவள் டாக்டர் இம்தியாஸ் அலி கான்சேயிடம் சிகிச்சை பெற்று வந்தாள்.

தன்னிடம் காது சிகிச்சைக்காக வருபவர்களின் காது மெழுகுகளை சேகரித்து வைப்பது டாக்டரின் வழக்கம். அதை அவர் தனது ஆய்வுகளுக்கு பயன்படுத்துவார்.

டாக்டர் இம்தியாசிடம் மலாலாவை பற்றி பேசியவுடனேயே...

அவள் புஷ்து பேசும் பென்னல்ல, அவளுக்கும் சுவத் பகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அவள் போலந்து நாட்டை சார்ந்த ஒரு கிறித்தவ பெண் என்று கூறியுள்ளார்.

முதல் தகவலே தூக்கிவாரி போட்டது டான் பத்திரிக்கைக்கு...

அதன்பிறகு டான் பத்திரிக்கை இந்த தகவலை செய்தியாக வெளியிட்டது.

மலாலாவை பற்றிய செய்திகள் வெளியே வந்தவுடன் டாக்டர் இம்தியாஸ்.

மலாலாவின் தந்தைக்கு தொலைப்பேசியில் மலாலாவின் புகைப்படத்தோடு மலாலா பற்றிய செய்திகள் வருகிறதே இது என்ன கதை ? என்று கேட்டார்.

அதற்கு மலாலாவின் தந்தை அதாவது மீடியாவில் காட்டப்படும் மலாலாவின் தந்தை இவ்வாறு கூரினார்...

டாக்டர் அவர்களே எந்த தகவல்களையும் வெளியே கூறிவிடாதீர்கள். சொன்னால் என் மகளின் உயிருக்கு ஆபத்து வந்துவிடும். என் குடும்பத்தை கூட அவர்கள் அழிக்கலாம் என கதரினார். எங்களை காட்டி கொடுத்து விடாதிர்கள் என கெஞ்சி கேட்டு கொண்டார்....

ஆனால் டாக்டர் இம்தியாஸோ ஒரு நிபந்தனை வைத்தார்.

நீங்கள் இங்கே என்ன நடக்கிறது என்பதை எனக்கு கூறினால் உங்களுக்கு நான் உதவுகிறேன் என்றார்.

சரி என்று மலாலாவின் மீடியா தந்தை உண்மைகளை கொட்ட தொடங்கினார் :

மலாலாவின் உண்மையான பெயர் ஜேனி. அவள் ஹங்கேரியில் 1997 யில் பிறந்தவள்.

அவளுடைய உண்மையான பெற்றோர்கள் கிருஸ்த்துவ பிரச்சார குழுவை சார்ந்தவர்கள்.

மலாலாவை துப்பாகியால் சுட்டவன் பாகிஸ்தான் சுவத் பகுதியை சேர்ந்தவன் இல்லை. இத்தாலியை சேந்தவன் என்ற உண்மைகளை சொன்னார்.

இதனை டாக்டர் இம்தியாஸிடம் கேட்டு கொண்டிருந்த டான் பத்திரிக்கை இதனை உடனே உளவுத்துரையிடம் சொல்லியிருக்கவேண்டாமா ?

அவர்கள் இந்த போலி சம்பவங்களை வைத்து இஸ்லாத்தையும் தாலிபான்களையும் காட்டு மிராண்டிகளாக காட்டிட முயர்ச்சி செய்கிறார்களே என்று கேட்டதற்கு...

டாக்டர் இம்தியாஸ் இவ்வாறு பதில் கூரினார் :

நான் இந்த விசயங்களை பல முறை பாகிஸ்தான் உளவுதுறையினரிடம் கூறியுள்ளேன் ஆனால் அவர்கள் இதுபற்றி எதுவும் செய்யவில்லை என்றார்.


திங்கள், 11 பிப்ரவரி, 2013

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் சட்டமன்றம் பற்றிய விவாதம்


10 பிப்., 2013 அன்று வெளியிடப்பட்டது
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் சட்டமன்றம் பற்றிய விவாதத்தில் பங்கு பெற்றார் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ். 
 
சட்டமன்றம் பற்றிய விவாதம் - M.H.Jawahirullah

வியாழன், 7 பிப்ரவரி, 2013

முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் பாஜக தலைவர்!

புதன், 06 பிப்ரவரி 2013

முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் பாஜக தலைவர்!"மாலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் மற்றும் பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய பெண் சாமியார் பிரக்யா சிங்கை நான் சிறையிலோ அல்லது வெளியிலோ சந்தித்தது இல்லை" என்று அண்மையில் பிரபல இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்து இருந்தார்.
...

ஆனால் தற்போது சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மாலேகான் மற்றும் பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய பெண் சாமியார் பிரக்யா சிங்குடன் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இருப்பது போன்ற புகைப் படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளது. முழுப் பூசணிக் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் பாஜக தலைவர்!காயை சோற்றில் மறைத்த ராஜ்நாத் சிங் சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ள புகைப் படத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என தெரிய வில்லை. சமீபத்தில் பாஜகவிலுள்ள உமா பாரதி, தீவிரவாதி பிரக்யா சிங்கை நேரடியாக சிறையிலேயே சென்று சந்தித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒன்றைத் திட்டமிட்டே செய்வார்கள்; முடிந்ததும், அய்யய்யோ அப்படி நடந்துவிட்டதே! அவ்வாறு நடந்தபோது நான் கண்ணீர் விட்டு அழுதேன் என தேர்ந்த நடிகனைவிட மேலாக ஊடகத்தின் முன்னிலையில் நடிப்பார்கள்! நன்றாக பயிற்றுவிக்கப்பட்ட பதுமைகள்! இதுதாண்டா பாஜக!


 

இந்நேரம் இணையதளம் : http://www.inneram.com/

இந்நேரம் பேஸ்புக் :
http://www.facebook.com/inneram?ref=ts&fref=ts
மேலும் பார்க்க

"பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் அத்வானிக்கு எதிராக ஏன் இன்னும் அப்பீல் செய்யவில்லை? – உச்சநீதிமன்றம் கேள்வி!

 
7 Feb 2013

டெல்லி:பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியை விடுவித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஏன் இன்னும் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யவில்லை என்று சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
...

பாபர் மசூதியை இடிக்க சதி செய்ததாக பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இருந்து அத்வானியை விடுவித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக சி.பி.ஐ. கூறி இருந்தது. ஆனால் இதுவரை அப்பீல் செய்யப்படவில்லை. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது. அப்போது நீதிபதிகள், அத்வானிக்கு எதிராக அப்பீல் செய்ய காலதாமதம் செய்வது ஏன்? என்று சி.பி.ஐ.க்கு கேள்வி விடுத்தனர். மேலும் இதுதொடர்பக விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.
தூது இணையத்தளம் : http://www.thoothuonline.com/

தூது பேஸ்புக் :
http://www.facebook.com/ThoothuOnline
மேலும் பார்க்க


ஹிட்லருக்கும் மோடிக்கும் வித்தியாசமில்லை: நந்திதா தாஸ்

இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலமாக கொண்டாடப்படும் குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும், ஜெர்மன் அதிபர் ஹிட்லருக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்று நடிகை நந்திதா தாஸ் கூறியுள்ளார்.

பாலிவுட்டின் துணிச்சலான நடிகை என்று பெயரெடுத்தவர் நந்திதா தாஸ், இவர் படத்தயாரிப்பாளரும் ஆவார். தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட சினிமாக்களில் ந...
டித்துள்ளார். இவர் 2002 ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான அரசு பயங்கரவாதத்தை அடிப்படையாக வைத்து ‘பிராக்’ எனும் படம் எடுத்துள்ளார். வதோதராவில் நடைபெற்ற ஒரு கருந்தரங்குக்கு வந்த நந்திதா தாஸிடம் 2002ன் குஜராத்திற்கும் 2012ன் குஜராத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது,

"ஹிட்லரின் ஆட்சி காலத்தில் தான் ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் அமைக்கப்பட்டன. அது போல் ஜெர்மனியின் மிகச் சிறந்த மருத்துவமனைகளும் அப்போது தான் கட்டப்பட்டன. ஹிட்லர் ஒரு இசைப் பிரியராகவும், சைவ உணவு உண்பவராகவும் மது குடிக்காமலும் இருந்தார். அக்காரணங்களுக்காக ஜெர்மனியார்கள் யாரும் கூட ஹிட்லரை உயர்வாக நினைப்பதில்லை. மாறாக அவர் செய்த அநீதிகளாலேயே அவர் நினைக்கப்படுகிறார்” என்று பத்திரிகையாளர்களிடம் நந்திதா தாஸ் கூறினார்.

மேலும் பத்து வருடங்களுக்கு முன்னும் பிற மாநிலங்களை விட குஜராத் நன்றாகவே இருந்தது என்றும் வெறும் அஹமதாபத்தையும் வதோதராவையும் வைத்து ஒட்டு மொத்த குஜராத்தின் வளர்ச்சியும் எடை போடக் கூடாது என்றும் பின் தங்கிய செளராஷ்டிரா பகுதிகளயும் உள்ளடக்கி எடை போட வேண்டும் என்றும் கூறினார்.

கலவரத்தை மறக்க முடியுமா?

2002ன் கலவரத்தை மறந்து விட வேண்டும் என்று தம்மிடம் சிலர் அறிவுரை கூறியதாக சொன்ன நந்திதா தாஸ் இன்னும் சிலர் முஹம்மது கஜினியை குறித்து பேசுகின்றனர். இன்னும் சிலர் ஒரு சமூகத்தை அவுரங்கசீப்பின் ரத்தமாக நினைத்து வெறுப்பை உமிழ்கின்றனர். அப்படியிருக்கும் போது தங்கள் உடமையும் உறவுகளையும் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தை இச்சம்பவங்களை பத்து வருடங்களுக்குள் மறந்து மன்னிக்க சொல்வது சரியானது அல்ல என்றும் நந்திதா தாஸ் கூறினார்.


via Page Puthiya Thalaimurai Tamil News Channelஜெயா பிளஸ் டிவியின் கேள்விக்கணைகள் நிகழ்ச்சியில் பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கு பெற்றார். அதில் விஸ்வரூபம் விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். நாள்: 05.02.2013. 
ஜெயாபிளஸ் டிவியில் M.H.Jawahirullah

03-02-2013 தந்தி tv யில் என்ன கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்யில் M.H ஜவாஹிருல்லா MLA

En Kelvikku Enna Bathil -2013-02-03- Jawahirullah, MMK MLA, Speaks About Kamal & His Movies 

திங்கள், 4 பிப்ரவரி, 2013

காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு
 
 
 
தமிழனின் மற்றுமொரு பெருமை !

காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு
...

சேலம்:""காற்று இருந்தால்தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்,'' என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து இளைஞர் கூறுகிறார்.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, இவர், சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை கிண்டியில், மத்திய அரசுக்கு சொந்தமான காப்புரிமை நிறுவனத்தில் பதிவு செய்து, காற்றாலை செயல்படுவது குறித்து விளக்கமளித்துள்ளார். இதற்காக, இவர் காப்புரிமை பெற்றுள்ளார்.காற்று இருந்தால் தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்க முடியும் என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கிராமத்து விசைத்தறி தொழிலாளி, நம்மிடம் பெருமையுடன் கூறினார்.

இரண்டு ஆண்டாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக கூறும் அவர், மேலும் கூறியதாவது:சேலம் மாவட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, மேலும் படிக்க முடியாமல், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. வாழ்க்கையில் பெயர் சொல்லும் வகையில் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம், சிறு வயதில் இருந்தே இருந்தது.சில ஆண்டுக்கு முன், 25 மூலிகைகளை கொண்டு கூந்தல் பவுடர் தயார் செய்தேன். பின்னர், வேகத்தடையை தாண்டி வாகனங்கள் செல்லும் போது, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என கண்டுபிடித்தேன்.தற்போது காற்றாலையை, காற்று இல்லாமலே இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளேன். இரண்டு ஆண்டாக இதற்காக முயற்சி எடுத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளேன். நாகர்கோவில், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்று வீசும் காலத்தில் மட்டுமே, காற்றாலையில் இருந்து, மின்சாரம் பெற முடியும். மற்ற காலங்களில் காற்றாலையில் உள்ள இறக்கைகள் சுற்றாது. தற்போது, காற்றாலையில், மூன்று இறக்கைகள் உள்ளது.

என்னுடைய தொழில்நுட்பப்படி, காற்றாலையில் நான்கு இறக்கைகள் பொருத்த வேண்டும். மேலும், கீழும் உள்ள இரண்டு இறக்கையின் நடுவில், ஹீலியம் வாயுவை நிரப்ப வேண்டும். காற்றாலையின் இரு பக்கமும் உள்ள இரண்டு இறக்கைகளின் அளவு ஒரே சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு இறக்கையில் இருந்து, கீழுள்ள இறக்கைக்கு வாயு செலுத்தப்படும் போது, எடை தாங்காமல், கீழுள்ள இறக்கை மேல் நோக்கி தள்ளப்படும். இதனால், இறக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலத்தொடங்கும். ஹீலியம் வாயு, தானியங்கி சென்சார் மூலம், இரண்டு இறக்கைகளிலும் மாறி மாறி செலுத்தப்படுவதால், இறக்கைகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இதனால் காற்று இல்லாமலும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.ஹீலியம் வாயு ஆபத்து இல்லாதது. நான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில், வரை படங்களின் மூலமும், எழுதியும் காண்பித்தேன். என் கண்டுபிடிப்புக்கு, மத்திய அரசு காப்புரிமை கொடுத்துள்ளது.ஓராண்டுக்குள், நான் அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்து காட்டவேண்டும். நான் விசைத்தறி தொழிலாளியாக இருப்பதால், போதிய பணம் என்னிடம் இல்லை. காற்றாலை அதிபர்கள் என்னை நாடினால், காற்றாலையை காற்று இல்லாமல் இயக்கும் முறையை விளக்கிக் காட்டுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.


நன்றி : குணசீலன் வேலன்


இன்று உலக புற்றுநோய் தினம்: Control-Alt-Delete அழுத்தி அழிப்போம் வாருங்கள்! 

ஒவ்வொரு வருடமும் இன்றைய தினம் (பிப்ரவரி மாதம் 4ம் திகதி) உலக புற்றுநோய் தினமாக அனுஷ்டிக்கப் படுகிறது.

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வரும் முன் காப்போம் என்று நம்மை காப்பாற்றிக் கொள்ளும் ஒரு முயற்சியாகவே இந்த தினத்தை நாம் பார்க்கலாம். கிட்டத்தட்ட்ட மூன்றில் ஒரு பங்கு புற்று நோய்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அவற்றை பற்றிய போதுமான விழிப்புணர்வு இருந்தால் என்கிறது ஒரு ஆய்வறிக்கை.

புற்றுநோய் என்பது எம்மால் தினந்தோறும் பேசப்படும் ஒரு விடயமல்ல என்ற போதும், எமக்கு நெருங்கியவர்கள் யாரையாவது நிச்சயம் இதனால்

இழந்திருப்போம்
.

கமல்ஹாசன் புற்றுநோயால் உயிரிழந்த திரைப்படத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்டிருக்கிறோம். கடந்த வருடம் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங் புற்றுநோய்க்கு எதிராக போராடிய போது, பேஸ்புக்கில் நூற்றுக்கான செய்திகள் பரிமாறிக்கொண்டோம். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் புற்றுநோயால் உயிரிழந்தார் என கேள்விப்பட்ட போது பல்லாயிரக்கணக்கான அஞ்சலிகளை பகிர்ந்து கொண்டோம். அவ்வளவு தானா, அவற்றுடன் புற்றுநோயை மறந்துவிடப்போகிறோமா
?

புற்றுநோய் என்பது வலியை விட கொடியது, தலைமுடி உதிரும், உடல் பலவீனமடையும், உடலில் புள்ளிகள் உண்டாகும் என பலரும் நினைக்கலாம். உண்மையில் அவர்கள் பயப்படுவதும், கோபப்படுவதும், இந்த பிரச்சினைகளுக்காகவா அல்லது புற்றுநோய் விரைவில் அவர்களின் உயிரை பறிக்க போகிறது என்பதற்காகவா
?

இங்கு கவனிக்கப்பட வேண்டியது புற்றுநோயுடன் வாழ்பவருக்காக பரிதாப்படுவது அல்ல. அவர்களுக்கு உங்கள் பரிதாபம் தேவையில்லை. மாறாக உங்கள் அன்பும், புரிந்துணர்வும், ஆதரவும் தேவைப்படுகிறது. அவர்கள் சாதாரண மனிதர்கள் போன்று வாழ ஆசைப்படுகிறார்கள். அவர்கள் நோயாளிகளாக முழுவதும் மாறிவிடப்போவதில்லை
.

அவர்கள் குறுகிய காலத்தில் உயிரிழக்கும் நிலைக்கு சென்றாலும் அதற்குள் அவர்கள் வாழும் வாழ்க்கை அவர்களை முழுமையானதாக திருப்திப்படுத்தியிருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்
.

நீங்கள் அப்படிப்பட்ட ஒருவர் மீது காட்ட நினைக்கும் பரிதாபமும், அனுதாபமும் அவர்களை மேலும் பயத்திற்குள் தள்ளிவிடுகிறது. மாறாக, அவர்களை உற்சாக படுத்துங்கள். அவர்களது பயத்தை தோற்கடியுங்கள். உங்களை போன்ற சக மனிதராக பாருங்கள். உலகின் புற்றுநோய் 47% வீதம் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏற்படுகிறது. 55% வீதமானோர் அங்கு தான் புற்றுநோயால் உயிரிழந்து போகின்றனர்
.

ஆனால் வளரும் நாடுகள் அலட்சியமாக இருந்தால், 2030 இல் புற்றுநோய் 81% வீதம் அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டை தாக்க கூடிய அபாயம் இருக்கிறது. 2030 இல் வருடத்திற்கு 21.4 மில்லியன் புற்றுநோயாளிகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இணங்காணப்படலாம் என எதிர்வு கூறியுள்ளது சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்
.

விமானப்பயணத்தில் உங்களுக்கு விமான பணிப்பெண்கள் ஒரு விடயம் சொல்வார்கள். 'மற்றவர்களுக்கு உதவும் முன்னர் நீங்கள் ஒட்சிசன் முகமூடிகளை போட்டுக்கொள்ளுங்கள்
'.

இது தான் புற்றுநோய் தொடர்பிலும் சொல்லக்கூடியது. அல்ககோல், புகைப்பிடிக்கும் பழக்கம், சுகாதாரமின்மை, உடற்பருமன் அதிகரித்தல், உடற்பயிற்சி இன்மை இப்படி எதுவுமே புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது
.

ஒவ்வொரு வருடமும் உலகில் 22 % வீதமான புற்றுநோய் தாக்கம் புகையிலை மூலமே வருகிறது என்கிறது ஒரு ஆய்வுத்தகவல். புகையிலை உபயோகிப்பதால் நுரையீரல் உணவுக்குழாய், குரல்வளை, வாய், தொண்டை, சிறுநீரகம் சிறுநீர் பை, கணையம் மற்றும் வயிறு மற்றும் வயிறு தொடர்பான இடங்கள், கருப்பை வாய் புற்று என்று இத்தனை வகை புற்றுநோய் உருவாகிறது. புகைபிடிக்கும் பழக்கம் என்பது, அவர்களுக்கு மட்டுமல்லாமல் அருகில் இருப்போருக்கும் பாதிப்பை தருகிறது
.

இன்றைய புற்றுநோய் தினத்தில் பகிர்ந்து கொள்ளக்கூடிய நான்கு நம்பிக்கைகளும், உண்மைகளும் இவை
.

1.
நம்பிகை : புற்றுநோய் என்பது சுகாதாரத்துடன் மட்டும் தொடர்புடை விடயம் என நினைக்கிறோம்
.
ஆனால் உண்மை : சுகாதாரத்துடன் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின், ஒரு நாட்டின் அபிவிருத்தியில், மனித உரிமைகளில் என அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது
.

2.
நம்பிக்கை : புற்றுநோய் என்பது நன்கு ஆரோக்கியமான, முதிர்ந்த, அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மாத்திரமே ஏற்படுகிறது என நினைக்கிறோம்
.
ஆனால் உண்மை : புற்றுநோய் உலக பிரச்சினை. அனைத்து வயதினரையும் அனைத்து, சமூக பிரிவுகளையும், அனைத்து நாடுகளையும் தாக்குகிறது
.

3.
நம்பிக்கை : புற்றுநோய் என்பது ஒரு மரண தண்டனை என நினைக்கிறோம்
.
ஆனால் உண்மை : புற்றுநோயை முடிந்தளவு குணப்படுத்த முடியும். மூன்றாம் கட்டத்தை கடந்த பின்னர் கூட குணப்படுத்த முடியும் என்கிறது நவீன மருத்துவ சிகிச்சைகள்
.

4.
நம்பிக்கை : புற்றுநோய் என்பது என் விதி என நினைக்கிறோம்
.
ஆனால் உண்மை : நீங்கள் போதுமான அறிவையும், விழிப்புணர்வையும் வளர்த்துக்கொண்டால் உலகில் புற்றுநோயை 30% வீதம் தடுத்துவிட முடியும்
.

எனவே இவற்றை கருத்தில் கொள்ளுங்கள். புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால் எந்தவித அச்சமுமின்றி இன்றே அருகில் உள்ள மருத்துவரை நாடி தெளிவடைந்து கொள்ளுங்கள். புற்றுநோயை தடுப்பதற்கு அத்தியாவசிய மருத்துவ சிகிச்சையும், உங்களை சுற்றியுள்ள சுற்றத்தாரின் ஆதரவும் நிச்சயம் தேவை.

கட்டுரையாளர் : Rahul Verma (co-founder of Uday Foundation, a non-profit working on health and dignity)
நன்றி (தகவல் மூலம்) : TOI
மொழிபெயர்ப்பு : ஸாரா
- 4TamilMedia செய்திகள்