திங்கள், 30 டிசம்பர், 2013

தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது : ஜவாஹிருல்லாஹ் பேட்டி !
வரும் மக்களவை தேர்தலில், தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாது என 'மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்' ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் சங்கரன்பந்தலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

வரும் மக்களவைத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் இடம்பெறுவது என்பது குறித்து ஜனவரி 10 ந்தேதி சென்னையில் நடைபெற உள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும்.

2014 தேர்தலில் மோடி அலை வீசுகிறது என்பது ஒரு மாயை.

தமிழகத்தை பொருத்தவரை கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

அதே போன்ற நிலைதான் வரும் 2014 தேர்தலில் ஏற்படும், தமிழக மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.

பேட்டியின்போது கட்சியின் மாநில பொதுச் செயலர் தமீமுல் அன்சாரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.